Pages

Saturday, December 29, 2012

வெட்கப்படுவோம்.

இந்திய நாடே இன்று சோகத்தில் அமிழ்ந்து இருக்கிறது.

புண்ணிய பூமியாம் இப்பாரதத்தில் ஒரு இளம் பெண்ணுக்கு இந்த முடிவா ??

தலை குனிவோம்.

வெட்கப்படுவோம். 
நம்மில் ஒரு பெண்ணைக் காக்க நம்மால் முடியவில்லை.

Tuesday, December 11, 2012

பாரதியே !! நீ அதிருஷ்டக்காரன்



( பாடல்களின் நடுவே சில விளம்பரங்கள் வருவதை தவிர்க்க இயலவில்லை . பொருத்தருள்க.)


பாரதியே !!  நீ அதிருஷ்டக்காரன் தான்.

நீ இன்று இல்லை.

இருந்திருந்தால் ?

இன்னொரு முறை

இந்தியாவை வெளிநாட்டு வணிகரிடமிருந்து மீட்க

சுதந்திரக் கனல் வீசும் அத்தனை பாடலையும்

இன்னொரு முறை பாடி,

கடைசியில் அந்த மத யானையின்

காலடியில் உயிரை விட நேரிடும்.

Monday, December 10, 2012

விஷ்ணுபுரம்

 திருமதி சுசீலா அவர்களின் வலைப்பதிவில் கண்ட அழைப்பும் 
விஷ்ணுபுரம் விருது பற்றிய தகவலும் 

விஷ்ணுபுரம் விருது விழா 2012

தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்'.ஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தாலும்,அவரது இலக்கிய ஆளுமையின் பால் விளைந்திருக்கும் ஈர்ப்புக் காரணமாகவும் பலப் பல ஊர்களிலும் நாடுகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த மனம் கொண்ட நண்பர்களின் குழு ஒருங்கிணைந்து ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது. இலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நிகழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்வதோடு, பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறப்பிப்பதையும்,ஒவ்வொரு ஆண்டும் ஜெயமோகன் அவர்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு ’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிப்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் குறிப்பான இலக்குகள். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு இவ் விருது முதன் முறையாக 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’கரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கு வழங்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 22-ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற இருக்கிறது.

விழாவில் நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குனர் சுகா, ராஜகோபாலன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தேவதேவனை வாழ்த்த இருக்கிறார்கள்.



விஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் தேவதேவனை வாழ்த்துவதோடு கலை,இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்கவிருக்கும் இவ் விழாவுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.

பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்,முகநூலிலும் வெளியிடக் கோருகிறேன்.

Friday, November 23, 2012

சந்தியில்......!!!!



    நீங்கள் சிரியுங்கள்.
    உங்களோடு சிரிக்க
    உலகத்தில் ஒரு நூறு பேர் இருப்பர்.

    ஒரு தடவை அழுது பாருங்கள்.
    ஒருவனுமே
   அடுத்த முறை
    அணுகமாட்டான்.

    தோழமையுடனும் ஏழைமை பேசேல்

    ஏழைமை என்பது பொருள் இல்லாமை மட்டுமா ?

    பொருள் குவித்திருப்பான் ஒருவன்.
    பாய்க்கு பதிலாக அவனிடம் பஞ்சு மெத்தைகள் ஏராளம்.
    மெத்தென படுத்தாலும்
    நித்தமுமே தூக்கமில்லை.,
    நிம்மதி இல்லை.

   நட்புகள் எனக்கு ஆழி
அலைகள் போல என‌
  ஆரவாரித்தான் அடுத்தவன்., 
 
   பொருள் இழந்தான் ஒரு நாள்.
   புன்னகையும் இழந்தான்.
   இருளோ இது என மருண்டான்.
   இனிய நண்பர்களை அழைத்தான்.
   இருக்குமிடம் தெரியவில்லை.

  அருள் இருப்பதாகச் சொல்லி அடுத்தவன்
  அனைவரையும் கவர்ந்தான்.
  அவனியில் உள்ள சுகம்
  அனைத்தையுமே பெற்றான்.

   அகலக்கால் வைத்தான்.
   அடுத்த படியிலே
   தடுக்கி விழுந்தான். 

    அறிந்தவனோ ...

   இருப்பதே இன்பமென
   இல்லாதது வேண்டேன் என
   இல்லத்து அரசியுடன்
    இருப்பதை நுகர்ந்தான்.
    இனிமையைக் கண்டான்.

    உலகத்து நியதி இது.
    உண்மையும் இதுவே ஆம்.

    சற்றே
    சிரிக்க,
    சிந்திக்கவும் செய்ய,
    சந்தியில் நடந்த ஒரு காட்சி இதோ.
   
 
   

Wednesday, November 21, 2012

யார் திருடர்கள் ?

    யார் திருடர்கள் ?

    வலைச்சர வாயில் வழியே
    வீதி வழி சென்றவனை
    வழி மறித்தது

  மஞ்சள் நகரின்
    மாலை மயக்கத்திலே
    மயங்கி "

     உள்ளே சென்றால்.....................;
  
     மருண்டேன்.  திகைத்தேன்  திடுக்கிட்டேன்.

    ஒரு அறிவிப்பு பலகை.   
  (  காண இதனை கிளிக்கிடுங்கள்.    )

//   வங்கிகளும் ஏடீஎம்களும்
 நிறைந்திருந்த சாலையில்
 "திருடர்கள் ஜாக்கிறதை"//


   திருடர்கள் எங்கு தான் இல்லை ?

     ஆடித் தள்ளுபடி என
   ஆசை பல காட்டி
     ஏமாந்தவர் தலையிலே
    எதைஎதையெல்லாமோ கட்டும்
    நிறுவனங்கள் !!

 
    இல்லாத வியாதிக்கு
   ஈரேழு சோதனைகள்
    இரவொன்று பகலொன்று என
    இருபத்தைந்து  மருந்துகள்.
    மருந்திலே கலப்படம் செய்யும்
    மனச்சாட்சியிலா வியாபாரிகள்.

     மருண்டவனை
     மயானத்தை நினைக்கவைக்கும்
     மருத்துவர்கள் !!

      வைத்தியன் பின்னே வரும்
      வைதீகன் கூத்துக்கள்.
    
      
      வாய்தா கேட்பது தவிர
      வேறெதுவும் தெரியாத‌
      வக்கீல்கள்.

      வானத்து கோள்களையும்
      பூமிக்கு இழுத்து வந்து
      வையத்தில் உள்ளோரை
      பயமுறுத்தும் சோதிடர்கள்.

             
      வாடகைக்கு இருப்பதையே
      விற்பனை செய்துவிடும்
      வாய்ச்சொல் வீரர்கள்.
       தரகர்கள் !!

      இவர்கள் எல்லாம் யார் ?
      இவர்களும் ........   ?

      இல்லை , இல்லை...!  

    உள்ளதைத் திருடுபவர் ஒரு பக்கம்.
    உள்ளத்தைத் திருடுபவர் இன்னொரு பக்கம்.
    உலகமே திருடுபவரின் கூடாரம்.

     
      இன்னொரு கோணத்தில் பார்த்தால்,
    
      அம்பது வருசம்  முன்னே
       அம்மா சொல் கேட்காமல்
     
      இவள் இல்லேல்
      இனி நான் இல்லை என
      இன்ச் இன்சாய் நம்ப வைத்த என்
      இல்லத்தரசியுமே
      திருடிதான்.

      அழகு தமிழ்ச் சொற்கள் கூட்டி
       அமுதான  கவிதை ஈந்து,  எமை
       சிந்தனையில் சிறைப்படுத்தி
       விந்தைகள் பலசெய்யும்
       வலை வித்தகருமே எம்
       உள்ளங்கவர்
       திருடர்கள் தானோ !!!

      யானறியேன் பராபரமே !!''

     

    
    
    
   
      
    
    

   

    

            .
    
 

Sunday, November 11, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்.

Deepavali Greetings
Add caption
Deepavali Kolam
greetings from the bond girl pictures

தமிழ் வலை உலக அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் 
    தமிழுக்கு புகழ் சேர்க்கும் வகையிலே எழுதும் அனைவருக்கும்
    நெஞ்சுக்கினிய சுற்றத்திற்கும்  
    எங்களது இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். 

     கவி நயா , லலிதா மிட்டல், கவிஞர் தங்கமணி அவர்கள், 
    Thenammai Lakshmanan, Geetha Sambasivam                                             deepavali pictures
     முத்துலக்ஷ்மி, இராமலக்குமி, ஹேமா, மஞ்சு பாஷிணி, 
      மாதங்கி,   வீணை காயத்ரி, ரஞ்சனி,  வலைச்சர ஆசிரியர் சீனா, 
      சசிகலா, கோவை சரளா, புலவர் இராமானுசம், 
      திண்டுக்கல் , பால கணேஷ், மோஹன் , வெங்கட நாகராஜ்,
      கோவை2தில்லி,  இராமமூர்த்தி, ரிஷபன், ஜெயமோஹன், 
      லக்ஷ்மி, கோலங்கள் போடும் பதிவர் வாணி முத்துகிருஷ்ணன்,
      ஜீவி, ஜீவா, dondu sir, idli vadai sir, amaidhichaaral sir, dindugal dhanabalan, 
      குமரன், கே.ஆர்.எஸ் என்னும் கண்ணபிரான், வாத்தியார்,
      தக்குடு, ஜீவா, ரமனேஷ்,  மதுரையம்பதி வலைப்பதிவாளர்,
      அப்பாதுரை, Raja Rajeswari, Vasudevan tirumurthy, meenakshi, vai.gopalakrishnan,gnb sir,
      parvathy ramachandran, venkatakrishnan, sankara narayanan, umesh sir, sudha , 
      shylaja, sivakumaran,raji, mahendran, RAMANI, GANAPATHI, 
      thamarai madurai, chandra vamsam 

       இதில் நான் குறிப்பிட மறந்துபோன எனது இனிய நண்பர் யாவருக்கும்
       மறுமுறையும் வாழ்த்துக்கள். 

       

       
    
    Courtesy: Kolam drawing : Smt.Vani Muthukrishnan.

Tuesday, October 02, 2012

நீ சிரிக்காதே.



நீ சிரிக்காதே. 

உன் நினைவைப் போற்றும் வகையில் பாரதமெங்கும்  இன்று 
ஏன் உலகெங்கும் உன் படத்திற்கும் உருவச் சிலைக்கும் மலர் அணிவிக்கிறோம்.

இனிப்பு தருகிறோம் . இதமான வார்த்தைகள் பேசுகிறோம்.  பூரித்து போய் பாரிலே நீ எங்கள் பாரத பூமியிலே ஒரு தெய்வமாய் பிறந்தாய் எனப்பலவிதமாய்  போற்றுகிறோம். 

தனி வாழ்விலே மட்டும் அன்றி, பொது வாழ்விலேயும் அஹிம்சை  சத்தியம் .தூய்மை, ,நேர்மை, கடமை, மதங்களுக்கு அப்பாற் பட்ட மனித நேயம் இத்தனைக்கும் நீ ஒரு உருவமாய்த் திகழ்ந்த அற்புதத்தை எண்ணி எண்ணி வியக்கிறோம். இந்த புவியிலே ஒருவர் இவர் போல இருக்க முடியுமா என வியந்து நிற்கிறது இவ்வுலகம்.

ஆம். நீ சொல்லிவந்த வார்த்தைகளை இன்று  மறுமுறையும் சொல்லுகிறோம். பலமுறை சொல்கிறோம். 

ஆனால், எல்லாவற்றையும் நாளையே மறந்து விடுவோம் என 
உனக்குத் தெரியும் . எங்களுக்கும் தெரியும் . 

அதனால் சிரிக்கிறாய். 

காந்தீயம் இறந்துவிட்டது.
 உனக்கும் தெரியும்.
 எங்களுக்கும் தெரியும். 
இது எங்கள் வேதனைக் குரல். 














காந்தீஜிக்கு ஜே.

Friday, September 28, 2012

அவன் தெரிவான்.

கண்டவர் விண்டதில்லை
.விண்டவர் கண்டத்தில்லை. ;
 விண்டவர் கண்டதையோ
 காணாதவர் கண்முன்னே
காணும்படி நிறுத்தவும் முடிவதில்லை.
 இது ஒரு ; கம்யூனிகேஷன் கேப்.

 கடவுளுக்கும் நமக்கும் அல்ல.
 கடவுளைப் புரிந்தவர்க்கும்
 நமக்கும்
கூட அல்ல.

நமக்கும்
 நமக்கும
 இடையே ஆன ஒன்றேயாம்.

அறியாததை புரியாததை ;
 இல்லை எனத்துணிந்து சொல்லும்
 ஆணவம்.  அஹங்காரம்.
 இதை விட்டொழிந்தால் தான்
அவன் தெரிவான்.

    ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டரித்து 
     தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் ? 

   இது திரு ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் வலையின் ஒரு பதிவைப் பார்த்தபின் நான் இட்ட பின்னூட்டம் .  அங்கு பின்னூட்டம் இட இயலவில்லை. ஈசனை அடைய பல மன எல்லைகளைக் கடக்க வேண்டும் போல, அந்த  வலையில் பின்னூட்டம் இடவும் பல தடைகள் இருக்கின்றன அவற்றில் சில என்னைத் தடுமாறச் செய்தன அதனால் இதை இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். 
    

Thursday, September 20, 2012

ராமலக்ஷ்மிக்கு ஜே.






உலகைக் காத்திடும் கணபதியே -- நீ
   ஓரமாய் ஒதுங்கிய தேனோ  !!

   பகலும் இரவும் பக்தர்கள் காணவே
   பந்தலில் பிரகாசமானாய்.
   அதிரும் அர்ச்சனை ஒலியில் நீயும்
   அசராமலே அமர்ந்தாய்.

    கலிகள் எங்கள் துடைத்திடவே நீ
    களிமண்ணிலிருந்து வந்தாய்.
    கழியும் எங்கள் துயரெனச் சொல்லிட‌
    களிமண்ணாகிக் கரைவாய்.  
  (  பின் 
     கடலிலே கலந்தாய்  )

இந்தப்பாட்டை  எழுத எனக்குத் தோன்றியது திருமதி ராமலக்ஷ்மி அவர்களின் வலைப்பதிவு தான். அதை எல்லோரும் அவசியம் படிக்கவேண்டும். \\

ஸோ ராமலக்ஷ்மிக்கு ஜே. 

இந்தப்பாட்டை எழுதி ஒரு நிமிடத்தில் உடனே எங்க வீட்டுக் கிழவியிடம் கான்பித்தேன். 
சக்தியில்லையேல் சிவன் இல்லை இல்லையா?
அவள் அதைப்பார்த்துவிட்டு,
கருத்து என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. 
இருந்தாலும்,
பிள்ளையார் ஏற்கனவே டயர்டா உட்கார்ந்து இருக்கார்.
அவரை நீங்கள் உங்கள் பாட்டால் 
ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்கிறாள்.

நம்மதான் துளசி கோபால் அவர்கள் அறுபது கல்யாணத்திலே மூக்கைப் பிடித்து ஒரு சாப்பாடு சாப்பிட்டு அப்பாடின்னு டயர்டா இருக்கிறோம் அப்படின்னா இங்கே பிள்ளையார் சாரும் டயர்டாத்தான் இருக்கார் 

அது சரி,  என்னோட பாட்டு எப்படி இருக்கு?


பிள்ளையாரப்பா ... நீயே வந்து 
பதில் சொல்லப்பா 


Wednesday, September 19, 2012

தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி.

இன்று பிள்ளையார் சதுர்த்தி.


தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி.

Tuesday, September 18, 2012

ஒண்ணும் இல்லீங்க.

courtesy; www.slashseconds.org



ஆமாங்க. நிசமாவே ஒண்ணும் இல்லீங்க 

Monday, September 17, 2012

அப்பாவி கணவர்கள் எல்லாரும் தெரிஞ்சுக்கணும். .

அடியே மீனாட்சி கிழவி .,,,.இங்கே வா

என்ன இப்படி கத்துரீக ..  ஊரே ஓடி வந்துடும் போல இருக்கு?

வரட்டுமே. இன்னிக்கு ஒண்ணு புதிசா தெரிஞ்சதில்ல 

என்ன அப்படி 

நீயும் சிதம்பரமும் ஒண்ணு ...

அதெப்படிங்க.  மீனாச்சி அப்படின்னு பேரை வெச்சுக்கிட்டு நானும் சிதம்பரமும் எப்படி ஒன்னாக முடியும்?
மதுரைலே அம்மன் ஆட்சி. சிதம்பரத்திலே அப்பன் ஆட்சி இல்லையா 

அது சரி.  ஆனா ...

என்ன ஆனா...  ஆவன்னா ?  இத்தனை நாள் ஆட்சிலே இருந்துட்டு இப்ப ஆட்சியை விட்டுகொடுத்துட்டு போக முடியுமா?

நான் ஒன்னை விட்டுகொடு அப்படின்னு சொல்லவே இல்லையே  

அதானே பார்த்தேன்   எங்கே எங்கே சண்டை  போடலாம்னு இருக்கீகளோ அப்படின்னு நினச்சேன் 

ஒரு வார்த்தை பேச விட மாட்டேன் என்கிற நீ எனக்கு ஆட்சியவா கொடுக்கபோறே ?

என்ன ஒரு வார்த்தை..?
சாம்பாரை பண்ணினோமா பொரியலை பண்ணினோமா அப்படின்னு பாத்துட்டு கம்முனு கிடங்க  
பிறந்த நாள் அதுவுமா ?

அதாண்டி நானும் சொல்லவந்தேன் 

என்னவா ?

சிதம்பரம் இருக்கார் லே நம்ம நிதி அமைச்சர் .  அவருக்கும் இன்னிக்கு பிறந்த நாள் ...  உனக்கும் இன்னிக்கு பிறந்த நாள்.  இல்லையா....

.அட .. ஆமாம் ...   நாட்டுக்கு நல்லது செஞ்சவங்க நிறையா பேரு  எல்லாமே இந்த செப்டம்பர்லே பிறந்திருக்காக. 

ஆனா ஒரு வித்தியாசம் தான் 
என்ன ?

அவரு நிதி அமைச்சரு மட்டும்தான்  நீ... நிதி அமைச்சர், ஹோம் மினிஸ்டர் .
வெளிநாட்டு துறை அமைச்சர் எல்லாமே ?

அது சரி தானே வள்ளுவரே சொல்லிருக்கார் இல்லையா..

என்ன அது?

தக்கார் தகவிலர் அவரவர் ...
எச்சத்தால் காணப்படும். 
 அப்படின்னு வருது இல்லையா....

அவங்க அவங்க என்ன எப்படிங்கறது அவங்கவங்க விட்டுட்டு போனதை வெச்சுண்டே தெரிஞ்சுக்கலாம் 

எச்சம் அப்படின்னா வேலை செஞ்சப்பறம் இருக்கற சூழ்நிலை, சந்ததி, இதுமாதிரி எல்லாமே.  அத வச்சுகிண்டே அவங்க அந்த பொறுப்புக்கு தகுதி ஆனவங்களா இல்லையா அப்படின்னு தெரிஞ்சுக்கணும். 

அதுக்கு இப்ப என்ன ?

நீங்க நாப்பது வருஷம் வேல பாத்து என்ன மிச்சம் வச்சு இருக்கீக ??
எல்லாத்தையும் தின்னே தீத்திட்டோம் இல்லையா..
இருப்பதையாவது காப்பாத்தி வச்சுக்கணும் இல்லையா. ?  அதுக்குத்தான் 
நான் பைனன்சையும் எடுத்துகிட்டேன் 

ஏண்டி,இந்த எழுபது வயசிலே உனக்கு இந்த ஆசை ?
வள்ளுவர் சொல்றதைக் கொஞ்சம் கேளுடி..

என்ன ?

நினைவுக்கு வந்ததை சொல்றேன் 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை 
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

அருள் வேணும் அப்படின்னு அப்பப்ப வாவது கொஞ்சம் நினைக்கனும்டி.

அது அப்ப ...
இந்தக்காலத்துக்கு எத்தனை சரி அப்படின்னு தெரியல்லே 
இந்த பாட்டை கவனிங்க ....

குலம் தரும், கல்வி கொணர்ந்து முடிக்கும்,
அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும்,
நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகிப்
புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ?
சரியா பொருள் தெரியல்லையே ?  யாரு பாடி இருக்காக ? எங்க இருக்கு ?
நூல் வளையாபதி  யாரு எழுதினாருன்னு தெரியல்லே. 
நம் கையில்மட்டும் காசு இருந்துவிட்டால், அது  என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
எந்தக் குலத்தில் பிறந்தவர்களையும் அது  உயர்குடிமக்களாக உயர்த்திவிடும், நாம் நினைத்த கல்வியை உலகின் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து தரும், நம்மைத் தேடி வந்தவர்களின்  பசியைத் தீர்க்கும் உணவாக உதவும்… இப்படி இன்னும் பல பயன்கள் உண்டு.ஆகவே, நிலமே பிளந்துபோகும்படி வெப்பம் நிறைந்த நீண்ட பால நிலத்தைக் க டந்து சென்றும்கூட, அந்தப் பொருளைத் தேடத் தயங்காதீர்கள். அதுமட்டும் உ ங்களிடம் இருந்துவிட்டால், வேறெந்தக் குறையும் எட்டிப்பார்க்காது.

எங்க படிச்சே ? அதான் நம்ம பையன் வெய்யில்லே வாடறானோ ?

வள்ளுவரா ? வளையாபதியா ?
சபாஷ். சரியான போட்டி. 

அது சரி. எங்க படிச்சே அப்படின்னு சொல்லிப்போடு. என்ன மாதிரி அப்பாவி கணவர்கள்   எல்லாரும் தெரிஞ்சுக்கணும். . 
இங்க தான். நீங்களும் ஒரு வாட்டி தினம் இங்க போய் ஒரு பத்து பாட்டு தெரிஞ்சுகினு வாங்க   

Courtesy:
 http://365paa.wordpress.com/2012/05/29/328/?
blogsub=confirming#blog_subscription-3   

ஆனா கிழவி, ஒன்னு சொல்லிப்போடறேன். என்ன தான் தல கிழே நின்னாலும் உருண்டு உருண்டு உலகம் முழுக்க போனாலும் நமக்குன்னு என்ன அந்த ஆண்டவன் விதிசிருக்கானோ அது தாங்க கிடைக்கும். 

கங்கை லே  அவ்வளவு தண்ணி ஓடுது,  ஆனா, நம்ம கையிலே இருக்கிற சொம்பு பிடிக்கிற அளவுக்குத் தானே நீர் ரொப்பி எடுத்துகிட்டு வரமுடியும்.
வேணும்னா இங்கே பாரு கணேசன் அப்படின்னு ஒருவரு அழகா எழுதறாரு. 

ஆஹா ....  இப்படி சொல்லி சொல்லித்தானே வந்த ப்ரமோஷன் எல்லாமே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டீக..   உங்களுக்கு பின்னாடி வந்தவங்க எல்லாமே முன்னாடி போயிட்டாக..

யாரு முன்னாடி போனும், யாரு பின்னாடி போனும் அப்படின்னு முடிவு செய்யறதும் அவன் தானே. 

நான் அதை சொல்லவில்லை. 

எதுவும் சொல்லவேண்டாம்  சும்மா இரு. 
அதுவே சுகம். 

சும்மா இருப்பது எப்படி அப்படின்னு இங்கே சொல்றாக என்னமா அழகா படிபடியா?

அப்படியா!  அந்தப் படியை  கெட்டியாப் பிடிச்சுக்க 




















Thursday, September 13, 2012

இன்றைய பொழுதை இனிதாக்குங்கள்.

//செய்கையெலாம் அதன் செய்கை, 
நினைவெல்லாம் அதன் நினைவு,
 தெய்வ மேநாம் உய்கையுற நாமாகி
நமக்குள்ளே யொளிர்வதென உறுதிகொண்டு 
பொய்,கயமை,சினம்,சோம்பர்
கவலை,மயல், வீண் விருப்பம்,
ழுக்கம்,அச்சம், ஜயமெனும் பேயையெலாம்
 ஞானமெனும் வாளாலே அறுத்துத் தள்ளி,...//


 பாரதி நினைவு நாளன்று பாரதியே இயற்றி காரைக்குடி ஹிந்து அபிமான சங்கத்தில் சொற்பளிவாற்றுகையில் பாடிய பாட்டினை விலையிலாப் பொருள் கொண்ட அதை திருமதி தேனம்மை இலக்ஷ்மணன் அவர்கள் தன் வலையில் இட்டிருக்கிறார்கள். அதனை இங்கே காண்க. முழுப்பாடலும் இங்கே அவர்கள் வலையிலே

(மேலே உள்ள தொடர்பினைக் க்ளிக்கிட்டு செல்ல இயல வில்லை எனின் கீழ்க்காணும் தொடர்பினை ஒட்டவும் பின்  கிடைக்கும்.
 http://honeylaksh.blogspot.in/2012/09/blog-post_6504.html

அதற்கான பின்னூட்டம் ஒன்று தந்தேன்.
 எனது பாணியிலேயே அதுவும் இதே: 
அத்வைத கருத்தினை 
அருமையாக எளிதாக 
இதைவிடத் தெளிவாக
 ஈண்டு இவ்வுலகத்தே 
யாரேனும் பாரதியைத்தவிர
 உரைத்திட வல்லாரோ ? 
இப்பாடலை இதுவரை நான் படித்ததில்லை.
 புதையலைக் கண்டாற்போல் இருக்கிறது. 
உண்மையிலே இது புதையல் தான்.
 உருவும் அருவுமான 
உண்மைப்பொருளை 
முழுமையாகப் படித்து இன்புற 
முதற்கடமையாக 
அவர்களது வலைக்குச்செல்லுங்க்கள்.
 இன்றைய பொழுதை இனிதாக்குங்கள்.

Tuesday, September 04, 2012

மேலே ஒரு படி செல்ல ...

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையுங் கல்லாத வாறு.

(ஊரென்ன ? நாடென்ன ?  கற்றவனை அகிலமும் போற்றி மகிழும் .  அவ்வண்ணம் ஒருவன் கல்லாமல் இருப்பது தான் தான் ஏன்?    ...  என்றார்  வள்ளுவர்)


என்கின்ற வள்ளுவனின் வாய்மொழி தான்

இன்று நினைவுக்கு வருகிறது.

இன்று ஆசிரியர்  தினம்.

அன்னை தந்தையை காட்ட,
தந்தை குருவிடம் கூட்டிச் சென்று இவனுக்கு நற்கல்வி புகட்டுங்கள் என்று சொல்ல அந்த
குருவோ, அந்த மாணவனிடம், நீ யார் என்பதை நீயே உணர்ந்து கொள் என்று
இறைவனிடம் அழைத்துச் செல்கிறார்
இல்லை.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் 


என்ற வள்ளுவப்பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப 
வையத்தில் வாழ்வாங்கு வாழும் வழிதனைப் புகட்டுகின்றார் 

ஆகவே தான் மாதா பிதா குரூ தெய்வம் என்றனர் 

ஆசிரியரைப் போற்றுவது நமது கடமை. 
ஆசிரியரின் கடமை என்ன என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவது அதுவும் தலையாயதே 

எதிர்கால மன்னவர்களின் திறம்பட வாழ்வு மட்டும் அல்ல அற நெறிக்குட்பட்ட வாழ்வும் 
நம் ஆசிரியர்கள் கையிலேதான் இருக்கிறது. 

தனக்கென வாழா பிறர்கெனவே வாழும் ஆசிரியர்களைப் பணிவோம் போற்றுவோம் 

மேலே ஒரு படி செல்ல  
மேலே படிக்க இங்கே செல்க  




Sunday, September 02, 2012

அய்யா! வணக்கம்


"அய்யா!  வணக்கம் "  என்றேன்.
அவர் என்னை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் கருமமே கண்ணாயினார் என்னும் வகையிலே கணினியிலே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

"அய்யா வணக்கம் " என்று மீண்டும் உரத்த குரலில் சொன்னேன்.
தலை நிமிர்ந்தார். எனைப் பார்த்தார்
என்னய்யா ?
பெரிய அய்யாவை பார்க்கணும் என்றேன்.
இப்ப பார்க்க முடியாது. என்றார்
நான் பார்க்கணுமே என்றேன்.
நான்தான் இப்ப பார்க்க முடியாதுன்னு சொல்றேனுல்ல

சுற்றி ஒருமுறை பார்த்தேன் பெரிய அறை தான். வரவேற்கும் பி.ஏ .அறையே இவ்வளவு பெரியதாக இருந்தால் உள்ளே இருப்பவர் அறை இன்னமும் பெரியதாக இருக்கும் என்று என் உள் உணர்வு உரைத்தது.

பெரிய அய்யாவைப் பார்க்க வருபவர்களுக்காக என நாற்காலிகள் பல அழகழாக வரிசையாக இருந்தன  .  அதில் அமர்ந்தாலே அந்தஸ்து உயர்வதைப் போல இருந்தது.  ஒரு ஐந்தாறு வரிசைகள் அதில் கடைசி வரிசையில் அமர்ந்தேன்

அந்த பி. ஏ , ஐயா என்னைப் பார்த்தார் என்ன நினைத்தாரோ திரும்பவும் தன் கணினியில் சங்கமம் ஆனார்

சுற்றி இருக்கும் சுவர்களில் அடடா !! என்ன ஒரு மேற்கோள்கள். !!

                                   கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
                                  குரிமை உடைத்திவ் வுலகு.

வள்ளுவனின் படத்தின் கீழே இந்த குரளைப் பார்த்ததும், சரிதான் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்று தோன்றியது.

எதிர்ச்சுவரில் அந்த பி. ஏ . இருக்கை மேலே அண்ணல் காந்தி புன்னகைத்து கொண்டிருந்தார்
அவர் சொல்லியதாகச் சொல்லப்படும் சொற்கள் பெரிய எழுத்துக்களில் பிரகாசித்துக் கொண்டு இருந்தன .



"A customer is the most important visitor on our premises. He is not dependent on us; we are dependent on him.He is not an interruption in our work; he is the purpose of it. He is not an outsider in our business; he is a part of it.We are not doing him a favour by serving him; he is doing us a favour
by giving us an opportunity to do so. "

ஆஹா !!  நமது பாக்கியமே நாம் இந்த இடத்துக்கு வந்தது. கண்டிப்பாக நான் நினைத்து வந்த காரியம் முடியும் சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. நாம் வந்த காரியம் முடியவேண்டும் என நினைத்துக்  கொண்டேன் 

அப்போது அந்த திடீர் என்று அந்த பி.ஏ . அய்யா தலை நிமிர்ந்தார்

பெரிய அய்யாவை பார்க்க முடியாது என்று சொன்னேன் இல்லையா ? போயிட்டு வாங்க .!!
என்றார் .
நானோ விடாப்பிடியாக ,
"ஐயா,  நான் அவரைக் கண்டிப்பா பார்க்க வேண்டும்".என்றேன்.

பார்க்க முடியாது அப்படின்னு நான் சொன்னா  சொன்னது தான். என்று அழுத்திச் சொன்னார்  போடா வெளிலே என்று தள்ளாத குறைதான்

அந்த சமயம் என்று பார்த்து ஒரு பத்து பேர் தப தப என்று இரைச்சலாக உள்ளே வந்தனர்

நாங்க வந்திருக்கோம் என்று சொல்லுங்க என்று சொல்லவில்லை. ஆணை இட்டார்போல் இருந்தது

பெரியவரு இன்னைக்கு யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்லியிருக்காரு அது தான் என்று தயங்கி தயங்கி சொன்னார் பி. ஏ .

அதெல்லாம் அப்புறம். இப்ப பாத்தாகணும். ஒன்னு ரண்டு இல்லை அப்படின்னு தெரிஞ்சாகனும். என்றார் அதில் வந்திருந்த ஒரு மீசைக்காரர்

ஆமாம்.  ஆமாம். என்றார்கள். மற்றவர்கள்.

கொஞ்சம் இருங்க. அப்படி சொல்லிவிட்டு உள்ளே போனார் பி.ஏ .  அடுத்த நிமிடம் வெளியே வந்தவர், " உங்களை நாளைக்கு காலை வரச் சொல்கிறார் "

" இப்ப என்னவாம்?"

" அர்ஜெண்டா போன் பேசிக்கிட்டு இருக்காரு.. கான்பிரன்ன்ஸ் விஷயம் போல இருக்குங்க .."

அவர்களுக்கேலேயே முணு முணுத்துக் கொண்ட பின்,
" சரி சரி. நாளைக்கு வரோம். "  என்றவர்கள், திரும்பினாற்போல் இருந்தது.
திடீர் என்று ஒருவர் மட்டும் இவர் நாளைக்கு இருப்பாரா என்று கேட்டார்.

இருப்பார்னு தான் நினைக்கிறேன் என்றார் பி.ஏ .
அனிச்சையாக கைகளை மேலே தூக்கிக் காண்பித்தார்

வந்த அதே வேகத்தில்  திரும்பிச் சென்றது அந்த குழாம் .

அந்த பி. ஏ . என்னைப் பார்த்தார்  உங்க கிட்ட எத்தன தர சொல்லுவது ?  நீங்க போங்க !
அவங்கள பாக்க முடியாது. என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. என்றார்.

சார் என்று இழுத்தேன்.

சார் மோர் எல்லாம் வேண்டாம் முதல்லே போய்ச்சேருங்க  ...ஏகப்பட்ட வேலை இருக்குது என்றார் அப்ப பார்த்து, அந்த கம்பயூடர் சத்தம் கொஞ்சம் அதிகப்படியாகவே கேட்டது. அது ஒரு பாட்டு.கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன் 

 ( நீங்களும்  கண்டிப்பா கேட்கனும்னா இங்க க்ளிக் பண்ணுங்க.)

அந்த சமயம் பார்த்து தொலை பேசி சத்தம் போட்டது. பி.எ. ஸ்மார்ட் ஆனார். கம்புடர் ஸ்பீக்கரை ஆப செய்தார்

அதை எடுத்தவர் " எஸ்.மேடம். எஸ்.மேடம்." என்று பத்து மேடம் போட்டார்  " ஒரு நிமிஷம் , நீங்க பேசணுமா கனெக்ஷன் கொடுக்கட்டுமா, ....................வேண்டாமா........நான் சொன்னால் போதுமா ...  சரி மேடம் " என்று போனை வைத்தார். பக்கத்தில் இருந்த அடுத்த போனை ( அது இன்டர் காமாக இருக்கும் போல் இருந்தது. ) முதலில் பேசற பக்கத்தை காது பக்கம் வைத்துகொண்டார் பிறகு மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார்

" சார் ! வீட்டிலேந்து  மேடம் பேசினாங்க சார். அவங்க அம்மா வந்திருக்காங்களாம். உடனே வரச்சொன்னாங்க ... ........எஸ் சார், ....ஆமாம் சார்..." என்று போனை வைத்தார்.

திடீர் என நினைவுக்கு வந்தது போல, திரும்பவும் போனை எடுத்தார்.

 " சார், சாரி டு டிஸ்டர்ப் யு ஒன்ஸ் எகைன் சார், வரும்போது,  கிராண்ட் ஸ்வீட்ஸ் லே ரண்டு ஸ்வீட்ஸ் ரண்டு காரம் வாங்கிண்டு வரச்சொன்னாங்க சார். என்றார்.

உஸ் என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு அப்பாடி, இன்னி வேலை முடிஞ்சு போச்சு. என்றார்.

இடை வேளைக்கப்பறமாவது சரியா பார்க்கணும். என்று முனு முணுத்தார்

என்ன பார்க்கணும் சார். ! என்று இடை மறித்தேன். என் இடைச் செருகலை அவர் விரும்பவில்லை என்று நன்றாகவே தெரிந்தது. வேண்டா வெறுப்பா என்னை பார்த்தார்

அதே நிமிஷம் உள்ளிருந்து அந்த பெரியவர் வெளியே  வந்தார் . வந்த உடனே அவர் கண்கள் பி.ஏ வை மட்டுமே சந்தித்தன என்று நான் கவனித்தேன்.

" வேற எதுனாச்சும் சொன்னாங்களா ? "  என்றார்.

" இல்லை சார், உங்களை சீக்கிரம் வரச் சொன்னாங்க அது தான் " என்றார் பி. எ.

" சரி, நான் கிளம்பறேன். " என்று கிளம்பியவர் , " குமார் !  மேலேந்து எதுனாச்சும் போன் வந்தது அப்படின்னா, நான் டூர் லே இருக்கேன் , அப்படி சொல்லிடுங்க " என்றார்.

 வெளியே போக திரும்பியவர் என்னைப் பார்த்தார்.  திடுக்கிட்டார் என்று சொன்னால் மிகை ஆகாது.

"வாங்க ..வாங்க...நீங்க நாளைக்குத்தானே  வருவீங்க அப்படின்னு எதிர்பார்த்தோம் ?
குமார் ! இவர் தான் எனது சக்ஸசர் .  என் ப்லேசிலே . ஆமா, இவர் வந்திருக்கார்னு ஏன் சொல்ல வில்லை? சச் அன் இம்பார்டன்ட் பர்சன் "

அந்த பி. எ.  குமார் ( அவரது பெயர் ) முகம் வெளிறிப்போனது நன்றாகவே தெரிந்தது.

" நோ ப்ராப்ளம் .. நான் தான் ஒரு நாள் முன்னாடியே வந்துவிட்டேன். என்னென்ன எப்படி எப்படி செய்யணும் அப்படின்னு உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண வந்தேன். "

" தட்ஸ் ஒ.கே. வாங்க.. முக்கியமா ஒரு வேலை. ஹி ..ஹி ...போய்க்கொண்டே பேசலாமே !!"

"வேண்டாம். நாளைக்கே வரேன். "

" என்னென்ன செய்யணும் அப்படின்னு தெரிஞ்சகண்ணும் அப்படின்னு  சொன்னீர்களே? "

" ஆமாம். ஆனா , இப்ப என்ன என்ன செய்யக்கூடாது அப்படின்னு தெரிஞ்சுகிட்டேன் அது போதும். "

" ஹி ..ஹி .....    ..  .ஒ.கே. ...   திப்ருகார் எப்படி சார் ? "

 அவருக்கு அங்கே தான் தமிழ் நாட்டிலேந்து மாற்றலாகி இருந்தது.




வருகை தந்த வரும் வர என்னும் எல்லோருக்கும் எனது உளமாற நன்றி.
















Thursday, August 30, 2012

என்னங்க ?




என்னங்க ?

என்ன என்னங்க ?

என்னவா ? ஒரு மணி நேரமா கத்திண்டே  இருக்கேன் ? காதிலே விழல்லையாங்க ?

ஒரு மணி நேரமா ? பொய் சொல்லாதே ? ஒரு நிமிஷம் கூட இல்லை.

நானா பொய்  சொல்றேன் ! என் மூஞ்சியைப் பாத்து சொல்லுங்க.

ஏன் உன் மூஞ்சிலே தான் எதுனாச்சும் ஒட்டி இருக்குதா ?

உங்க மூஞ்சிலாதங்க அதெல்லாம் ஒட்டி இருக்கும். என் மூஞ்சி நெத்தி எல்லாம் எப்பவுமே பட்டுபோல பளிச்சுன்னு தான் இருக்கும்.

அப்ப என் மூஞ்சிலே என்ன ஒட்டி இருக்குதுன்னு சொல்றே ?

மூஞ்சிலே மட்டுமா ? உடம்பு பூராவே இருக்கு.

அது என்னடி அப்படி கண்டே ?

நான் மட்டுமா கண்டேன் .  யாரைபாத்தாலும் அதே தானே சொல்வாக.

அது என்ன சொல்வாக ?


அது சரி. என்ன விஷயம்னு கூப்பிட்ட? ஒரு முக்கியமா விஷயம் பாத்துகிட்டு இருக்கேன்ல ?

அப்படி என்னங்க முக்கியமான விஷயம் ? சாம்பார் கொதிக்குது. குக்கர் சத்தம் போடுது. அனைங்க அணைங்க அப்படின்னு ஆயிரம் தரம் சொல்லணுமா ?

(மனசுக்குள்ளே ) (அனைங்க, அணைங்க  அப்படி நீ சொல்லாமலேயே அணைச்ச காலம் எல்லாமே அம்பது வருசத்துக்கு முன்னாடியே போயிடுச்சே )

ஏன்  நீ என்ன  பண்ணுறே ? நீ போய் அணைக்க வேண்டியதுதானே ?

நான் என்ன பன்னுறேனா ?  பாத்தா தெரியலையா ?

என்னத்தை பாக்கிறது ?

உங்களுக்கு எத பாக்கிறது எத பாக்க வேண்டாம் அப்படி என்னாலே கிளாஸ் எடுக்க முடியாது.   இந்த சரவணன் மீனாச்சி சீரியல் இப்ப விட்டா அப்பறம் பாக்க முடியுமா ?

அப்ப நான் தான் சமையலை கவனிக்கனுமா என்ன ?
அடேய் சரவணா ? நீ எப்படா சீரியலே முடிக்கப்போறே ?

சீரியல் முடியறதுக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ளே சாம்பார் தீஞ்சு போயிடும்.
போயி சாம்பார் வாணலியை  ஆF  பண்ணுங்க.

பண்ணிட்டேன்

குக்கரை ஆப பண்ணுங்க.

பண்ணிட்டேன்.

பண்ணிட்டேன், பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னா எப்படி. நீங்க என்ன
பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்ன கவனிக்கிறத விட்டுட்டு. ?

இத பாத்துகினு இருக்கேன்.

என்ன அது ?





என்னங்க உங்களுக்கு பொன்னாடை போத்தறாங்க ?

ஆமாண்டி. மெதுவா கேளு.

சரி வேகமா கேட்கறேன். யாருங்க அது? என்ன விசேஷம் ?

எனக்கு போன ஞாயிறு அன்னிக்கு தமிழ் பதிவாளர்கள் கூட்டத்தில் சமூக ஆர்வலர்
மூத்த குடிமகன் அப்படின்னு சொல்லி கௌரவச்சாங்க .  ஒரு நினைவுப் பரிசும் தந்தாங்க

அதான் இந்த போட்டோவாங்க ?

ஆமாண்டி   எப்படி கீறேன் பாத்தியா ? சும்மா ஸல் லுனு இருக்கேன்ல ...

ரொம்ப தான் மெலிஞ்சு போயிட்டீங்க

கரெக்ட். பொன்னாடை போத்த கூப்பிடும்போது கூடத்தான் அத சொன்னாக இப்படி ஒல்லியா இருக்கீகளே ? அது என்ன சீக்ரட் அப்படின்னாக ?

என்ன சொன்னீங்க ..

சொல்லனும்னு நினைச்சேன். மறந்து போச்சு.

என்ன அது ?

Most of us live to eat.
Some of us eat to live. 

.
என்ன செஞ்சா நம்ப உடம்ப ட்ரிம்மா வச்சுக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்க இங்கன  க்ளிக்குங்க 

சுப்பு தாத்தா ஞாயிறு இரவு ஒரு கனவு காண்கிறார் அது என்ன ? 

சுப்பு தாத்தா பாராட்டு பெற்றதை முன்னிட்டு ஒரு கச்சேரி







Sunday, March 18, 2012

தூங்காமலேயே கனவு கண்டுண்டு இருக்கேன்.

Courtesy: arvindsdad.blogspot.in/2012/03/who-is-great-mother-or-daughter.html



சீக்கிரம் போடும்மா பொத்தானை !! நான்  உடனே போகணும் அம்மா !!

எங்கடா கண்ணா இன்னிக்கு இத்தனை அவசரம் ஸ்கூலுக்கு ?

அம்மா அம்மா !! உனக்குத் தெரியாதா !! சசின் நூறு நூறு எடுத்துட்டாராம் 
எங்க ஸ்கூல் லே விழா கொண்டாடுறாங்க...அதிலே நாங்க டான்சே ஆடப்போறோம். 

ராசாத்தி ...போயிட்டு வாடி என் கண்ணம்மா !!  

ஏம்மா !! எம்புட்டு சம்பாதிக்கிறாரு அந்த சசின்னு ?  நம்மைப் போலவுங்களுக்கு
ஒரு வீடு கட்டி தரக்கூடாதா ?

அத நம்ப மாரியாத்தா தான் செய்யணும். செய்ய முடியும். 
நல்ல படிச்சு நீயே காணி நிலம் வாங்குவே. அதிலே ஒரு மாளிகை கட்டுவே. 
அத நினச்சு நினச்சு தான் கண்ணம்மா நான் தூங்காமலேயே கனவு கண்டுண்டு இருக்கேன்.    

என்னம்மா கனவு ?

காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும் 
அந்த காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டி தர வேண்டும். 

Sunday, February 12, 2012

ஒரு கிழவன் கிழவி வாலெண்டைன் டே

Courtesy: http://kavinaya.blogspot.com
    ஏங்க !! எங்க போயிட்டீக !!

    கல்யாணமாயி நமக்கு கிட்டத்தட்ட நாப்பத்தி ஐந்து வருசமாச்சு !!

    என்கிட்டே பிடிக்காதது ஒண்ணு சொல்லுங்க பாக்கலாம் !!

    இருக்கு !  அத சொன்னா நீ கோவிச்சுக்குவே !!

    கோவிச்சுக்கமாட்டேன். சொல்லுங்க !!

   கோவிச்சுக்கறேன் அப்படின்னு சொல்லமாட்டே !  ஆனா கோவிச்சுண்டுடுவே !!

   இல்லே ! கோவிச்சுக்கமாட்டேன்.  சொல்லுங்க...

   அப்படின்னுதான் சொல்லுவே....ஆனா அடுத்த ஆறு நாளைக்கு மூஞ்சியே உம்முன்னு வச்சுப்பே...

   இல்லே..வச்சுக்கமாட்டேன்...சொல்லுங்க...

   அப்படி இல்லாட்டாலும் என்ன நேர்லெ பாக்காம யார்ட்டயோ பேசறாமாரி பேசுவே !!

   அப்படியெல்லாம் பேசமாட்டேன்.  சொல்லுங்க...

   அப்படிதான் சொல்லுவே.. நான் பேச ஆரம்பிச்சா, காது கேக்காத மாதிரி நடிப்பே...

   நான் நடிக்கிறேனா ??   என்ன அப்படி சொல்றீங்க...

   அப்ப நான் நடிக்கிறேனா ?

   நான் ஒண்ணும் அப்படி எப்பவும் சொல்லலீயே !!

   நானும் உன்ன எப்பவும் எதுவும் சொன்னதில்லையே !!

   சொன்னாதானா !!  மனசுலே வச்சுட்டு சொல்லாம இருப்பீங்க இல்ல ...

   அப்படியெல்லாம் ஒண்னுமே இல்ல..

   அப்ப சொல்லுங்க...  

   ஒண்ணும் இல்லன்னு சொல்றேன்னுல்ல...

   இல்லாமயா போகும்.  என்ன பிடிக்கல்லன்னு சொல்லுங்க...

   ஒண்ணும் இல்ல...

   இப்ப ஸ்ட்ராங்கா டீ வேனுமா இல்லயா !!

   வேணும்...  

   அப்ப சொல்லுங்க...

   என்ன சொல்லணும்...

   என்ன சொல்லணுமா !!  இத்தனை நேரம் சொல்லிக்கினு தானே இருந்தேன்.  மறந்து போயிட்டீகளா ?

   ஆமாம்.  வயசாயிடுச்சுலே !! என்ன சொல்லச்சொன்னே ?

   என்கிட்டே என்ன பிடிக்கல்லே அப்படின்னு சொல்லச்சொன்னேன்.

   ஒண்ணு தான் இருக்கு..  அத ரொம்ப சீக்ரெட்டா வச்சுட்டுருக்கேன்.  அதயும் போட்டு உடச்சுட்டா எப்படி !!

   அப்படியா !!   சீக்கிரம் சொல்லுங்க...

   அவ்வளவு அவசரப்பட்டா எப்படி !!

   நானா அவசரப்படறேன்.   அவசரப்படரதெல்லாம் நீங்கதானே !!

   எத வச்சுண்டு அப்படியெல்லாம் சொல்றே !!

  நீங்களே  மனச தொட்டு பாருங்க....

  சரி தொடரேன்...

  என்னய ஏன் தொடறீங்க...

  நீதானே  மனச தொட்டு பாக்கச்சொன்னே !!

  இங்கனே என் மனசு இல்ல இருக்கு !!

  அங்க தானே என் மனசும் இருக்கு !!

  அப்படியா !!

  அப்படியே தான் !!

  நெசமாவா !
 
  நெசம்மா !

   சத்தியமா !!

   சத்தியமா ...

   நம்பலாமா ?

   நம்புன்னுதான் சொல்லிட்டேன்ல...

  எப்ப சொன்னீங்க...

  இப்ப அப்பன்னு சொல்லமுடியுமா என்ன !! எப்பவுமே சொல்லிகிட்டுதானே இருக்கேன்.
 
   சரி சொல்லுங்க...
   என்ன சொல்லச்சொல்றே !!

   எங்கிட்ட புடிக்காதது ஒண்ணு சொல்லுங்க...
   ஒண்ணு சொன்னா போதுமா ?
   அப்ப ரொம்ப ஜாஸ்தியா இருக்குதா என்ன ?
    
   அப்படி ஒண்ணும் அதிகமா இல்ல...
    நாலு அஞ்சு இருக்கும்

    நாலு அஞ்சா !!  என்ன என்னங்க....

    சொல்லிபுட்டுமா !!

    சொல்லுங்க....

    வேணாம். இன்னிக்கு வேலன்டன் டே.  
    நாளைக்கு சொல்றேன்.

    இல்ல... இப்பவே சொல்லிடுங்க...

    இந்தா பாரு... ரொம்ப நச்சரிச்சுக்கினே இருந்தா...
    இருந்தா போய் புகார் பண்ணுடுவேன்...

    யாரிட்டே பண்ணுவீங்க...  புள்ள குட்டியெல்லாம் அயல் நாட்டுலே இருக்கே !!

    இங்கன ஒத்தரு இருக்காங்களே ... நல்லதா பேசி குடும்பத்தை சேத்து வக்கிறாங்களே !!
   
     நீங்க நிர்மலா பெரியசாமி அவங்களயா சொல்றீக...

    ஆமா....   ஒரு நாளைக்கு அவங்ககிட்ட் தான் போய் என் குறைய சொல்லணும்...

    என்ன அப்படி என்கிட்டே குறைய கண்டுட்டீங்க...

    எங்கிட்டேயே சொல்லுங்களே !!

    இல்ல... நீ கோவிச்சுக்குவே...
    கோவிச்சுக்கமாட்டேன். 
மூ ....ஞ்....சி
   ....ய  ...தி ...ரு...பி...

     என்ன தூங்கறீகளா !!

     எப்படிதான் தூங்கறீகளோ !!
    ஒரு விசயம் பேசினோமா அப்படிங்கறதே இல்ல....

     இந்தா.  வள வளா அப்படின்னு பேசிகிட்டே இருக்காதே.  மனுசனைக் கொஞ்சம் தூங்க விடு. நான் ஒன்னும் தூங்கலே. அந்தக்காலத்து வாலண்டைன் பாட்டு கேட்டுகினே கண்ணை மூடிட்டு இருக்கேன்.  எம். ஜி. ஆர் பாட்டு. 
     அப்பாடி என்ன சுகம் என்ன சுகம்....  பானுமதி பாடறா கேளு.
     உனக்குத் தூக்கம் வல்லேன்னா இந்த வலேண்டின் பாட்டை கேளு.  
     அப்ப நான் பேசுறது தான் உங்களுக்கு பிடிக்காதது இல்லையா...
      அதுவும் தான்..  

      என்னது !!!

      மனுஷன் இன்னிக்கு வேலன்டைன் டேக்காவது இந்த காதல் பாட்டை கேட்டுண்டே தூங்க விடேன் !!
       *********************************************************************

    ஒரு கிழவன் கிழவி வாலெண்டைன் டே
    சுபத்ரா மேடம் அவங்க பதிவ பாத்த உடனே மனசிலே பதிவானது. 

Friday, January 20, 2012

எல்லாம் ஒண்ணு தான்யா. உள்ளே அதே தாங்க இருக்கு....சாலமன் பாப்பையா




எல்லாம் ஒண்ணு தான்யா.  உள்ளே அதே தாங்க இருக்கு.
தியேட்டர் வெவ்வேற படம் ஒன்னு தாங்க.
சமயங்கள் பற்றி சாலமன் பாப்பையா
பசுக்கள் வேறானாலும் பால் ஒன்றே. 
நாலடியார் சொல்கின்ற கருத்தினை நமக்குப் புரியுமாறு சொல்கின்றவர்
என்றுமே தமிழ் மக்கள் மனதிலே நிறைந்து நிற்கின்றார். 

Monday, January 16, 2012

மாடுகள் இல்லேயேல் மனிதன் இல்லை.

மாட்டு பொங்கல் பண்டிகை சிறப்புகள்.
தமிழ் மக்கள் பண்டை காலம் தொட்டே மாடுகளுக்கு மனிதனின் நன்றி உணர்வினை வெளிப்படுத்தும் வகையிலே இந்த சிறப்பான பண்டிகையை ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு மறு நாள் கொண்டாடுகின்றனர்.

மாடுகள் இல்லேயேல் மனிதன் இல்லை. மனித வாழ்வு மகிழ்ச்சியாக இருப்பதில் மாடுகளின் அங்கம் சிறப்புடைத்து. அயர்ச்சி அடையாது வயல்களில் உழைக்கும் அந்த ஐந்தறிவு படைத்ததாக நாம் சொல்லும் மாடுகள் தான் நாம் வயிறார உணவு தின்பதற்கு காரணம்.
மழையை படைத்த இறைவன், வெய்யிலை கொடுக்கும் சூரியன் இவர்களை நாம் வணங்குவது போல, மாடுகளையும் வணங்கி தொழுகிறோம். பசு மாடுகளை கோ மாதா என்றும் மகா லக்ஷ்மி என்றும் வர்ணித்து அவற்றை பூசை செய்கிறோம்.  இடையறாது பால் வழங்கும் அந்த வாயில்லா ஜீவன்களை காம தேனு என்றும் சொல்லி வணங்குகிறோம்.

மாடுகளுக்கிடையே போட்டியும் வைத்து அவைகளையும் உற்சாகப்படுதுவதே ஜல்லிக்கட்டின் துவக்க லட்சியம். மாடுகளை அலங்கரித்து, அவற்றினை நம் வீட்டு முக்கிய விருந்தினராக வரவழைத்து பூசை செய்து அவற்றிக்கு பொங்கல் அளித்து மகிழ்வது இந்த மாட்டு பொங்கல் வைபவத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
மறைகளில் சொல்லப்பட்ட முறைப்படி இங்கு மாடுகளுக்கு பூசை செய்யப்படுகிறது.


மாடுகள் வயதாகிவிடினும் அவைகள் காக்கப்படவேண்டும். நமது அம்மா அப்பா வயதாகிவிட்டதே என்று அவர்களை  வெளியே அனுப்புவது நமது பண்பு அல்ல. வயதான அன்னையை நடு  இரவில் வெளியே துரத்தி விட்டு போகச் சொல்லிவிட்டு அவர்களை வெகு தூரம்  அனுப்பி விட்டு, ( அண்மையில் ஜீ தமிழ் டி.வி. யில் பார்த்த அதிர்ச்சி தந்த நிகழ்ச்சி ) ஏழைகளுக்கு அன்ன தானம் செய்கிறேன் என்று சொல்வது எத்துனை சிறுமைச் செயலோ அது போலவே தான், தனது வாழ் நாள் முழுவதும் மனித இனத்துக்காக உழைத்து பாடுபட்ட மாடுகளை காட்டுக்கு அனுப்புவதும் ஆகும்.  வயதான தாய் வீட்டிலே இருந்தால் மொன மொன என்றோ தொனோ தொனோ என்று தான் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பது போல கிழ மாடுகளும் அவ்வப்போது குரல் கொடுக்கத்தான் செய்யும். அன்பாக அவைகளிடம் சென்று தோல் பட்டையை, முதுகை தடவி கொடுங்கள். கோடி புண்ணியம்.
மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு இன்றி அமையாத இரும்பு பாலம் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் ஆதாரம்.
நமது பரம்பரையில் மாட்டு பூசை செய்யும் வழி முறைகளை இங்கு பார்க்கலாம். இன்றும் பல கிராமங்களில் இது நடக்கிறது.  உண்மை இது.



நன்றி: ஆமந்த.

அது சரி.  இது தேவைதானா !! இப்படித்தான் நமது வீரம் வெளிப்பட வேண்டுமா !!


ஜல்லிக்கட்டு

MATTU PONGAL IS THE THANKS GIVING DAY BY THE FAMILY IN OFFERING POOJA TO COW ( GHO MATHA) AS OUR MOTHER GIVING US WITH AN ENDLESS SUPPLY OF MILK, YEAR AROUND. HINDU SOCIETY WORSHIP THE COW AS DIVINE MOTHER MAHALAKSHMI SHOWERING HAPPINESS & PROSPERITY TO THE FAMILIES. THIS IS THE DAY WE GET TO SEE ALL THE COWS & BULLS DECORATED AND WE GET TO THANK THE BULLS FOR THEIR HARD WORK IN THE FARM. THERE USED TO BE A BULL FIGHTING SESSION ON THIS MATTU PONGAL DAY




Category:


Indian epic and legends symbolise the reverence for animals, particularly cows & bulls, inherent in Indian philosophy. Religious symbolism stress animal welfare, animal protection and even worship. The man-animal bond has always been very strong because animals are being treated as close companions for his need and greed. This is the background of MATTU PONGAL in India.

ammaitha 11 months ago

Running through the events of my younger day's life in a rural hamlet, Maraiyur village, near Mayiladuthurai, toiling at the paddy fields in the process of ploughing, water in-let & outlet management, Nadavu in the wet lands, weed removal, fertilizing protecting from rats and such other tricky operations finally we reach the harvesting level. Many such tedious tasks are encountered in the premetive stage of cultivation in 1930s and 1940s without significant econnomic return.

ammaitha 11 months ago

All through the process of cultivation, transportation and human living, we are gifted with the most dutiful, endlessly hardworking companions the bull & cows. Their tioling labour, work and service to the humanity is un-parallel, amazing and astonishing without expecting anything in return.

ammaitha 11 months ago

The farmer community had attained Divine values to these silent companions and worship them on Mattu Pongal day over the past ages. Mattu Pongal festival had been unheard of in modern days and we seem to be gradually drifting towards Tractor pongal celebration. ammaitha finds great pleasure in finding an opportunity to run on this ancient festival in traditional pattern.

ammaitha 11 months ago

Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல்




நன்றி: தமிழ் கூடல்.

பொங்கலோ பொங்கல்.  பொங்கும் மங்களம்
எங்கும் தருக. என்றும் தருக.
எங்களது இனிய பொங்கல் வாழ்த்துக்களை எங்கள் பதிவுக்கு வரும் அனைத்து
நண்பர்களுக்கும், நாங்கள் அடிக்கடி சென்று மகிழும் பதிவுகளின் ஒன்றா இரண்டா இதுவரை ஓராயிரம் பதிவு ஆசிரியர்களுக்கும் எனது உற்றார் சுற்றார் அனைவருக்கும் 1961 முதல் 2001 வரை என்னுடன் பணி புரிந்த  எனது காப்பீட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் பொதுவாகவும், குறிப்பாக வும் சொல்லி மகிழ்கிறோம்.


தமிழ் வலை நண்பர்கள் என்றவுடன் இனிய நம் தாய் மொழியாம்  தமிழிலே வலை என்று நான் துவங்கிய நாள் முதலாய் உடனேயே அறிமுகம் ஆன திரு  ரம்னேஷ் ராஜகோபால் , அறிவு ஜீவி, பெரும் ஆற்றல் ஜீவி, இசையின் வழியே ஈசனிடம் இட்டுச்செல்லும் ஞானி   ஜீவா வெங்கடராமன், அமர கவி கபீரின் தத்துவங்களை விளக்கிச் சொல்லும் கபீரன்பன், குமரன்,  மௌலி, திகழ், மதுரையம்பதி, துளசி மேடம்,  தன மேலே பாட்டு எழுதவே அம்மனே இப்புவிக்கு அனுப்பி இருக்கும்  கவிநயா மேடம், சித்ரா , காயத்ரி, நிழற் படங்களை நிஜப்படங்கள் போல் எடுக்கும்   ராம லக்ஷ்மி, கீதா சாம்பசிவம்,ஒவ்வொரு நாளும் நமக்கு ஆலய தரிசனம் செய்ய மனமுவந்து அருள் தரும்  ராஜராஜேஸ்வரி, ஷிர்டி சாய் புகழ் பாடும் ஸ்ரீ கலா, லலிதா மிட்டல்,சோதிட நிபுணர், நகைச்சுவை வல்லுநர்  சுப்.பையா வாத்தியார், அருணை அடி, தி.ஆர். எஸ்.  கே ஆர் எஸ் , ஹரிணி,குறை ஒன்றும் இல்லை என்று சொல்லும்  லக்ஷ்மி, ஹ ர ணி , எனது பிறந்த கிராமத்து ஆங்கரை அன்பர் அரண்ய வாஸ் ராம முர்த்தி, ஈழத்தில் பிறந்தவர,  தமிழ் உணர்வு என்றால் என்னச் சொல்லிடும்  ஹேமா, அருட்கவி சிவகுமாரன், அவ்வப்போது என் வலைக்கு வந்து இக்கிழவனை உற்சாகப்படுத்தும் அபி அப்பா,அண்மைய காலத்து இலக்கிய வாதிகளை நமக்கு மறுமுறை அறிமுகம் செய்து வைக்கும் சிறந்த சிறுகதை ஆசிரியர்  பூவனம் வலை ஆசிரியர் ஜீவி, வலைச்சரத்தில் இந்த வார ஆசிரியர் சென்னை பித்தன், கவிதை துளிகள் என பெயரிட்டு மரபு சார் கவிதைகள் எழுதும் தங்க மணி, ராகவன்,சங்ககுரல் பத்திரிகை ஆசிரியர் அறிவுக்கடல், தேனம்மை லக்ஷ்மணன்,சித்தர்களையும் அவர்களது பாடல்களையும் கலைகளையும் விளக்கிசொல்லும்  தோழி, ஆதி மனிதன், தமிழ், அருணா , கான பிரபா, சுப்பு , கணினியில் புதுப்புது உக்திகளைப் பகிர்ந்துகொள்ளும்  சசி குமார், கர்நாடக இசையிலே தானும் மயங்கி விருந்தினரையும் மயங்க வைக்கும், வைத்யா, முத்து லக்ஷ்மி . ரம்யா , அனன்யா
ஹிமான்ஷு பாட்டில், வித்யா சூரி, சாதிக்க வேண்டும் என நினைக்கும் சாதாரணமானவன் என சொல்லும்  வை.கோபால கிருஷ்ணன் , வாசு, சமூக சிந்தனை ஆளர்  நந்தினி கிருஷ்ணன், டோஹாவிலே பார்த்த அதிசய மனிதர்  தக்குடு, ஹரணி, ஸ்ரீனிவாச கோபாலன், கட்டிட நிபுணர் வடுவூர் குமார், வேதங்கள் பொருள் தரும்  வாசுதேவன் திருமூர்த்தி, திருக் கயிலாதுக்கு நமை எல்லாம் அழைத்துச் சென்ற கோமதி அரசு, சீனா.கோபி ராம முர்த்தி, மா தேவி, அனந்த நாராயணன், ராம், என். கணேசன்,    பிரமிக்கச் செய்யும் கோலங்கள் போடும் வாணி முத்துக்ருஷ்ணன்    சின்னு கேசரி ,  டோண்டு , மற்றும் இட்லி வடை ஆசிரியர், மற்றும் இந்த பட்டியலில்   உடன் நினைவில் இல்லாது மறந்து போன பல நூற்றுக் கணக்கான தமிழ்ப் பதிவர்களுக்கும், இவர்கள் பதிவுகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான விருந்தினர்க்கும்,

சுப்பு தாத்தாவின் பொங்கல் வாழ்த்துக்கள்.

உங்களின் பொன்னான வாழ்த்துகளைப் பெற உங்கள் பெயரை க்ளிக்கினாலே போதும். உங்களது வாழ்த்துக்களும் பெறலாமே !!

தொடர்ந்து தமிழ் வலை தனை சிறப்பித்துக்கொண்டே இருங்கள்.

அடிக்கரும்பு இனிக்கும் வரை, தமிழ் வலைக்கு அடித் தளமாய் இருங்கள்.
தமிழுக்கு காவலனாய் இருங்கள்.

தமிழ்க் கடவுளாம் கந்தன் புகழ் பாடகனாய் இருங்கள்.