Pages

Wednesday, March 30, 2011

"மக்களது பணம் மக்கள் நல வாழ்வுக்கே "

"மக்களது பணம் மக்கள் நல வாழ்வுக்கே "
(People's money for People's welfare)
எனச சொல்வது மட்டுமல்ல செய்வதிலும் காட்டும் நிறுவனம் எல்.ஐ. சி. ஆகும். பொதுத் துறை நிறுவனமான இந்த இன்சூரன்சு நிறுவனம் மக்களிடம் இருந்து பெறும் பிரிமியத் தொகைகளை நாட்டின் நல்ல திட்டங்களுக்கு ஆக்க பூர்வமான முதலீடுகள் செய்து அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும் செயல் பட்டு வருகிறது.  

அண்மையில் சென்னை அருகே திருநின்றவூர் கசுவா கிராமத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஏழைச் சிறுவர்களுக்கு உண்ண உணவளித்து, பிளஸ் டூ வரை இலவசக் கல்வி புகட்டும் தொண்டு நிறுவனமான சேவாலய பள்ளிக்கு அதன் பொன் விழாக் காலத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டி, அதன் துவக்க விழா வரும் 2.4.2011 அன்று நடைபெறும் என்று ஒரு வரவேற்பு மடல் எனக்கு வந்து இருக்கிறது. 
மண்டல மேலாளர் திரு எம். ஆர். குமார் அவர்கள் எல்.ஐ.சி. யின் உதவியால் கட்டப்பெற்ற இந்த ஜி. எல். எப். (GOLDEN JUBILEE BLOCK) கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்கள்.  
நான் நாற்பது ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனமும், எனது நாற்பது ஆண்டுகட்கு மேலே எனது நண்பர் திரு ரமணி அவர்களை தொடர்பு அலுவலர் ஆக கொண்ட சேவாலயா நிறுவனமும் சேர்ந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு நல்லிதயம் கொண்ட எல்லோரும் வாழ்த்துவர் .

பள்ளித தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்ற பாரதியின் வாக்கு பலித்திருக்கிறது.

சேவாலயா நிறுவனர்களுக்கும் அதில் தொண்டாற்றும் எல்லா ஊழியர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

Tuesday, March 29, 2011

ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனை



அன்பு நண்பர் திரு திகழ் அவர்கள் வலைப்பதிவில் அழகான வெண்பா ஓன்று,  சிவனைத் துதித்து " நான் பணிவேன் நயந்து " என்று வினயத்துடன் எழுதியதைக் கண்டு வியந்தேன். வடமொழியிலே ஒரு பழ மொழி உண்டு. 
(vidhya dhadathi vinayam ) 
கல்வி அடக்கத்தைத் தரும் என. அது சொல்வது போல, கற்கக் கற்க, இன்னமும் நாம் கற்க வேண்டியதெல்லாம் உலகளவு உள்ளது என மறவாது  இருப்பதும் அடக்கமே. அந்த அடக்கத்தின் கருவே ஆண்டவனின் நினைவு, துதி எல்லாமே.

வெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்களால் எழுதப் பட்ட வெண்பா இது எனத்
திகழ் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். நன்றி.

சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த இந்த வெண்பா இங்கே உள்ளது.

சுப்பு தாத்தா இப்பாடலை யதுகுல காம்போதி என்னும் ராகத்தில் பாடுகிறார்.

இன்னொரு துதி திரு சிவகுமாரன் அவர்கள் வலையிலே உள்ளது. ஓம் நமோ நாராயண என்னும் பாடல். திரு சிவகுமாரன் அவர்கள் நெஞ்சம் ஒரு கவிதை ஊற்று.  இவர்தம் கவிதையிலே வருகின்ற சொற்கள் யாவுமே எனக்கு மாமல்லபுரத்து சிற்பங்களாகத் தோற்றம் அளிக்கின்றன.

அவர் எழுதிய பாடலை நான் ஹிந்தோளம் எனும் ராகத்தில் பாட எத்தனிப்பதை அவரது வலையில் காணலாம். கேட்கலாம்.

Saturday, March 12, 2011

தாயே நான் அஞ்சேன்


அழகான வெண்பா ஒன்று வலை நண்பர் திகழ் அவர்களால் எழுதப்பெற்று இருக்கிறது.

உலகத்து எல்லா உயிர்கட்கும் அவரவர் வினைப்பயனுக்கேற்ப இன்ப துன்பங்கள் விளையத்தான் செய்கின்றன. இன்பம் வரும்போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்குவது மாந்தரின் இயல்பு. அதுபோல் துன்பம் வரும்போது தொய்ந்து போவதும் இயல்பே.

இருப்பினும், துன்பங்களைக் கண்டு நான் அஞ்சேன் எனக் கூறும் கவிஞர் திகழ் அவர்கள் தனக்கு உறு துணையாக உலகத்து அன்னை இருக்கிறாள் என உணர்கிறார்.  எவ்விடத்திலும் எக்காலத்திலும் உலகத்தின் அன்னை தாயே இருக்கையில் தான் எதற்கு அஞ்சவேண்டும் என நினைந்து அஞ்சேன் என
கூறுகிறார்.

பக்தியின் அடித்தளம் இறையின் பால் கொண்ட உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் மனம் இறுகிச் செல்கையில் மாந்தர் எதைக் கண்டு அஞ்சுவார் !!
 வெண்பா படிக்க இங்கே செல்க.

சுப்பு தாத்தா பாடுவது செஞ்சுருட்டி என்னும் ராகத்திலே.

திகழ் அவர்கள் தனது இன்னொரு வெண்பாவிலே இறைவனைத் துதிக்கத் துதிக்க நாம் செய்த பாவம் எல்லாம் தீருமெனச சொல்கிறார். 
நாம் படும் இன்ப துன்பங்கள் யாவுமே நம் வினைப்பயன் என்ற மன நிலை கொண்டபின் இறைவனைத் துதித்தால் செய்த வினை மறைந்து போமோ என்று நினைக்கவும் தோன்றும்.

செய்த வினை இருக்க தைவத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியும் ?  என்பார் அவ்வை பிராட்டி.


இருப்பினும் அந்த இறைவன் கருணையின் கடல். அந்த கடல் அலைகளின் சுழற்சியில் நாம் அமிழ்ந்து போகையிலே நமது துன்பங்களை மறக்கவும் இயலும். அதன் தாக்குதல் இருந்து ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ளவும் முடியும் போல்தான் தோன்றுகிறது.

இதோ திகழ் எழுதிய இன்னொரு கவிதை. 
அதை சுப்பு தாத்தா தேஷ் ராகத்தில் பாடுகிறார்.