Pages

Thursday, September 17, 2015

புதுகை மா நாட்டில் கலந்து கொள்ள இருக்கும்........

பிள்ளையார் கோவிலுக்கு குடியிருக்க வந்திருக்கும்
பிள்ளையாரு இந்த புள்ளை யாரு ?

 அடே உங்களுக்குத் தெரியாதா...தமிழ் பதிவர் மாநாடு புதுகை லே நடக்குதில்லே அது நல்லபடியா நடக்கணும் அப்படின்னு விநாயகன் கிட்ட வேண்டிகிட்டு, நமக்கு எல்லா பரிசும் கிடைக்கணும் புள்ளைங்க  பாடுதுங்க.

பாடுதுங்க..
நீங்களும் வாழ்த்துங்க.

 புதுகை மா நாட்டில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து பதிவருக்கும்
கலந்து கொள்ள இயலாது இருக்கும் பதிவருக்கும்

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Tuesday, September 15, 2015

முருகா

 முருகா நீ தானே தமிழ்க் கடவுள் . அவ்வை முதலாய் அனைத்து புலவரும் சங்க காலம் தொடங்கி இன்று வரை உன்னை வணங்காது கவி படைத்தோர் இல்லை. ஆறு படை வீடு எங்கிலும் உனது படை. உன்னை வணங்குவோர் எண்ணுக்கு எல்லை இல்லை.
தமிழ்க் கடவுளாம் நீ.
தமிழ்ப் பதிவாளர் மாநாட்டுக்கும் நீயே தலைவன்.
பதிவர் மாநாட்டினை முன் நின்று நடத்தும் முத்து நிலவன் அவர்களும்  அவருக்கு உறு துணையாய் நிற்கும் ஆயிரம் ஆயிரம் தமிழ் பதிவாளரும் புதுகையிலே ஒன்று கூடுகின்றனர்
அவர்கள் வெற்றி பெற உனது அருள் வேலை அனுப்பி வைப்பாய்.
புதுக்கோட்டையிலே அக்டோபர் 11ம் தேதி.ஞாயிறு அன்று 
அந்த மாநாடு சரித்திரம் படைத்திட அருள் புரிவாய்.


சுப்பு தாத்தா இன்று தான் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரெஸ் ல் ரயில் பயணம் டிக்கட் பதிவு செய்ய முனைகிறார்.
அவருக்கு,
லோயர் பெர்த்தில் ஒரு இடம் வாங்கிக் கொடு. முடிந்தால்,
அப்பர் பெருமானுடன் ஒரு வார்த்தை சொல்லிவிடு.  அன்று சிவனுக்கும் உகந்த நாள்.

சொல்லிவிட்டேன்.

விழாவை இனிதே நடத்தி வைப்பது இனி உன் பொறுப்பு.

கண்டு களிப்பது உண்டு மகிழ்வது மட்டுமே என் சிறப்பு.

Sunday, September 13, 2015

ஒரு சிங்கத்துக்கு அஞ்சாயிரம் ரூபா

ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்.


யாரு சிங்கம் அப்படின்னு தெரிஞ்சுக்க இங்க சொடுக்கி பாருங்க. 

ஒரு சிங்கம் இல்ல, கிட்டத்தட்ட ஒரு அஞ்சு சிங்கத்துக்கு
ஒரு சிங்கத்துக்கு அஞ்சாயிரம் ரூபா தர்றாங்களாம்.


இப்போதைய செய்தி.

மாநாட்டு அன்னிக்கு,
ஆரோக்யமான , சுவையானசாப்பாடு புரதச்சத்து மாவுச்சத்து ,இரும்புச்சத்துநல்ல கொழுப்புசத்து ,நார்சத்து,தாதுஉப்புக்கள்சேர்ந்தசெட்டிநாட்டுசாப்பாடு'

ஏங்க ... 
 ஒரு நாள் போதுமா..
இந்த மாநாட்டை ஒரு இரண்டு நாளைக்கு வச்சுக்கலாம் இல்லையா...
 

Friday, September 11, 2015

பாரதியின் எழுத்திலேயே

பாரதியின் எழுத்திலேயே 


இன்று பாரதியின் நினைவு நாள். ஏதேனும் எழுதுவோமா என்று நினைத்த அதே வினாடி வலை நண்பர் 

 ஸ்ரீரங்கம் ஷைலஜா அவர்கள் பதிவு படித்தேன். 

அவன் விட்டுச்சென்ற பாக்கள் என்னும் பூக்களின் வாசம்!
கல்வடிவக்கடவுளைபோல் அவன் சொல்வடிவத்தமிழ் சிற்பம் காலத்தால் அழியுமா என்ன!வெறும் தமிழ் வண்ணத்தமிழ் ஆனது அவன் கைவண்ணத்தில்! அணையா ஜோதியாக அவன் அறிவு விளக்கு எரிந்துகொண்டே இருந்ததினால்  அளவில்லா கவிதைகளை அள்ளி வழங்கிவிட்டான்! அவனே மரபுக்கும் புதுமைக்கும் நடுவே நின்ற  நெருப்பு!

 ஷைலஜா அவர்களுக்கு நன்றி சொல்லுவோம். 


 இதை  விட அழகாக பாரதியின் எழுத்துக்களை நான் என்ன வர்ணித்து  எழுதிட இயலும் ?
அதையே எல்லோரும் படிக்க வேண்டும்.

Tuesday, September 08, 2015

ஒரே பாடலில் நாலு வெண்பாக்கள்.


இன்றைய கவிதை உலகம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கவில்லை. 
வீறு நடை போட்டு விண்ணைத் தொட்டு விட்டு அதற்கு மேலும் அண்டத்திற்கே ஒளி சேர்க்கிறது என்றால் மிகை அல்ல. 

நான் இசை அமைத்திட்டு பாடும் பாடல்கள் கவிதைகள் பலவற்றின் ஆசிரியர்கள் இன்றைய முன்னணி கவிஞர் ஆவர். இவர்கள் அண்மைய காலமாக, மரபு சாராக் கவிதைகளை சற்று நேரம் மறந்து விட்டு, 

மரபு ஒத்த, தொல்காப்பியம் காட்டிடும் வழியில் பாடல்கள் பல இயற்றுகின்றனர்.  சந்தம் எதுகை மோனை எல்லாமே இவர்கள் அங்குசத்திற்குக் கட்டுப்பட்ட யானை போல் இருப்பதைப் பார்த்து வியக்கும் வண்ணம் உள்ளது. 

பாவலர் பட்டம் பெற்ற பலர் இனியா, இளமதி, சசிகலா, கிரேஸ் , சீராளன் போன்றோர் எழுதும் கவிதைகள் மிக்க சிறப்புடைத்ததாக இருக்கின்றன.

 இன்று நான் பார்த்த ஒரு கவிதையில் ஒரு இலக்கணக் குறிப்பு காணப்பட்டது. 

பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !


காவியக்கவி அவர்களின் கவிதை இங்கே காண்க. 
என் நாவில் வந்து குடி ஏறு
ஒரே பாடலில் நாலு வெண்பாக்கள். 
இனியா அவர்கள் செய்திட்ட அற்புதம்.

அதைப் பாராட்ட சுப்பு தாத்தா என்ன செய்வார் ?
வாழ்க வளர்க.
என வாழ்த்து சொல்வதோடு மட்டும் நில்லாது
பாடலை நான்கு ராகங்களில் பாடி மகிழ்ந்திருக்கிறார். 
புன்னாக வராளி, கானடா, மத்யமாவதி ராகங்கள் கேட்கலாம்.

காவியக்கவி அவர்கள் மேன்மேலும் சிற்ப்பு பெற்று, தமிழகத்தின் இலக்கிய வானில் ஒளி மிகு விண் மீன் என வலம் வருவார்.

Friday, September 04, 2015

நாத்து நட போறவளேபாவலர் இளமதி  அவர்கள் எழுதிய வயற்காட்டு பாடல் இது. 
பெரும்புலவர் பாரிஸ்  நகரத்தைச் சார்ந்த புலவர் பாரதி தாசன் அவர்களால் பாவலர் எனப் போற்றப்பட்டு, பட்டம் வாங்கிய பின் எழுதிய முதற் பாட்டு என்பதாலும் சிறப்புடைத்து. 

படம் கூகிளாருக்கு நன்றி. 

பாடல் வரிகள் பார்க்க பாவலர் இளமதி அவர்கள் வலைக்கு செல்ல இங்கே 
சொடுக்கவும். 

புதுகை தமிழ்ப் பதிவாளர் மாநாட்டுக் குச்செல்ல , தங்கள் பெயரை பதிவு செய்து சிறப்பு மிக்க நூல் ஒன்றைப் பெற இங்கே சொடுக்கவும். 


தாத்தா வை இன்னொரு தாத்தா எப்படி வர்ணிப்பார், பாடுவார் என்பதை
பார்க்க இங்கே செல்லவும். Wednesday, September 02, 2015

புதுகைக்கு வாருங்கள்.

புதுவையிலே அக்டோபர் திங்கள் 11ம நாள் நடக்க இருக்கும் பதிவர் மா நாட்டினை ஒட்டி, பதிவாளர் கீதா துளசிதரன் அவர்கள் இயற்றி, தமது வழிதனிலே இட்டு இருக்கும் பாடல் இது.

+Thulasidharan thillaiakathu
+Muthu Nilavan
+Dindigul Dhanabalan
+கவிஞா் கி. பாரதிதாசன்
+Chellappa Yagyaswamy
+yathavan nambi
+அன்பின் சீனா
+r.v.saravanan Kudanthai


கும்மிப் பாடல்.

எல்லோரையும் வருக வருக என்று வரவேற்கும் பாணி சிறப்புடைத்து.

புதுகைக்கு வாருங்கள்.