Pages

Tuesday, April 14, 2015

மன்மதா வா !!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 

எல்லோரும் இன்புற்று எல்லா நலங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்.


மன்மத ஆண்டு சித்திரை மாதப்பிறப்பு.

தமிழ்க்குடி மக்கள் கொண்டாடும் இந்த சித்திரை த்திங்கள் திருவிழாவினை
எனது வலை நண்பர்கள் எவ்வாறு சித்தரிக்கிறார்கள் என்று பார்க்க சிலர் வலைக்குச் சென்றேன்.
+Venkataraman Nagarajan
வேங்கட நாகராஜ் அவர்கள்
 இன்று பிறக்கும் மன்மத ஆண்டிற்கான வெண்பா பாடல்......ஒன்றினை பதிவு இட்டு நண்பர்களை வாழ்த்தி இருக்கிறார்.

இடைக்காட்டு சித்தர் எழுதிய 'மன்மத வருட வெண்பா'
மன்மதத்தில் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளை நண்ணுமே மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையிற் காற்றுமிகும்
கானப்பொருள் குறையுங் காண்.

திருமதி ரேவதி நரசிம்மன் அவர்கள் எல்லோரும் இனிதே வாழவேண்டும் என வாழ்த்தி மகிழ்ந்து இருக்கிறார்கள் . அவர்கள் மஞ்சள் நிற காசியா ப்லச்சிங் மரத்தை படம் எடுத்து போட்டு தமிழ் புத்தாண்டு தனை பூக்கள் ஆண்டாக மாற்றி இருப்பது புதுமை. 
திரு யாதவன் நம்பி @ புதுவை வேலு அவர்கள் ஒரு கவிதை எழுதி உளம் கனிய வைத்து இருக்கிறார். 
சித்திரைத் திருநாளே !!சிறப்புடன் வருக. !!
அதன் ஈற்று அடிகள் இங்கே:
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
முழுப்பாட்டையும் சுப்புத் தாத்தா அடானா ராகத்தில் பாட, மிகவும் நன்றாக இருக்கிறது என்று மீனாச்சி பாட்டியும் தாளம் போடுகிறாள். 


திருமதி ராஜி அவர்கள் தனது வலையிலே புத்தாண்டு பிறந்த கதையினை மிகவும் சுவையோடு சொல்கிறார்கள். 

நல்ல மனதுடன் நாம் இறைவனை வணங்கும்போது நம்மை எல்லா நலன்களுமே தடை இன்றி, வந்தடையும் என்று இவர் சொல்வதில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது.   நீங்கள் அவசியம் படிக்கவேண்டிய பதிவு இது.
+Tulsi Gopal
மன்மதன் வந்தானடி
 என்க்கொண்டாடுவது எங்களை அக்கா அத்திம்பேர் எனச் சொந்தம் கொண்டாடும்  உடன் பிறவா சகோதரி துளசி கோபால் அவர்கள். 

கேரளா விஷூ , ஈஸ்டர் பண்டிகை, மற்றும் தமிழ்ப்புத்தாண்டையும் சேர்த்து த்ரீ இன் ஒன்னாக கொண்டாடிய அவர்கள் வலையில் காணப்படும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.


www.thulasidhalam.blogspot.com

எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


மன்மதா வா !!

Thursday, April 09, 2015

நீ கொடுத்ததற்கே


அருள் மழை பொழிவாய் ரஹ்மானே 

நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல  முடியவில்லை இன்னும்,
இனி அடுத்ததற்கு  கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்  !!