Pages

Friday, September 28, 2012

அவன் தெரிவான்.

கண்டவர் விண்டதில்லை
.விண்டவர் கண்டத்தில்லை. ;
 விண்டவர் கண்டதையோ
 காணாதவர் கண்முன்னே
காணும்படி நிறுத்தவும் முடிவதில்லை.
 இது ஒரு ; கம்யூனிகேஷன் கேப்.

 கடவுளுக்கும் நமக்கும் அல்ல.
 கடவுளைப் புரிந்தவர்க்கும்
 நமக்கும்
கூட அல்ல.

நமக்கும்
 நமக்கும
 இடையே ஆன ஒன்றேயாம்.

அறியாததை புரியாததை ;
 இல்லை எனத்துணிந்து சொல்லும்
 ஆணவம்.  அஹங்காரம்.
 இதை விட்டொழிந்தால் தான்
அவன் தெரிவான்.

    ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டரித்து 
     தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் ? 

   இது திரு ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் வலையின் ஒரு பதிவைப் பார்த்தபின் நான் இட்ட பின்னூட்டம் .  அங்கு பின்னூட்டம் இட இயலவில்லை. ஈசனை அடைய பல மன எல்லைகளைக் கடக்க வேண்டும் போல, அந்த  வலையில் பின்னூட்டம் இடவும் பல தடைகள் இருக்கின்றன அவற்றில் சில என்னைத் தடுமாறச் செய்தன அதனால் இதை இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். 
    

Thursday, September 20, 2012

ராமலக்ஷ்மிக்கு ஜே.


உலகைக் காத்திடும் கணபதியே -- நீ
   ஓரமாய் ஒதுங்கிய தேனோ  !!

   பகலும் இரவும் பக்தர்கள் காணவே
   பந்தலில் பிரகாசமானாய்.
   அதிரும் அர்ச்சனை ஒலியில் நீயும்
   அசராமலே அமர்ந்தாய்.

    கலிகள் எங்கள் துடைத்திடவே நீ
    களிமண்ணிலிருந்து வந்தாய்.
    கழியும் எங்கள் துயரெனச் சொல்லிட‌
    களிமண்ணாகிக் கரைவாய்.  
  (  பின் 
     கடலிலே கலந்தாய்  )

இந்தப்பாட்டை  எழுத எனக்குத் தோன்றியது திருமதி ராமலக்ஷ்மி அவர்களின் வலைப்பதிவு தான். அதை எல்லோரும் அவசியம் படிக்கவேண்டும். \\

ஸோ ராமலக்ஷ்மிக்கு ஜே. 

இந்தப்பாட்டை எழுதி ஒரு நிமிடத்தில் உடனே எங்க வீட்டுக் கிழவியிடம் கான்பித்தேன். 
சக்தியில்லையேல் சிவன் இல்லை இல்லையா?
அவள் அதைப்பார்த்துவிட்டு,
கருத்து என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. 
இருந்தாலும்,
பிள்ளையார் ஏற்கனவே டயர்டா உட்கார்ந்து இருக்கார்.
அவரை நீங்கள் உங்கள் பாட்டால் 
ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்கிறாள்.

நம்மதான் துளசி கோபால் அவர்கள் அறுபது கல்யாணத்திலே மூக்கைப் பிடித்து ஒரு சாப்பாடு சாப்பிட்டு அப்பாடின்னு டயர்டா இருக்கிறோம் அப்படின்னா இங்கே பிள்ளையார் சாரும் டயர்டாத்தான் இருக்கார் 

அது சரி,  என்னோட பாட்டு எப்படி இருக்கு?


பிள்ளையாரப்பா ... நீயே வந்து 
பதில் சொல்லப்பா 


Wednesday, September 19, 2012

தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி.

இன்று பிள்ளையார் சதுர்த்தி.


தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி.

Tuesday, September 18, 2012

ஒண்ணும் இல்லீங்க.

courtesy; www.slashseconds.orgஆமாங்க. நிசமாவே ஒண்ணும் இல்லீங்க 

Monday, September 17, 2012

அப்பாவி கணவர்கள் எல்லாரும் தெரிஞ்சுக்கணும். .

அடியே மீனாட்சி கிழவி .,,,.இங்கே வா

என்ன இப்படி கத்துரீக ..  ஊரே ஓடி வந்துடும் போல இருக்கு?

வரட்டுமே. இன்னிக்கு ஒண்ணு புதிசா தெரிஞ்சதில்ல 

என்ன அப்படி 

நீயும் சிதம்பரமும் ஒண்ணு ...

அதெப்படிங்க.  மீனாச்சி அப்படின்னு பேரை வெச்சுக்கிட்டு நானும் சிதம்பரமும் எப்படி ஒன்னாக முடியும்?
மதுரைலே அம்மன் ஆட்சி. சிதம்பரத்திலே அப்பன் ஆட்சி இல்லையா 

அது சரி.  ஆனா ...

என்ன ஆனா...  ஆவன்னா ?  இத்தனை நாள் ஆட்சிலே இருந்துட்டு இப்ப ஆட்சியை விட்டுகொடுத்துட்டு போக முடியுமா?

நான் ஒன்னை விட்டுகொடு அப்படின்னு சொல்லவே இல்லையே  

அதானே பார்த்தேன்   எங்கே எங்கே சண்டை  போடலாம்னு இருக்கீகளோ அப்படின்னு நினச்சேன் 

ஒரு வார்த்தை பேச விட மாட்டேன் என்கிற நீ எனக்கு ஆட்சியவா கொடுக்கபோறே ?

என்ன ஒரு வார்த்தை..?
சாம்பாரை பண்ணினோமா பொரியலை பண்ணினோமா அப்படின்னு பாத்துட்டு கம்முனு கிடங்க  
பிறந்த நாள் அதுவுமா ?

அதாண்டி நானும் சொல்லவந்தேன் 

என்னவா ?

சிதம்பரம் இருக்கார் லே நம்ம நிதி அமைச்சர் .  அவருக்கும் இன்னிக்கு பிறந்த நாள் ...  உனக்கும் இன்னிக்கு பிறந்த நாள்.  இல்லையா....

.அட .. ஆமாம் ...   நாட்டுக்கு நல்லது செஞ்சவங்க நிறையா பேரு  எல்லாமே இந்த செப்டம்பர்லே பிறந்திருக்காக. 

ஆனா ஒரு வித்தியாசம் தான் 
என்ன ?

அவரு நிதி அமைச்சரு மட்டும்தான்  நீ... நிதி அமைச்சர், ஹோம் மினிஸ்டர் .
வெளிநாட்டு துறை அமைச்சர் எல்லாமே ?

அது சரி தானே வள்ளுவரே சொல்லிருக்கார் இல்லையா..

என்ன அது?

தக்கார் தகவிலர் அவரவர் ...
எச்சத்தால் காணப்படும். 
 அப்படின்னு வருது இல்லையா....

அவங்க அவங்க என்ன எப்படிங்கறது அவங்கவங்க விட்டுட்டு போனதை வெச்சுண்டே தெரிஞ்சுக்கலாம் 

எச்சம் அப்படின்னா வேலை செஞ்சப்பறம் இருக்கற சூழ்நிலை, சந்ததி, இதுமாதிரி எல்லாமே.  அத வச்சுகிண்டே அவங்க அந்த பொறுப்புக்கு தகுதி ஆனவங்களா இல்லையா அப்படின்னு தெரிஞ்சுக்கணும். 

அதுக்கு இப்ப என்ன ?

நீங்க நாப்பது வருஷம் வேல பாத்து என்ன மிச்சம் வச்சு இருக்கீக ??
எல்லாத்தையும் தின்னே தீத்திட்டோம் இல்லையா..
இருப்பதையாவது காப்பாத்தி வச்சுக்கணும் இல்லையா. ?  அதுக்குத்தான் 
நான் பைனன்சையும் எடுத்துகிட்டேன் 

ஏண்டி,இந்த எழுபது வயசிலே உனக்கு இந்த ஆசை ?
வள்ளுவர் சொல்றதைக் கொஞ்சம் கேளுடி..

என்ன ?

நினைவுக்கு வந்ததை சொல்றேன் 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை 
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

அருள் வேணும் அப்படின்னு அப்பப்ப வாவது கொஞ்சம் நினைக்கனும்டி.

அது அப்ப ...
இந்தக்காலத்துக்கு எத்தனை சரி அப்படின்னு தெரியல்லே 
இந்த பாட்டை கவனிங்க ....

குலம் தரும், கல்வி கொணர்ந்து முடிக்கும்,
அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும்,
நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகிப்
புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ?
சரியா பொருள் தெரியல்லையே ?  யாரு பாடி இருக்காக ? எங்க இருக்கு ?
நூல் வளையாபதி  யாரு எழுதினாருன்னு தெரியல்லே. 
நம் கையில்மட்டும் காசு இருந்துவிட்டால், அது  என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
எந்தக் குலத்தில் பிறந்தவர்களையும் அது  உயர்குடிமக்களாக உயர்த்திவிடும், நாம் நினைத்த கல்வியை உலகின் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து தரும், நம்மைத் தேடி வந்தவர்களின்  பசியைத் தீர்க்கும் உணவாக உதவும்… இப்படி இன்னும் பல பயன்கள் உண்டு.ஆகவே, நிலமே பிளந்துபோகும்படி வெப்பம் நிறைந்த நீண்ட பால நிலத்தைக் க டந்து சென்றும்கூட, அந்தப் பொருளைத் தேடத் தயங்காதீர்கள். அதுமட்டும் உ ங்களிடம் இருந்துவிட்டால், வேறெந்தக் குறையும் எட்டிப்பார்க்காது.

எங்க படிச்சே ? அதான் நம்ம பையன் வெய்யில்லே வாடறானோ ?

வள்ளுவரா ? வளையாபதியா ?
சபாஷ். சரியான போட்டி. 

அது சரி. எங்க படிச்சே அப்படின்னு சொல்லிப்போடு. என்ன மாதிரி அப்பாவி கணவர்கள்   எல்லாரும் தெரிஞ்சுக்கணும். . 
இங்க தான். நீங்களும் ஒரு வாட்டி தினம் இங்க போய் ஒரு பத்து பாட்டு தெரிஞ்சுகினு வாங்க   

Courtesy:
 http://365paa.wordpress.com/2012/05/29/328/?
blogsub=confirming#blog_subscription-3   

ஆனா கிழவி, ஒன்னு சொல்லிப்போடறேன். என்ன தான் தல கிழே நின்னாலும் உருண்டு உருண்டு உலகம் முழுக்க போனாலும் நமக்குன்னு என்ன அந்த ஆண்டவன் விதிசிருக்கானோ அது தாங்க கிடைக்கும். 

கங்கை லே  அவ்வளவு தண்ணி ஓடுது,  ஆனா, நம்ம கையிலே இருக்கிற சொம்பு பிடிக்கிற அளவுக்குத் தானே நீர் ரொப்பி எடுத்துகிட்டு வரமுடியும்.
வேணும்னா இங்கே பாரு கணேசன் அப்படின்னு ஒருவரு அழகா எழுதறாரு. 

ஆஹா ....  இப்படி சொல்லி சொல்லித்தானே வந்த ப்ரமோஷன் எல்லாமே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டீக..   உங்களுக்கு பின்னாடி வந்தவங்க எல்லாமே முன்னாடி போயிட்டாக..

யாரு முன்னாடி போனும், யாரு பின்னாடி போனும் அப்படின்னு முடிவு செய்யறதும் அவன் தானே. 

நான் அதை சொல்லவில்லை. 

எதுவும் சொல்லவேண்டாம்  சும்மா இரு. 
அதுவே சுகம். 

சும்மா இருப்பது எப்படி அப்படின்னு இங்கே சொல்றாக என்னமா அழகா படிபடியா?

அப்படியா!  அந்தப் படியை  கெட்டியாப் பிடிச்சுக்க 
Thursday, September 13, 2012

இன்றைய பொழுதை இனிதாக்குங்கள்.

//செய்கையெலாம் அதன் செய்கை, 
நினைவெல்லாம் அதன் நினைவு,
 தெய்வ மேநாம் உய்கையுற நாமாகி
நமக்குள்ளே யொளிர்வதென உறுதிகொண்டு 
பொய்,கயமை,சினம்,சோம்பர்
கவலை,மயல், வீண் விருப்பம்,
ழுக்கம்,அச்சம், ஜயமெனும் பேயையெலாம்
 ஞானமெனும் வாளாலே அறுத்துத் தள்ளி,...//


 பாரதி நினைவு நாளன்று பாரதியே இயற்றி காரைக்குடி ஹிந்து அபிமான சங்கத்தில் சொற்பளிவாற்றுகையில் பாடிய பாட்டினை விலையிலாப் பொருள் கொண்ட அதை திருமதி தேனம்மை இலக்ஷ்மணன் அவர்கள் தன் வலையில் இட்டிருக்கிறார்கள். அதனை இங்கே காண்க. முழுப்பாடலும் இங்கே அவர்கள் வலையிலே

(மேலே உள்ள தொடர்பினைக் க்ளிக்கிட்டு செல்ல இயல வில்லை எனின் கீழ்க்காணும் தொடர்பினை ஒட்டவும் பின்  கிடைக்கும்.
 http://honeylaksh.blogspot.in/2012/09/blog-post_6504.html

அதற்கான பின்னூட்டம் ஒன்று தந்தேன்.
 எனது பாணியிலேயே அதுவும் இதே: 
அத்வைத கருத்தினை 
அருமையாக எளிதாக 
இதைவிடத் தெளிவாக
 ஈண்டு இவ்வுலகத்தே 
யாரேனும் பாரதியைத்தவிர
 உரைத்திட வல்லாரோ ? 
இப்பாடலை இதுவரை நான் படித்ததில்லை.
 புதையலைக் கண்டாற்போல் இருக்கிறது. 
உண்மையிலே இது புதையல் தான்.
 உருவும் அருவுமான 
உண்மைப்பொருளை 
முழுமையாகப் படித்து இன்புற 
முதற்கடமையாக 
அவர்களது வலைக்குச்செல்லுங்க்கள்.
 இன்றைய பொழுதை இனிதாக்குங்கள்.

Tuesday, September 04, 2012

மேலே ஒரு படி செல்ல ...

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையுங் கல்லாத வாறு.

(ஊரென்ன ? நாடென்ன ?  கற்றவனை அகிலமும் போற்றி மகிழும் .  அவ்வண்ணம் ஒருவன் கல்லாமல் இருப்பது தான் தான் ஏன்?    ...  என்றார்  வள்ளுவர்)


என்கின்ற வள்ளுவனின் வாய்மொழி தான்

இன்று நினைவுக்கு வருகிறது.

இன்று ஆசிரியர்  தினம்.

அன்னை தந்தையை காட்ட,
தந்தை குருவிடம் கூட்டிச் சென்று இவனுக்கு நற்கல்வி புகட்டுங்கள் என்று சொல்ல அந்த
குருவோ, அந்த மாணவனிடம், நீ யார் என்பதை நீயே உணர்ந்து கொள் என்று
இறைவனிடம் அழைத்துச் செல்கிறார்
இல்லை.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் 


என்ற வள்ளுவப்பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப 
வையத்தில் வாழ்வாங்கு வாழும் வழிதனைப் புகட்டுகின்றார் 

ஆகவே தான் மாதா பிதா குரூ தெய்வம் என்றனர் 

ஆசிரியரைப் போற்றுவது நமது கடமை. 
ஆசிரியரின் கடமை என்ன என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவது அதுவும் தலையாயதே 

எதிர்கால மன்னவர்களின் திறம்பட வாழ்வு மட்டும் அல்ல அற நெறிக்குட்பட்ட வாழ்வும் 
நம் ஆசிரியர்கள் கையிலேதான் இருக்கிறது. 

தனக்கென வாழா பிறர்கெனவே வாழும் ஆசிரியர்களைப் பணிவோம் போற்றுவோம் 

மேலே ஒரு படி செல்ல  
மேலே படிக்க இங்கே செல்க  
Sunday, September 02, 2012

அய்யா! வணக்கம்


"அய்யா!  வணக்கம் "  என்றேன்.
அவர் என்னை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் கருமமே கண்ணாயினார் என்னும் வகையிலே கணினியிலே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

"அய்யா வணக்கம் " என்று மீண்டும் உரத்த குரலில் சொன்னேன்.
தலை நிமிர்ந்தார். எனைப் பார்த்தார்
என்னய்யா ?
பெரிய அய்யாவை பார்க்கணும் என்றேன்.
இப்ப பார்க்க முடியாது. என்றார்
நான் பார்க்கணுமே என்றேன்.
நான்தான் இப்ப பார்க்க முடியாதுன்னு சொல்றேனுல்ல

சுற்றி ஒருமுறை பார்த்தேன் பெரிய அறை தான். வரவேற்கும் பி.ஏ .அறையே இவ்வளவு பெரியதாக இருந்தால் உள்ளே இருப்பவர் அறை இன்னமும் பெரியதாக இருக்கும் என்று என் உள் உணர்வு உரைத்தது.

பெரிய அய்யாவைப் பார்க்க வருபவர்களுக்காக என நாற்காலிகள் பல அழகழாக வரிசையாக இருந்தன  .  அதில் அமர்ந்தாலே அந்தஸ்து உயர்வதைப் போல இருந்தது.  ஒரு ஐந்தாறு வரிசைகள் அதில் கடைசி வரிசையில் அமர்ந்தேன்

அந்த பி. ஏ , ஐயா என்னைப் பார்த்தார் என்ன நினைத்தாரோ திரும்பவும் தன் கணினியில் சங்கமம் ஆனார்

சுற்றி இருக்கும் சுவர்களில் அடடா !! என்ன ஒரு மேற்கோள்கள். !!

                                   கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
                                  குரிமை உடைத்திவ் வுலகு.

வள்ளுவனின் படத்தின் கீழே இந்த குரளைப் பார்த்ததும், சரிதான் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்று தோன்றியது.

எதிர்ச்சுவரில் அந்த பி. ஏ . இருக்கை மேலே அண்ணல் காந்தி புன்னகைத்து கொண்டிருந்தார்
அவர் சொல்லியதாகச் சொல்லப்படும் சொற்கள் பெரிய எழுத்துக்களில் பிரகாசித்துக் கொண்டு இருந்தன ."A customer is the most important visitor on our premises. He is not dependent on us; we are dependent on him.He is not an interruption in our work; he is the purpose of it. He is not an outsider in our business; he is a part of it.We are not doing him a favour by serving him; he is doing us a favour
by giving us an opportunity to do so. "

ஆஹா !!  நமது பாக்கியமே நாம் இந்த இடத்துக்கு வந்தது. கண்டிப்பாக நான் நினைத்து வந்த காரியம் முடியும் சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. நாம் வந்த காரியம் முடியவேண்டும் என நினைத்துக்  கொண்டேன் 

அப்போது அந்த திடீர் என்று அந்த பி.ஏ . அய்யா தலை நிமிர்ந்தார்

பெரிய அய்யாவை பார்க்க முடியாது என்று சொன்னேன் இல்லையா ? போயிட்டு வாங்க .!!
என்றார் .
நானோ விடாப்பிடியாக ,
"ஐயா,  நான் அவரைக் கண்டிப்பா பார்க்க வேண்டும்".என்றேன்.

பார்க்க முடியாது அப்படின்னு நான் சொன்னா  சொன்னது தான். என்று அழுத்திச் சொன்னார்  போடா வெளிலே என்று தள்ளாத குறைதான்

அந்த சமயம் என்று பார்த்து ஒரு பத்து பேர் தப தப என்று இரைச்சலாக உள்ளே வந்தனர்

நாங்க வந்திருக்கோம் என்று சொல்லுங்க என்று சொல்லவில்லை. ஆணை இட்டார்போல் இருந்தது

பெரியவரு இன்னைக்கு யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்லியிருக்காரு அது தான் என்று தயங்கி தயங்கி சொன்னார் பி. ஏ .

அதெல்லாம் அப்புறம். இப்ப பாத்தாகணும். ஒன்னு ரண்டு இல்லை அப்படின்னு தெரிஞ்சாகனும். என்றார் அதில் வந்திருந்த ஒரு மீசைக்காரர்

ஆமாம்.  ஆமாம். என்றார்கள். மற்றவர்கள்.

கொஞ்சம் இருங்க. அப்படி சொல்லிவிட்டு உள்ளே போனார் பி.ஏ .  அடுத்த நிமிடம் வெளியே வந்தவர், " உங்களை நாளைக்கு காலை வரச் சொல்கிறார் "

" இப்ப என்னவாம்?"

" அர்ஜெண்டா போன் பேசிக்கிட்டு இருக்காரு.. கான்பிரன்ன்ஸ் விஷயம் போல இருக்குங்க .."

அவர்களுக்கேலேயே முணு முணுத்துக் கொண்ட பின்,
" சரி சரி. நாளைக்கு வரோம். "  என்றவர்கள், திரும்பினாற்போல் இருந்தது.
திடீர் என்று ஒருவர் மட்டும் இவர் நாளைக்கு இருப்பாரா என்று கேட்டார்.

இருப்பார்னு தான் நினைக்கிறேன் என்றார் பி.ஏ .
அனிச்சையாக கைகளை மேலே தூக்கிக் காண்பித்தார்

வந்த அதே வேகத்தில்  திரும்பிச் சென்றது அந்த குழாம் .

அந்த பி. ஏ . என்னைப் பார்த்தார்  உங்க கிட்ட எத்தன தர சொல்லுவது ?  நீங்க போங்க !
அவங்கள பாக்க முடியாது. என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. என்றார்.

சார் என்று இழுத்தேன்.

சார் மோர் எல்லாம் வேண்டாம் முதல்லே போய்ச்சேருங்க  ...ஏகப்பட்ட வேலை இருக்குது என்றார் அப்ப பார்த்து, அந்த கம்பயூடர் சத்தம் கொஞ்சம் அதிகப்படியாகவே கேட்டது. அது ஒரு பாட்டு.கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன் 

 ( நீங்களும்  கண்டிப்பா கேட்கனும்னா இங்க க்ளிக் பண்ணுங்க.)

அந்த சமயம் பார்த்து தொலை பேசி சத்தம் போட்டது. பி.எ. ஸ்மார்ட் ஆனார். கம்புடர் ஸ்பீக்கரை ஆப செய்தார்

அதை எடுத்தவர் " எஸ்.மேடம். எஸ்.மேடம்." என்று பத்து மேடம் போட்டார்  " ஒரு நிமிஷம் , நீங்க பேசணுமா கனெக்ஷன் கொடுக்கட்டுமா, ....................வேண்டாமா........நான் சொன்னால் போதுமா ...  சரி மேடம் " என்று போனை வைத்தார். பக்கத்தில் இருந்த அடுத்த போனை ( அது இன்டர் காமாக இருக்கும் போல் இருந்தது. ) முதலில் பேசற பக்கத்தை காது பக்கம் வைத்துகொண்டார் பிறகு மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார்

" சார் ! வீட்டிலேந்து  மேடம் பேசினாங்க சார். அவங்க அம்மா வந்திருக்காங்களாம். உடனே வரச்சொன்னாங்க ... ........எஸ் சார், ....ஆமாம் சார்..." என்று போனை வைத்தார்.

திடீர் என நினைவுக்கு வந்தது போல, திரும்பவும் போனை எடுத்தார்.

 " சார், சாரி டு டிஸ்டர்ப் யு ஒன்ஸ் எகைன் சார், வரும்போது,  கிராண்ட் ஸ்வீட்ஸ் லே ரண்டு ஸ்வீட்ஸ் ரண்டு காரம் வாங்கிண்டு வரச்சொன்னாங்க சார். என்றார்.

உஸ் என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு அப்பாடி, இன்னி வேலை முடிஞ்சு போச்சு. என்றார்.

இடை வேளைக்கப்பறமாவது சரியா பார்க்கணும். என்று முனு முணுத்தார்

என்ன பார்க்கணும் சார். ! என்று இடை மறித்தேன். என் இடைச் செருகலை அவர் விரும்பவில்லை என்று நன்றாகவே தெரிந்தது. வேண்டா வெறுப்பா என்னை பார்த்தார்

அதே நிமிஷம் உள்ளிருந்து அந்த பெரியவர் வெளியே  வந்தார் . வந்த உடனே அவர் கண்கள் பி.ஏ வை மட்டுமே சந்தித்தன என்று நான் கவனித்தேன்.

" வேற எதுனாச்சும் சொன்னாங்களா ? "  என்றார்.

" இல்லை சார், உங்களை சீக்கிரம் வரச் சொன்னாங்க அது தான் " என்றார் பி. எ.

" சரி, நான் கிளம்பறேன். " என்று கிளம்பியவர் , " குமார் !  மேலேந்து எதுனாச்சும் போன் வந்தது அப்படின்னா, நான் டூர் லே இருக்கேன் , அப்படி சொல்லிடுங்க " என்றார்.

 வெளியே போக திரும்பியவர் என்னைப் பார்த்தார்.  திடுக்கிட்டார் என்று சொன்னால் மிகை ஆகாது.

"வாங்க ..வாங்க...நீங்க நாளைக்குத்தானே  வருவீங்க அப்படின்னு எதிர்பார்த்தோம் ?
குமார் ! இவர் தான் எனது சக்ஸசர் .  என் ப்லேசிலே . ஆமா, இவர் வந்திருக்கார்னு ஏன் சொல்ல வில்லை? சச் அன் இம்பார்டன்ட் பர்சன் "

அந்த பி. எ.  குமார் ( அவரது பெயர் ) முகம் வெளிறிப்போனது நன்றாகவே தெரிந்தது.

" நோ ப்ராப்ளம் .. நான் தான் ஒரு நாள் முன்னாடியே வந்துவிட்டேன். என்னென்ன எப்படி எப்படி செய்யணும் அப்படின்னு உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண வந்தேன். "

" தட்ஸ் ஒ.கே. வாங்க.. முக்கியமா ஒரு வேலை. ஹி ..ஹி ...போய்க்கொண்டே பேசலாமே !!"

"வேண்டாம். நாளைக்கே வரேன். "

" என்னென்ன செய்யணும் அப்படின்னு தெரிஞ்சகண்ணும் அப்படின்னு  சொன்னீர்களே? "

" ஆமாம். ஆனா , இப்ப என்ன என்ன செய்யக்கூடாது அப்படின்னு தெரிஞ்சுகிட்டேன் அது போதும். "

" ஹி ..ஹி .....    ..  .ஒ.கே. ...   திப்ருகார் எப்படி சார் ? "

 அவருக்கு அங்கே தான் தமிழ் நாட்டிலேந்து மாற்றலாகி இருந்தது.
வருகை தந்த வரும் வர என்னும் எல்லோருக்கும் எனது உளமாற நன்றி.