Pages

Thursday, March 04, 2010

ஒன்றும் புரியவில்லை.

   

    எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்


    என்றார் வள்ளுவர்.


    நல்லவையே கேட்கவேண்டும். ஏன் ! நல்லவை தனைக் கேட்டால்தான் நல்ல எண்ணங்கள் நம் மனதிலே  உருவாகும்.  நல்ல எண்ணங்கள் உருவானால் மட்டுமே நல்ல வார்த்தைகள் நம் வாயிலிருந்து வெளிக்கிளம்பும்.
 நல்ல செயல்களும் தொடரும். 

    ஆயினும், இன்றைய உலகிலே நல்லவை கேட்க முடிகிறதா ?  நல்லவை பார்க்க முடிகிறதா ?
     காலையில் பத்திரிகையின் முதற்பக்கத்தைப் பார்க்கும்பொழுதே, தொலைக்காட்சி பெட்டியைத் திறக்கும்பொழுதே   உலகத்திலே நல்லவை உளதா எனும் ஐயம் வந்துவிடுகிறதே !!

     நானிலத்துக்கு நல்வழி காட்டுபவராகவும் நல்லோரெனவும்   நினைக்கப்படுபவரெல்லாம் தாம் தம் எண்ணங்களிலும், வாக்கிலும் செயலிலும்  நல்லோராக நடந்து கொள்ளவேண்டுமென நினயாது தீய வழிகளில் செல்வதைக்கண்டு நல் உள்ளங்கள் பதறுகின்றன.

      நெஞ்சு பொறுக்குதில்லையே !  இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்... என என்றோ கேட்ட  பாடல் நினைவுக்கு வருகிறது.
              
     இது ஏன் ?
     உலகத்தில் நல்லவை என்பதே வற்றிப்போய் விட்டதா ?   அல்லது

     நல்லவை, நல்லோர் என்பதற்கு என்ன பொருள் கொண்டோமோ அது தான் மாறி விட்டதோ ?

    அல்லது நல்லவைக்கும் தீயவைக்கும் உள்ள வேற்றுமையை உணரும் அறிவினை ( sense of discrimination ) நாம் இழந்துவிட்டோமா?
        
     ஒன்றும் புரியவில்லை.