Pages

Wednesday, October 29, 2014

சூர சம்ஹாரம்

thiruchendur soora samharam

 ஒப்பற்ற திவ்ய நிகழ்வாம் சூர சம்ஹாரம் இன்று திருசெந்துரிலே அதி விமரிசையாக ஆயிரக்கணக்கான மக்கள் பக்தர் மத்தியிலே கொண்டாடப்படுவதை
திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தனது வலையிலே மிகவும் அற்புதமாக வர்ணித்து இருக்கிறார்கள். திருப்புகழ் பாடல் ஒன்றும் இட்டு இருக்கிறார்கள். அவர்கள் வலைக்கு செல்லும் வழி இது. சுப்பு தாத்தா அந்த திருப்புகழையும் அவர் தரும் வர்ணனனையும் படிக்கிறார். பாடுகிறார்.  சூர சம்ஹாரம்

Sunday, October 26, 2014

உலகத் தமிழ் பதிவாளர் மாநாடு மதுரை.

Broadcast liv

உலகத் தமிழ் பதிவாளர் மாநாடு மதுரை.
e streaming video on Ustream

Broadcast live streaming video on Ustream

Sunday, September 28, 2014

வேங்கடவா உன்னைத் துதிக்கின்றேன்.


  புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை தனை ஒட்டி, புலவர் இராமானுசம் அவர்கள் அற்புதமான கவிதை ஒன்றை தனது வலைப்பதிவில் இட்டு , வேங்கடவனின் பக்தர்களை மகிழுரச் செய்து இருக்கிறார்கள்.
வேங்கடவா உன்னைத் துதிக்கின்றேன்.
புலவர் இராமானுசம் அவர்கள் எழுதும் கவிதைகள் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனித்திறம் பெற்றவை.
அவர் என்றாவது ஒரு நாள் அவர் போற்றும் வேங்கடவனின் பத்து அவதார பெருமைகளை தம் கவிதைகளால் அலங்கரிப்பார் என நம்புகிறேன்.

Friday, September 12, 2014

பெரிதும் மனம் உவந்த பதிவு பாரதியின் நினைவு நாளன்று




பாரதியின் நினைவு நாளன்று 

ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமாய் பாரதியின் முத்துக் கருத்துக் குவியலிருந்து ஒரு முத்தினை எடுத்து அதை வலை உலகிற்கு அளித்த காலை,

நான் பெரிதும் மனம் உவந்த பதிவு

பாரதியின் சமூக நோக்கு பார்வை, அவர் கண்டிட விரும்பிய சமுதாயம் எல்லாவற்றினையும் உள்ளடக்கி

அவர் ஒரு பள்ளியிலே பாரதி நினைவு நாளன்று பேசியதை தனது வலையிலே இட்டு இருக்கிறார்.

இங்கே சொடுக்கி  அவரது வலைக்கு செல்லலாம்.
அவர்தம் உயரிய கருத்துக்களைப் படிக்கலாம்.

 
http://valarumkavithai.blogspot.in/

Thursday, September 11, 2014

1919 ல் காரைக்குடியில் எடுத்த புகைப்படம். பாரதி


1919 ல் காரைக்குடியில் எடுத்த புகைப்படம். பாரதி அன்று 

Friday, September 05, 2014

முதல் ஆசிரியர்

இன்று ஆசிரியர்கள் தினம்.



ஆசிரியர்களுக்கு நமது வணக்கத்தையும் நன்றியையும் கூறுவோம் .

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.




நாலு பேருக்கு நன்றி என

தமது நாலு ஆசிரியர்களைக் குறிப்பிட்டு



அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.

திருமதி மைதிலி கஸ்துரி ரெங்கன்  அவர்கள்.

நமக்கு, குறிப்பாக எனக்கு யார் யார் நினைவு வருகிறது இன்னாளில் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்.

ஆசிரியர் தினத்தன்று நாம் எல்லோரும் நமது தேசத்தின் ஜனாதிபதியாக விளங்கிய திரு இராதாகிருஷ்ணன் அவர்களைப் போற்றி மகிழ்கிறோம்.

ஊ.வே.சுவாமிநாத அய்யர் எனது அன்னையின் ஆசிரியர். 1908 லே ள்ளியிலே என் அன்னை அவரிடம் திண்ணை பள்ளியில் படித்ததாக என்னிடம் சொல்லி இருக்கிறார்.
அவர் நினைவு வருகிறது.

எனது திருச்சி இ.ரெ உயர் நிலைப்  பள்ளியில் 1950 முதல் 55 வாக்கில் படித்த காலையில் எனக்கு தமிழ் ஆசிரியராக விளங்கிய புலவர்  திரு குல சேகரன் அவர்கள் நினைவு வருகிறது.

வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றதெல்லாம் வலிப்பட்டு
குழக்கன்றை ஈன்றலரும் கோவுறு நோய் மருந்தாமோ என்று அவர்
சொல்லிய பெரிய புராணப் பாடல் நினைவுக்கு வருகிறது.

தூய வளவனார் கல்லூரி திருச்சியில் 1957 முதல் படித்த நேரத்தில் எனது பேராசிரியராக இருந்த எம்.ஐ.பிரான்சிஸ் ராஜ் அவர்கள் நினைவும்

கால்குலஸ் ஸ்ரீனிவாசன் அவர்கள் நினைவும் வருகிறது.

கூடவே எனது தமிழ்ப் பேராசிரியர் ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் நினைவும் நீங்காது நிற்கிறது.

நேஷனல் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு வருகிறது.

என்னுடன் 1998 வரை எங்கள் பயிற்சி கல்லூரியில் நான் உதவி பிரின்சிபால் ஆக பணி புரிந்த பொழுது எங்களது பிரின்சிபால்  திருமதி தங்கம் தாமஸ் மாத்யூ அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

திருச்சியில் எங்கள் கல்லூரி முதல்வர் ஏற்ஹார்ட் அவர்கள் நினைவோ நிலைத்து நிற்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலே

ஆமாம்.

குரு ப்ரஹ்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேச்வரஹ
குரு சாக்ஷாத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

தக்ஷிணாமூர்த்தி கடவுள் .

ஆம். ஆலமர் கடவுள் நினைவு வருகிறது.

அவரைத் தொடர்ந்து

காஞ்சி பரமாச்சார்யாள் நினைவு வருகிறது.

எல்லாவற்றிக்கும் தலையாக,

என் அன்னையின் நினைவு வருகிறது. கர்நாடக இசையின் முதல் படியில் என்னை உட்கார்த்தி வைத்தது அவர்  தானே.

அன்னையை அன்றி முதல் ஆசிரியரும்

 எவரும் உண்டோ ?

எனது முதல் ஆசிரியர் .

அன்னை என்று நினைத்த அடுத்த கணம், ஏன் ?
அதே கணமே

அன்னை தெரசா அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

தாம் வாழ்ந்து காட்டி, பிறருக்கும் தான் ஒரு அன்பு வழி வாழ வேண்டும்
எனச் சொல்லாமல், போதித்த

ஆசிரியை அவரே.

அவரை இன்று நான் நினைவு கூருவேன் .

ஆம்.

இப்புவியில், வாழ்ந்து காட்டி, தம்முடன் வாழும் வாழப்போகும் மக்களை
வழி நடத்தச் செல்பவரே ஒரு

நல் ஆசிரியர்  ஆவர்.



 

Monday, August 25, 2014

குருவாய் வருவாய்




குருவாய் வருவாய்

Friday, April 25, 2014

வன தோகை மயிலே

வனத் தோகை மயிலே !!
உன் மேலமர்ந்த
மால் மருகன் முருகன்
புகழ் பாட
வந்திடுவாய் . என் நெஞ்சில்
நின்றிடுவாய். மயிலே..

ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன்.
ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன்.
ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன்.
ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் .

வனத் தோகை மயிலே !!

வயலுர் விராலிமலை வலம் வந்தேன்.
வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன்.
உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன்
உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?

வனத் தோகை மயிலே !!

சூரனை வதைத்திடவே  செந்தூர் சென்றானோ ?
ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று   அமர்ந்தானோ
வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ?
வேதப்பொருள் சொல்லிடவே வேரகம்  நின்றானோ. '.

..வனத் தோகை மயிலே !!

தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க
தாலிச் சரடுடனே பரங்குன்றம் பறந்தானோ ?
காடு மலை சுற்றியபின்  தணிகை மலை அடைந்தானோ
காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ

 வனத் தோகை மயிலே !!

கண்டி வழி செல்கையிலே கண்பட்ட காட்சிகள்
கண்டிரா கொடுமைகள், கண்டு மனம் நொந்தானோ ?
தனக்கென தேசம் இல்லா தமிழருக்கோர் வாழ்வளிக்க
வேலுடனே வந்து அவன் வழி ஒன்று சொல்வானோ ?

வனத் தோகை மயிலே !!

**********************************************************************************

இந்தப் பாடலை சுப்பு தாத்தா பாடுவதை
நீங்கள் அவரது இன்னொரு தமிழ்  வலையான

கந்தனைத் துதி


  இவ்விடத்திலே கேட்கலாம்.

*********************************************************************************

பாட்டு எழுதி நானும் பல காலம் ஆயிற்றே.
என நினைத்தேன்.
அடுத்து மனதில் தோன்றிய வரிகள்

தமிழ்க் கடவுள் முருகன் மேல் அமைந்தன.

Monday, April 21, 2014

தஞ்சையம்பதிக்கு ஒரு தனி மடல்.

பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் நினைவு நாள் இன்று
முக நூலில் கண்ட படம்.

என இன்று 
நினைவு கூர்ந்த 
எனது தஞ்சை அன்பர் நண்பர் 
திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு வணக்கம். 


நலம். நலம் தானே.

தமிழ் உலகம் என்றென்றும் போற்றும் பாரதி தாசன் தமிழ் உள்ளவரை வாழ்வார் என சொல்லியது இன்று உலகெங்கிலும் எதிரொலிக்கிறது.

அவர் நினைவு நாள் அன்று அவர்தம் நினைவைப் போற்றும் வகையில் அவரது பாடல்களையும் அவரது மகன், பேரன்களுடன் தாங்கள் சந்தித்த விவரமும் தங்கள் பதிவிலே கண்டு மிகவும் மகிழ்ச்சி.

கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பாரதி தாசன் பேசி இருக்கிறார் என்ற செய்தியும் எனக்கு தஞ்சை வாசி என்ற முறையிலே மிக்க மன நிறைவு தந்தது.


என்றோ ஒரு கால கட்டத்தில், திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு பா எடுத்து அதற்கு ஆங்கிலத்தில் அதே கருத்தோட்டத்தில் "தித்திக்கும் முத்துக்கள் " என்று ஒரு நூல் வெளி வந்தது  அதற்கு என்னால் இயன்ற ஆங்கில மொழி பெயர்ப்பு செய்தமை குறித்து மகிழ்வுற்ற, எனது குடும்ப நண்பர் காலஞ்சென்ற திரு அரசிறைவன் அவர்கள் பாரதி தாசன் அவர்களின் குடும்ப விளக்கு எனும் பாடல் நூலினை பரிசாகத் தந்தார். அது வரை நான் பாரதி தாசனின் கவித்வத்தை உணர்ந்ததில்லை. அதை படித்து முடித்தபின்னோ, நான் பாரதிதாசன் புலமைக்கு தமிழகம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளது எனவும் உணர்ந்தேன்.

அந்த  நாள் முதல் இன்று வரை

பாரதி தாசனின் தமிழுக்கு யான் அடிமை என்றால் அது மிகை அல்ல.

அவர் செய்த பல தொண்டினிலே எனக்கு மிகச் சிறந்ததாகத் தெரிந்தது சமுதாய சீர்திருத்தம்.

 அதில் ஒரு அத்தியாயமாக, பெண் கல்வி

 பெண்கள் கல்வி எவ்வாறு முக்கியம் என்பதை அவரது குடும்ப விளக்கு எடுத்துக்காட்டுகிறது.  

அதில் இருந்து ஒரு பகுதி.

கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை
நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்!
(குடும்ப விளக்கு)
 முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழு மதி போல் அந்நாட்களில் கவிதை உலகில் பாரதி தாசன் கவிதைகள் பிறந்தன,. அவரின் சிறப்பினை இங்கும் பார்க்கவும்.


நீங்கள் குறிப்பிட்ட பாரதி தாசன் பாடல்களை இங்கே இணைத்துள்ளேன்.

நம்ம வீட்டு தெய்வம்.
எங்கு காணிலும் சக்தியடா.


ஓர் இரவு படத்தில் 
துன்பம் நேர்கையில் 
எம். எஸ். ராஜேஸ்வரி பாடியது. 

பஞ்சவர்ணக்கிளி படத்தில் சுசீலா பாடியது .
தமிழுக்கு அமுது என்று பேர். 


கலங்கரை விளக்கம் என்ற படத்திலோ சங்கே முழங்கு என்று உலகெலாம் தமிழ் சங்கை ஊதி பெருமைபடுபவர் பாடுபவர் சீர்காழி கோவிந்த ராசன் அவர்கள். 
பாரதி தாசனை நாம் இன்று நினைவு கூருவதை
 தமிழுக்கு நாம் குரல் கொடுக்கும் சங்காக கருதுவோம்.

நன்றி வணக்கம்.

சுப்பு தாத்தா.
என்னுடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ( எனது தாத்தா எனக்கு இட்ட பெயர்)

Monday, April 14, 2014

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் 
எங்கள் 
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


Monday, January 13, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்.



எல்லோருக்கும் எங்களது தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

மீனாச்சி பாட்டியின் மாமா வின் பேரன் கௌசிக் இங்கே மிருதங்கம் வாசிக்க கேட்கிறீர்கள்.





vani jayaram  

வலை அன்பர் நண்பர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலையில் சூரிய நமஸ்கார பாடல் ஒன்று பதிவு இட்டு இருக்கிறார்கள்.  பாடலை பாடி விட்டு காத்து இருந்தேன்.

பொங்கல் வரக் காத்து இருந்தேன். அதற்குள் செல் அடித்தது.

தாத்தா உடனே வாங்க.  தாத்தா. பொங்கல் அன்று எங்களை ஆசிர்வதிக்க வாருங்கள் என்றது குரல்.

அம்பாள் அடியாள் அவர்கள் இல்லத்துக்கு சென்றேன். 
அம்மா சுப்பு தாத்தா வந்திருக்கேன் என்றேன். 

ஆஹா. வாங்க. இந்தாங்க சக்கரை பொங்கல் என்று கை நிறைய தந்தாங்க. 

என்ன உங்களுக்கும் கொஞ்சம் வேணுமா ?  இங்கே போங்க. கை நிறைய நீங்களும் வாங்கிக்கங்க.