Pages

Sunday, February 12, 2012

ஒரு கிழவன் கிழவி வாலெண்டைன் டே

Courtesy: http://kavinaya.blogspot.com
    ஏங்க !! எங்க போயிட்டீக !!

    கல்யாணமாயி நமக்கு கிட்டத்தட்ட நாப்பத்தி ஐந்து வருசமாச்சு !!

    என்கிட்டே பிடிக்காதது ஒண்ணு சொல்லுங்க பாக்கலாம் !!

    இருக்கு !  அத சொன்னா நீ கோவிச்சுக்குவே !!

    கோவிச்சுக்கமாட்டேன். சொல்லுங்க !!

   கோவிச்சுக்கறேன் அப்படின்னு சொல்லமாட்டே !  ஆனா கோவிச்சுண்டுடுவே !!

   இல்லே ! கோவிச்சுக்கமாட்டேன்.  சொல்லுங்க...

   அப்படின்னுதான் சொல்லுவே....ஆனா அடுத்த ஆறு நாளைக்கு மூஞ்சியே உம்முன்னு வச்சுப்பே...

   இல்லே..வச்சுக்கமாட்டேன்...சொல்லுங்க...

   அப்படி இல்லாட்டாலும் என்ன நேர்லெ பாக்காம யார்ட்டயோ பேசறாமாரி பேசுவே !!

   அப்படியெல்லாம் பேசமாட்டேன்.  சொல்லுங்க...

   அப்படிதான் சொல்லுவே.. நான் பேச ஆரம்பிச்சா, காது கேக்காத மாதிரி நடிப்பே...

   நான் நடிக்கிறேனா ??   என்ன அப்படி சொல்றீங்க...

   அப்ப நான் நடிக்கிறேனா ?

   நான் ஒண்ணும் அப்படி எப்பவும் சொல்லலீயே !!

   நானும் உன்ன எப்பவும் எதுவும் சொன்னதில்லையே !!

   சொன்னாதானா !!  மனசுலே வச்சுட்டு சொல்லாம இருப்பீங்க இல்ல ...

   அப்படியெல்லாம் ஒண்னுமே இல்ல..

   அப்ப சொல்லுங்க...  

   ஒண்ணும் இல்லன்னு சொல்றேன்னுல்ல...

   இல்லாமயா போகும்.  என்ன பிடிக்கல்லன்னு சொல்லுங்க...

   ஒண்ணும் இல்ல...

   இப்ப ஸ்ட்ராங்கா டீ வேனுமா இல்லயா !!

   வேணும்...  

   அப்ப சொல்லுங்க...

   என்ன சொல்லணும்...

   என்ன சொல்லணுமா !!  இத்தனை நேரம் சொல்லிக்கினு தானே இருந்தேன்.  மறந்து போயிட்டீகளா ?

   ஆமாம்.  வயசாயிடுச்சுலே !! என்ன சொல்லச்சொன்னே ?

   என்கிட்டே என்ன பிடிக்கல்லே அப்படின்னு சொல்லச்சொன்னேன்.

   ஒண்ணு தான் இருக்கு..  அத ரொம்ப சீக்ரெட்டா வச்சுட்டுருக்கேன்.  அதயும் போட்டு உடச்சுட்டா எப்படி !!

   அப்படியா !!   சீக்கிரம் சொல்லுங்க...

   அவ்வளவு அவசரப்பட்டா எப்படி !!

   நானா அவசரப்படறேன்.   அவசரப்படரதெல்லாம் நீங்கதானே !!

   எத வச்சுண்டு அப்படியெல்லாம் சொல்றே !!

  நீங்களே  மனச தொட்டு பாருங்க....

  சரி தொடரேன்...

  என்னய ஏன் தொடறீங்க...

  நீதானே  மனச தொட்டு பாக்கச்சொன்னே !!

  இங்கனே என் மனசு இல்ல இருக்கு !!

  அங்க தானே என் மனசும் இருக்கு !!

  அப்படியா !!

  அப்படியே தான் !!

  நெசமாவா !
 
  நெசம்மா !

   சத்தியமா !!

   சத்தியமா ...

   நம்பலாமா ?

   நம்புன்னுதான் சொல்லிட்டேன்ல...

  எப்ப சொன்னீங்க...

  இப்ப அப்பன்னு சொல்லமுடியுமா என்ன !! எப்பவுமே சொல்லிகிட்டுதானே இருக்கேன்.
 
   சரி சொல்லுங்க...
   என்ன சொல்லச்சொல்றே !!

   எங்கிட்ட புடிக்காதது ஒண்ணு சொல்லுங்க...
   ஒண்ணு சொன்னா போதுமா ?
   அப்ப ரொம்ப ஜாஸ்தியா இருக்குதா என்ன ?
    
   அப்படி ஒண்ணும் அதிகமா இல்ல...
    நாலு அஞ்சு இருக்கும்

    நாலு அஞ்சா !!  என்ன என்னங்க....

    சொல்லிபுட்டுமா !!

    சொல்லுங்க....

    வேணாம். இன்னிக்கு வேலன்டன் டே.  
    நாளைக்கு சொல்றேன்.

    இல்ல... இப்பவே சொல்லிடுங்க...

    இந்தா பாரு... ரொம்ப நச்சரிச்சுக்கினே இருந்தா...
    இருந்தா போய் புகார் பண்ணுடுவேன்...

    யாரிட்டே பண்ணுவீங்க...  புள்ள குட்டியெல்லாம் அயல் நாட்டுலே இருக்கே !!

    இங்கன ஒத்தரு இருக்காங்களே ... நல்லதா பேசி குடும்பத்தை சேத்து வக்கிறாங்களே !!
   
     நீங்க நிர்மலா பெரியசாமி அவங்களயா சொல்றீக...

    ஆமா....   ஒரு நாளைக்கு அவங்ககிட்ட் தான் போய் என் குறைய சொல்லணும்...

    என்ன அப்படி என்கிட்டே குறைய கண்டுட்டீங்க...

    எங்கிட்டேயே சொல்லுங்களே !!

    இல்ல... நீ கோவிச்சுக்குவே...
    கோவிச்சுக்கமாட்டேன். 
மூ ....ஞ்....சி
   ....ய  ...தி ...ரு...பி...

     என்ன தூங்கறீகளா !!

     எப்படிதான் தூங்கறீகளோ !!
    ஒரு விசயம் பேசினோமா அப்படிங்கறதே இல்ல....

     இந்தா.  வள வளா அப்படின்னு பேசிகிட்டே இருக்காதே.  மனுசனைக் கொஞ்சம் தூங்க விடு. நான் ஒன்னும் தூங்கலே. அந்தக்காலத்து வாலண்டைன் பாட்டு கேட்டுகினே கண்ணை மூடிட்டு இருக்கேன்.  எம். ஜி. ஆர் பாட்டு. 
     அப்பாடி என்ன சுகம் என்ன சுகம்....  பானுமதி பாடறா கேளு.
     உனக்குத் தூக்கம் வல்லேன்னா இந்த வலேண்டின் பாட்டை கேளு.  
     அப்ப நான் பேசுறது தான் உங்களுக்கு பிடிக்காதது இல்லையா...
      அதுவும் தான்..  

      என்னது !!!

      மனுஷன் இன்னிக்கு வேலன்டைன் டேக்காவது இந்த காதல் பாட்டை கேட்டுண்டே தூங்க விடேன் !!
       *********************************************************************

    ஒரு கிழவன் கிழவி வாலெண்டைன் டே
    சுபத்ரா மேடம் அவங்க பதிவ பாத்த உடனே மனசிலே பதிவானது. 

17 comments:

  1. அருமை:)! வாழ்த்துகள் இருவருக்கும்!!

    ReplyDelete
  2. உங்களுக்கு விருது ஐயா, என் வலைத்தளத்தில்.
    அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
    நன்றி ஐயா.

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அழகு காதல் ஜோடி.சுப்பு தாத்தா இப்பிடியே இருங்க.
    சந்தோஷமாயிருக்கு.பாட்டிக்கும் சொல்லுங்க !

    ReplyDelete
  4. இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் கூட... கோச்சுப்ப! ல்லாம் இருக்கா?
    :-))

    ReplyDelete
  5. ஆஹா... இப்படி இல்ல இருக்கணும் வாலெண்டைன்ஸ் டே....

    சுவையாக இருந்தது உரையாடல்கள்... இப்பல்லாம் இத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஐந்து-பத்து வருடங்களிலே இது தொடங்கி விடுகிறது :)

    ReplyDelete
  6. கலக்கல்ஸ் தாத்தா! பாட்டிக்கும் உங்களுக்கும் அன்பான வாழ்த்துகளும் பணிவான வணக்கங்களும்.

    ReplyDelete
  7. திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வருகைக்கு நன்றி.

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    உண்மையிலே வாலன்டைன் ஒரு தொடர்கதை.
    ஒவ்வொரு அவதாரத்திலும் பெருமாளும் தாயாரும் சதிபதிகளாகத் தோன்றுவது போலே !!
    இந்த பந்தத்திற்கு ஒரு அந்தம் இல்லை.
    வயதும் இல்லை.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  8. சுபத்ரா அவர்கள் வருகைக்கு நன்றி.
    உங்கள் பதிவு தான் என் இந்த பதிவினை எழுதத் தூண்டியது.
    அது சரி.
    : - என்றால் என்ன பொருள் ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  9. விருதா !! உங்களுக்கா !!

    ஆமாண்டி...எனக்குத் தான். எனக்கே தான். கோமதி அரசு தராங்க..

    என்னவா இருந்தாலும் எனக்குப் பாதி தந்துடணும்.

    முழுசயுமே தந்துடறேன்.

    இந்த வாய் வீச்சுக்கு மட்டும் என்னிக்கும் குறைச்சலே இல்லை.

    மீனாட்சி பாட்டி.
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  10. தமிழ் மண்ணில் மேல் உள்ள காதலை விடவா
    எங்கள் காதல் பெரிது ?

    வருகைக்கு நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  11. ஹேமா அவர்கள் தமிழ் உணர்வு

    தமிழ் மண்ணில் மேல் உள்ள காதலை விடவா
    எங்கள் காதல் பெரிது ?

    வருகைக்கு நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  12. வெங்கட நாகராஜ் அவர்கள் வருகைக்கு நன்றி.

    ஆசை அறுபது நாள்.
    மோகம் முப்பது நாள், என்பார்கள்.

    வேலன்டைன் டே அன்று தெரிவதெல்லாம்
    நாம் உணர்வதெல்லாம்
    இல்லான், இல்லாள் இவர்களிடையே
    கனியும் காதல்
    காலத்திற்கு அப்பாற்பட்டது என.
    நீங்கள் அப்புசாமி, சீதா பாட்டி வாக்குவாதங்களைப்
    படித்திருப்பீர்களே !!
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  13. கலக்கல்ஸா !!

    உங்கள் ஊருக்குப் பக்கத்தில் வந்தபோது எங்களுக்கு
    கல்ஸா என்று ஒன்று தந்தார்கள்.

    இனிப்பு, துவர்ப்பு, உரைப்பு, புளிப்பு, போன்ற அறுசுவைகளும் இருந்தன.

    இந்த அறு சுவைகளும் கலந்த வாழ்வு ஒரு கல்ஸா என்றால்
    அது கலக்கல்ஸ் தான்.

    தேங்க்ஸ் கவி நயா.

    அது சரி !! வேலன்டைன் டே அன்று நடந்த உங்களது உரையாடல்களை எழுதுங்களேன்.

    ஜெனரேஷன் கேப் எத்தனை என்று தெரிந்துகொள்ளலாம்.

    சுப்பு ரத்தினம்.
    ஸாரி. சுப்பு தாத்தா.

    ReplyDelete
  14. Happy Valentines' Day to Meena paati and Subbu thaatha :-)

    ReplyDelete
  15. என்றென்றும் வளமான வாலெண்டைன் டே வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. பதின் சுவாரசியம் பற்றிக்கொண்டது எனக்கும் முடிவு கலக்கல்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி