Pages

Thursday, September 01, 2011

கற்பக விநாயகக்..கடவுளே போற்றி... பாரதி பாடல்.


கற்பக விநாயகக்  கடவுளே போற்றி 
சிற்பர மோனத் தேவன் வாழ்க 
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க 
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன் 
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான் 
சந்திர மவுலித் தலைவன் மைந்தன் 
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம். 
குணமதில் பலவாம் கூறக் கீளீர்.
உட்செவி திறக்கும் அதன்கண் ஒளி தரும். 
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும் 
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம் 
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம் 
விடத்தையும் நோவையும் வெம்பகை எதனையும் 
துச்ச மென்று எண்ணித் துயரிலாது இங்கு, 

நிச்சலும் வாழ்த்து நிலைபெற்று ஓங்கலாம். 
அச்சம் தீரும், அமுதம் விளையும். 
வித்தை வளரும், வேள்வி ஓங்கும்.
அமரத் தன்மை எய்தவும் 
 இங்குநாம் பெறலாம் இது உணர்வீரே.

மகாகவி சுப்பிரமணிய பாரதி பாடல்.