Pages

Wednesday, November 21, 2012

யார் திருடர்கள் ?

    யார் திருடர்கள் ?

    வலைச்சர வாயில் வழியே
    வீதி வழி சென்றவனை
    வழி மறித்தது

  மஞ்சள் நகரின்
    மாலை மயக்கத்திலே
    மயங்கி "

     உள்ளே சென்றால்.....................;
  
     மருண்டேன்.  திகைத்தேன்  திடுக்கிட்டேன்.

    ஒரு அறிவிப்பு பலகை.   
  (  காண இதனை கிளிக்கிடுங்கள்.    )

//   வங்கிகளும் ஏடீஎம்களும்
 நிறைந்திருந்த சாலையில்
 "திருடர்கள் ஜாக்கிறதை"//


   திருடர்கள் எங்கு தான் இல்லை ?

     ஆடித் தள்ளுபடி என
   ஆசை பல காட்டி
     ஏமாந்தவர் தலையிலே
    எதைஎதையெல்லாமோ கட்டும்
    நிறுவனங்கள் !!

 
    இல்லாத வியாதிக்கு
   ஈரேழு சோதனைகள்
    இரவொன்று பகலொன்று என
    இருபத்தைந்து  மருந்துகள்.
    மருந்திலே கலப்படம் செய்யும்
    மனச்சாட்சியிலா வியாபாரிகள்.

     மருண்டவனை
     மயானத்தை நினைக்கவைக்கும்
     மருத்துவர்கள் !!

      வைத்தியன் பின்னே வரும்
      வைதீகன் கூத்துக்கள்.
    
      
      வாய்தா கேட்பது தவிர
      வேறெதுவும் தெரியாத‌
      வக்கீல்கள்.

      வானத்து கோள்களையும்
      பூமிக்கு இழுத்து வந்து
      வையத்தில் உள்ளோரை
      பயமுறுத்தும் சோதிடர்கள்.

             
      வாடகைக்கு இருப்பதையே
      விற்பனை செய்துவிடும்
      வாய்ச்சொல் வீரர்கள்.
       தரகர்கள் !!

      இவர்கள் எல்லாம் யார் ?
      இவர்களும் ........   ?

      இல்லை , இல்லை...!  

    உள்ளதைத் திருடுபவர் ஒரு பக்கம்.
    உள்ளத்தைத் திருடுபவர் இன்னொரு பக்கம்.
    உலகமே திருடுபவரின் கூடாரம்.

     
      இன்னொரு கோணத்தில் பார்த்தால்,
    
      அம்பது வருசம்  முன்னே
       அம்மா சொல் கேட்காமல்
     
      இவள் இல்லேல்
      இனி நான் இல்லை என
      இன்ச் இன்சாய் நம்ப வைத்த என்
      இல்லத்தரசியுமே
      திருடிதான்.

      அழகு தமிழ்ச் சொற்கள் கூட்டி
       அமுதான  கவிதை ஈந்து,  எமை
       சிந்தனையில் சிறைப்படுத்தி
       விந்தைகள் பலசெய்யும்
       வலை வித்தகருமே எம்
       உள்ளங்கவர்
       திருடர்கள் தானோ !!!

      யானறியேன் பராபரமே !!''

     

    
    
    
   
      
    
    

   

    

            .
    
 

4 comments:

  1. உலகமே திருடுபவரின் கூடாரம்.

    அழகாக அத்தனை திருட்டையும் பட்டியலிட்டுவிட்டீர்கள் அருமை அருமை.

    ReplyDelete
  2. அழகாக ரசிக்கும்படி முடித்துள்ளது அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஒரே அர்த்தத்தை கருதி நான் குறிப்பிட்டிருந்த "திருடர்கள்" என்ற வார்த்தையின் அத்தனை அர்த்தங்களையும் காட்டிட தாங்கள் சொன்னது போல் எனது வலைப்பூவின் பின்னூட்டத்தில் இடம் போதாது தான் ஐயா!!! பகிர்வுக்கு நன்றி ஐயா!

    //////
    அழகு தமிழ்ச் சொற்கள் கூட்டி
    அமுதான கவிதை ஈந்து, எமைசிந்தனையில் சிறைப்படுத்தி
    விந்தைகள் பலசெய்யும்
    வலை வித்தகருமே எம்
    உள்ளங்கவர்
    திருடர்கள் தானோ !!!
    /////
    இது உண்மையெனில் தாங்களும் திருடர் தான்! என்னிடம் சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை!

    ReplyDelete
  4. நன்றாகச் சொன்னீர்கள் தாத்தா! உலகமே திருடர்கள் வசம்! :)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி