நீங்கள் சிரியுங்கள்.
உங்களோடு சிரிக்க
உலகத்தில் ஒரு நூறு பேர் இருப்பர்.
ஒரு தடவை அழுது பாருங்கள்.
ஒருவனுமே
அடுத்த முறை
அணுகமாட்டான்.
தோழமையுடனும் ஏழைமை பேசேல்
ஏழைமை என்பது பொருள் இல்லாமை மட்டுமா ?
பொருள் குவித்திருப்பான் ஒருவன்.
பாய்க்கு பதிலாக அவனிடம் பஞ்சு மெத்தைகள் ஏராளம்.
மெத்தென படுத்தாலும்
நித்தமுமே தூக்கமில்லை.,
நிம்மதி இல்லை.
நட்புகள் எனக்கு ஆழி
அலைகள் போல என
ஆரவாரித்தான் அடுத்தவன்.,
பொருள் இழந்தான் ஒரு நாள்.
புன்னகையும் இழந்தான்.
இருளோ இது என மருண்டான்.
இனிய நண்பர்களை அழைத்தான்.
இருக்குமிடம் தெரியவில்லை.
அருள் இருப்பதாகச் சொல்லி அடுத்தவன்
அனைவரையும் கவர்ந்தான்.
அவனியில் உள்ள சுகம்
அனைத்தையுமே பெற்றான்.
அகலக்கால் வைத்தான்.
அடுத்த படியிலே
தடுக்கி விழுந்தான்.
அறிந்தவனோ ...
இருப்பதே இன்பமென
இல்லாதது வேண்டேன் என
இல்லத்து அரசியுடன்
இருப்பதை நுகர்ந்தான்.
இனிமையைக் கண்டான்.
உலகத்து நியதி இது.
உண்மையும் இதுவே ஆம்.
சற்றே
சிரிக்க,
சிந்திக்கவும் செய்ய,
சந்தியில் நடந்த ஒரு காட்சி இதோ.
நல்ல கருத்துக்கள்...
ReplyDeleteசிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு...
அருமையான வரிகள் ஐயா! கருவும் கூட! இருப்பவனுக்கும், இருப்பதையும் இல்லாமல் காட்டிக்கொண்டு எளிமையாய் வாழ்பவனுக்கும் உள்ள வித்தியாசம்!
ReplyDeleteஐயா தங்களது இந்த பதிவினை நான் வலைச்சரத்தில் தாங்கள் குறிப்பிட்ட போதே படித்தேன் ஐயா! கருத்துரை இட தான் தாமதம் ஆகிவிட்டது மிக மெதுவான இணைய இணைப்பு என்ன செய்வது! மன்னியுங்கள்!!
மிகுந்த சந்தோஷம் ஐயா தங்களது அறிமுகம் கிடைத்ததில்! தாங்கள் சொன்னது போலவே ஒரே கருத்தினை இருவருமே ஒரே நாளில் எழுதியது எமக்கும் ஆச்சர்யம் அளிக்கிறது!
தங்கள் வீட்டு எஜமானி அம்மா(நிதித்துறை மற்றும் நீதித்துறை பொறுப்பாளர்) அவர்களுக்கு என் அன்பு கடந்த நன்றிகளும் விசாரிப்புகளும்! சொல்லிடுங்கோ ஐயா!
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பல.
ReplyDeleteவலைச்சரத்தில் நீங்கள் பதிவிட்ட ஏழு நாட்களுமே
முக உரையாக நீங்கள் எழுதியது எல்லாமே
அகத்திலே அன்பும் அருளும்
முகத்திலே பண்பும் பரவ
வழி வகுத்தன என்றால் மிகையாகாது.
வாழ்க்கையில் பல
அளிப்பன சில. அழிப்பன சில.
கூட்டலும் பெருக்கலும் அளிப்பன என்றால்
கழித்தலும் வகுத்தலும் அழிப்பனவே.
அழிப்பன என்றாலும் நாம்
அழையாது வருவதில்லை.
ஏன் எனின்,
வகுத்தான் வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
என்பது போல,
வாழ்வின் மாலைப்பொழுதிலே
எல்லாமே
கிறுக்கல்கள் தான் எனப்புரிகின்றது.
நன்றி.
சுப்பு ரத்தினம்.
மிக்க நன்றி ஐயா!
ReplyDelete