Pages

Friday, January 30, 2015

தியாகி கள் தினம்.




 நீ இன்னொரு தரம் வந்தாலும், உன்னாலேயே  இந்த நாட்டை சீர் படுத்த முடியுமா அப்படின்னு சந்தேகமா கீது.


 தியாகி கள் தினம்.



Wednesday, January 14, 2015

பொங்கலோ பொங்கல்.

பொங்கல் வாழ்த்துக்களை எப்படி எல்லாம் வலை நண்பர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் !!!

பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடி மகிழ்கிறார்கள் என்று பார்க்க வீடு வீடாக விரைந்து போனேன்.
முதலில் நான் பார்த்தது சசி கலா மேடம் அவர்கள்.
+Sasi Kala
 சசிகலா அவர்கள் பிரமிக்கத்த ஒரு பொங்கல் கவிதை எழுதி அசத்தி  இருக்கிறார்.
கவிதையைக் காண இங்கே சொடுக்கவும். பாடலை சுப்பு தாத்தா பாட கீழே சொடுக்கவும்.
sasikala www.veesuthendral.blogspot.com அடுத்து, இனியா அவர்களும் தனது காவியக்கவி எனும் வலையிலே பொங்கலை மகிழ்வுடன் கொண்டாட, எனக்கு வரம் தந்து அருள்வாயே என்று ஒரு மிகவும் அழகான பாடலை பொழிந்து  வாணி தேவியின் அருள் வேண்டி இருக்கிறார். அவரது வலை இங்கே.www.kaviyakavi.blogspot.com

 பாட்டு சுப்பு தாத்தா பாட கீழே.

  +
மூன்றாவதாக க்ரேஸ் அவர்கள். அயல் நாட்டில் கணினியில் பணி புரியும் அவர்கள் உழவுத் தொழிலின் பெருமை குறித்து பாடுவது இங்கே.
 உழவின்றி உயிருண்டோ சிந்திப்பீரே
உழவரைப் போற்றவே நினைத்திடுவீரே!

எத்தொழிலும் சிறப்பாம் உலகத்தாரே
இத்தொழில் முதன்மையாம் உணர்ந்திடுவீரே!

இலைதளை கொண்டே வீடுசெய்யலாம் - உழவு
இல்லையென்றால் எதை உண்பீர் தெளிந்திடுவீரே!

அறுவடைத் திருநாளாம் பொங்கல் இன்று
அறுசுவை உணவோடு மகிழ்ந்து கொண்டாடுவீர்

உழவும் உலகமும் தழைக்கவே போற்றுவோம்
உலகம் சுற்றும் மஞ்சள்  கதிரவனை!


வாழ்த்து அட்டைகள் இல்லாத பொங்கல் அந்தக் காலத்தில் இல்லை.
ஒரு ரூபாய் முதல் ஒரு நூறு ரூபாய் வரை வித விதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள்.
அவை பொங்கல் முடிந்தபின்னும் அடுத்த பத்து நாட்களுக்கு தபால் காரர் தினம் ஒன்றாக இரண்டாக கொடுப்பார்.

எந்த ஒரு தபால் அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும். இவற்றை வீதி வாரியாகப் பிரிப்பதற்கே அவர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனசாக தரவேண்டும்.

வாழ்த்துக்கள் வாங்க எத்தனை நேரம் செலவிட்டு இருப்போம் !!

ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கிலே விற்ற இந்த வாழ்த்து அட்டைகள் இன்று இல்லையே என்று பரிவுடன் ஒரு ஆதங்கத்துடன் கேட்பது குமார். 
அன்று வெளிவந்த மூன்று அட்டைகளை இன்று அவர் தம் வலையிலே வெளியிட்டு இருப்பது எனக்கு 1960 ம் வருடங்களை நினைவு படுத்துகிறது.
அந்தக் காலத்துலே இந்தக் கிழவிக்கு எத்தனை வண்ண வண்ண வாழ்த்து மடல் அனுப்பி இருப்பேன். ஏதாவது ஒன்றாவது கையில் வைத்து இருக்கிறாளா எனத் தெரியவில்லை.

+Ramani S

தமிழர் திரு நாளிதன் உட்பொருள் என்னும் தலைப்பிலே மதுரை ரமணி எஸ். அவர்கள், நாம் இருப்பதின் காரணம் யார் என்ன எனத் தெரிந்து அவர்களுக்கு நன்றிக் கடன் சொல்லவே இந்த பொங்கல் திரு நாள் என்று சொல்கிறார். அதுவும் சரிதான்




இளங்கோ அவர்கள் தமிழ் இந்துவின் பொங்கல் மலரை வர்ணித்து இருக்கிறார். மலரை நானே வாங்கி படித்த உணர்வு வந்தது.
+Gomathy Arasu
திருமதி கோமதி அரசு அவர்கள் பதிவுக்குச் சென்றேன். எங்கள் தஞ்சை கிராமங்களுக்குச்  சென்று அங்கு உழவு த்தொழிலும் உழவர் வாழ்வும் ஒன்று சேர இருப்பதை நேராக பார்ப்பது போன்று இருக்கிறது.  படங்கள் அசத்துகின்றன. அதைத் தொடர்ந்து பண்டிகையின் சிறப்பும் வர்ணிக்கப்படுகிறது.


+Karanthai Jayakumar
கரந்தை ஜெயகுமார் அவர்கள் வாழ்த்துகிறார்.
ஜி.எம்.பி. வாழ்த்துகிறார்.

அருணா செல்வம் எழுதிய கவிதை பொங்கலுக்கு முதல் நாள் போகியில் எதை கொளுத்த வேண்டும் என குறிப்பாக சொல்கிறது. சரியான அறிவுரை தான். ஆனா கேட்கவேண்டிய மக்கள் கேட்கணுமே !!


மேலும் இவர் எழுதிய ஒரு வெண்பா படித்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
அதில் ஈற்று வரிகள் இதோ:


வன்பகை ஓடிட, வஞ்சனை இன்றித்

தெளிதமிழ்ப் பேசிட, தெம்புடன் நாமும்

களிப்புடன் ஆடிட, காதலரும் கூடியே

போற்றிடும் பொங்கலாய்ப் பொங்கு!
(பஃறொடை வெண்பா)
 பொங்கல் பால் பொங்குவது போல், தமிழர் உள்ளமெல்லாம் உவகையினால் பொங்கவேண்டும் என்று கூவி அழைத்து இருக்கிறார், தமிழர்களை. 
உணர்வு உள்ளிட்ட கவிதை இது. பார் முழுவதும் இக்கவிதையை பாராட்டும். ஐயமில்லை. 
 +kummachi K
கும்மாச்சி போகி பண்டிகை, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற விளக்கம் தந்துவிட்டு, போகிற போக்கில், போகி அன்று பழைய பஞ்சாங்கங்களை கொளுத்தவேண்டும் என்கிறார்.  சரிதான். வீட்டிலே பாதி இடம் காலி ஆகி விடும். எல்லாம் நன்மைக்கே.
 **********************************************************
+Thenammai Lakshmanan
சிவப்பரிசி பனை வெல்லப் பொங்கல் செய்வது எப்படி என திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் குமுதம் இதழில் குறிப்பு தந்து இருக்கிறார்கள் . அவர்கள் வீட்டுக்கு சென்று ஒரு வாய் பொங்கல் சாப்பிடலாம் என்று மனதில் தோன்றியது.  ஒரு நாலு கரண்டி பொங்கல் சின்னதா பார்ஸல் செய்து இந்த தாத்தாவுக்கு அனுப்பக் கூடாதோ !!
*****************************************************
+பார்வதி இராமச்சந்திரன்.
பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் பொங்கல் வாழ்த்து சொல்லி சக்கரை கட்டிகள் செய்வது எப்படி என்றும் எழுதி உள்ளார்.   எல்லோர் வீடுகளிலும் பாலுடன் சந்தோஷமும் சேர்ந்து பொங்கட்டும் என்று அவர் எழுதியதைப் படித்து மனம் நெகிழ்ச்சி அடைந்தது.
அவரது பதிவிலே ஒரு கோலம் அழகோ அழகு.
புலவர் இராமானுஜம்  வலைக்கு  சென்றேன்.
அவர் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார்.

மின்னல் வரிகள் முன்னே நின்றேன். பதிவர் மாநாடு தேவையா என்ற கோபத்திலே இன்னமும் இருக்கிறாரோ ?  சார்...சார்... பொங்கல் இனிய பொங்கல் சாப்பிடுங்க சார்.

துளசி கோபால் அவர்கள் இன்னமும் பாண்டி பஜார் லேயே இருக்கிறார். கோபால் இளநீர் குடிக்கிற போடோ சூப்பர்.

 நாளைக்கு பொங்கல் வாழ்த்து சொல்வார்கள்  என நினைக்கிறேன்.
 ****************************************************
+chandrasekaran narayanaswami

 சென்னை பித்தன் வீட்டுக்கு சென்றேன்.
அவரோ எதையோ மும்முரமாக எழுதிக்கொண்டு இருந்தார். என்னவென்று எட்டி பார்த்தேன்.
பெரும்பானமையானவர்களுக்குச் சர்க்கரை வியாதி;சர்க்கரைப் பொங்கலை வளைத்துக் கொண்டு சாப்பிட முடியாது.அது தவிர ,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்டரால் எல்லாம்.நெய் பெய்து முழங்கை வழி வாரஎனபதை நினைத்துகூடப் பார்க்க முடியாது.சம்பிரதாயத்துக்கு ஏதோ இனிப்பு குறைந்த,நெய்யில்லாத பொங்கல் சாப்பிட வேண்டியதுதான்.



எங்கள் காலனியில் மிகவும் சம்பிரதாயமான ஒரு வீட்டிலிருந்து கொஞ்சம் பொங்கல் நாளை வீடு தேடி வந்து விடும்



ருசிக்குத்தானே அது பசிக்கல்லவே!
சார் !1 எனக்கு சக்கரை வியாதி சுத்தமா கிடையாது. நான் எப்ப வரட்டும் ? ஒரு பானை நிறைய பொங்கல் தந்தாலும் பத்தே நிமிசத்தில் சாப்ப்பிட்டு விடுவேன். என்று சொல்லணும் .
*****************************************
+Vani Muthukrishnan
வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டே ஒரு கோலம் வரைந்து இருக்கிறார்.
 இவரது கோலங்கள் எல்லாமே பிரமிக்கத் தக்கவை.
காணக் கண் கோடி வேண்டும் என்றால் உண்மை.

 எல்லா நலன்களும் தரும் ஆதவனைப் போற்றும் திருநாள் இது.
உழவின் பெருமையை போற்றும் தினம் இது.

இந்த நன்னாளில் எல்லோரையும் வாழ்த்துவோம்.

பொங்கலோ பொங்கல்.