Pages

Tuesday, December 31, 2013

புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

Happy New Year 2014

வலை நண்பர்கள் அனைவருக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள். 

படத்தின் மேல் எலியை அமுக்க படம் பெரிசாகும் .
(படத்தை பெரிய அளவில் பார்த்து உங்கள் ரசிகர் மன்றம் எது என்று பாருங்கள். உங்களைத் தொடருபவர் எண்ணிக்கையை வைத்து கண்டு பிடிக்கலாம் )


நான் தினம் சென்று படிக்கும் பல வலைப் பதிவுகளை  குறிப்பாகவும் சிறப்பாகவும் மேலே காணலாம். எங்கே நீங்கள் இருக்கிறீர்கள் ?

கண்டு பிடியுங்கள். 

பலரது வலைகளை அவர்தம் ரசிகர்களைக் கொண்டு காணலாம். அந்த வலையின் எண்ணிக்கையை வைத்து அந்த வலை யாரது என்றும் அறியலாம். குறிப்பால் நான் உணர்த்தும் பாபுலர் வலை பதிவுகள். நான் வழக்கமாக தினசரி பார்க்கும் ஒரு 40 வலைகள் இங்கு சங்கமம். 

இவ்வலைகளில் சிலரது புகைப்படங்கள் கிடைப்பதால் இட்டு இருக்கிறேன். சிலரது அறிமுகப் படங்களும் அவர்கள் யார் என உரைக்கும். 

உதாரணம் : பூனைக்குட்டி. 

நான் தமிழிலும் ஆங்கிலம், மலையாளம், சம்ஸ்க்ருதம்,ஹிந்தி, உருது என்னும் மொழிகளில் படித்தாலும் 70 விழுக்காடு நான் தினம் படிப்பது தமிழ் வலைப்பதிவுகளே. 

ஆயிரத்திற்க்கும் மேலே பதிவுகள் இதுவரை  படித்திருக்கிறேன்.இவற்றில் பலவற்றினை இன்னமும் தொடர்கிறேன்.  ஒரு நாளைக்குஏறக்குறைய 40 முதல் 50 பதிவுகள் படிக்கிறேன். 30 முதல் 40 பாடல்கள் பல்வேறு மொழிகளில் கேட்கிறேன். நல்ல தமிழ் கவிதையாக இருந்தால், அது மரபாக இருந்தாலும் சரி, மரபு சாரா கவிதையாக இருந்தாலும் சரி, 2 பாடல்களாவது இசை வடிவம் கொடுத்து பாடி அதை யூ டயூப் ல் இணைக்கிறேன். 

தினமும் குறைந்தது இரண்டு புது பதிவாளர் வலைக்குச் செல்கிறேன்.

ஒரு வலைப் பதிவரை அவரது ரசிகர்கள் மூலம் அறியலாம்
Tell me your friends and I shall tell you who you are என்பார்கள். 

ஒரு இலக்கிய வலைப் பதிவாளருக்கு இலக்கிய சார்புடையவர் தான் அதிகம் பாலொயார்ஸ் இருப்பார். 

அது போன்று,பல்வேறு துறைகள்:

 சினிமா, சங்கீதம், ஆன்மிகம், நகைச்சுவை, மொழி இலக்கணம், சித்திரம், சரித்திரம், சமையல்,சோதிடம்,  மருத்துவம்,மாந்திரீகம்,  கவிதை, சுற்றுலா, எல்லாமே. இதைத் தவிர வேறு அலைகளிலும் பல பதிவுகள் உள்ளன.

எல்லாப் பதிவாளர்களுக்கும் தனித்தனி ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. 30 முதல் 3000 வரை தொடர்பாளர்கள். ஒவ்வொருவரும் கோ.ப.செ அந்தந்த வலையின் .

சிலர் பதிவுகளில் பாலாபிஷேகமும் நடக்கிறது.  சில வற்றில் விசில் சத்தம் கேட்கிறது. எல்லாமே சுவை சுவை .

அறுசுவை உணவு. என் வயிறு ஆல்வேஸ் புல். 

இவை யாவற்றையும் நான் தினம் தினம் படிக்கிறேன். பல பதிவுகளுடன் நான் பகல் இரவு என்று பாராது தொடர்ந்து வருகிறேன். ஏன் தான் இவன் வந்து பின்னூட்டம் போடுகிறானோ எனக்கு தொல்லை கொடுக்கிறானோ என்று கூட சிலர் நினைக்கலாம். நகைக்காக இடும் பின்னூட்டம் ஒன்று அண்மையில் புகை கிளப்பி விட்டது.

பின்னூட்டம் ஒன்று போட்டு விட்டு அதற்கு எப்படி வலைப்பதிவாளர் பதில் தருகிறார் என்பதில் ஒரு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

நமது பின்னூட்டத்தை முழுவதும் ஒத்துக்கொண்டு போகாதவரும்  நாகரீகம் கருதி நன்றி எனும் மூன்றெழுத்தை பார்த்தபின் தான்  மூச்சு வருகிறது. சில நேரங்களில் என்ன வருமோ என்ன வருமோ என்ற எதிர்பார்ப்பிலேயே நேரத்துக்கு மருந்து சாப்பிட மறந்து போய்  விடுகிறது.

அண்மையில் ஒருவர் ஒரு பதிவில் இது சுப்பு தாத்தா பின்னூட்டம் தானா என ஐயம் கொண்டார்.

எது எப்படி இருந்தாலும், 

உங்கள் பதிவுகளே எனது பொழுது போக்கு என்று நான் சொல்லவில்லை. என் மூச்சே அது தான். 

என்னப்ப்போல இருக்கும் பல மூத்த குடிமகன்களுக்கும் ( ஐ மீன் சீனியர் சிடிசன்ஸ்) இதுபோலத்தான் இருக்கும்.

உங்கள் பதிவுகள் இல்லையெனின், என் வாழ்வு வெறுமை ஆகிவிடும் . நீங்கள் எல்லோரும் தொடர்ந்து எழுத வேண்டும்.


உங்கள்  எல்லோருக்கும் நான் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி பூரிப்பு 
அடைகிறேன். 

உங்கள் மூலம் உங்கள் ரசிகர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

You have a power house inside of you. You are a walking power house. +Sri Sri Ravi Shankar 

இடம் இல்லாமையால், மேலே படத்தில்  விட்டுப்போன பல நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக,

செல்லப்பா யக்ஞசாமி. அவர்கள். வை.கோ. அவர்கள். தி.இளங்கோ அவர்கள், ஜி.எம்.பி. அவர்கள். இராமானுசம் அவர்கள், சென்னை பித்தன் அவர்கள்,
மதுரை இரமணி அவர்கள்,ஆரண்ய விலாஸ் ராம மூர்த்தி,  கௌதமன் போன்ற என் வயதினருக்கும்,

உலகத்தின் மூலை முடுக்கில் இருக்கும் எல்லா
சிறிசுகளுக்கும்  பெரிசுகளுக்கும்,
சின்ன சின்ன குழந்தைகளுக்கும்,
என் வலை நண்பர்களின் பேரன் பேத்திகளுக்கும்,
என் இளம் வலை நண்பர்களின் குடும்பத்தாருக்கும்,


இதில் விட்டுப்போன நூற்றுக்கணக்கான என் பழைய கால நிறுவன மற்றும் என்னுடன் பயிற்சி கல்லூரியில் துணையாக இருந்த ஆசிரியர்கள், நண்பர்கள் , கல்லூரி நண்பர்கள்,

 சீப்ராஸ் பார்க்
காலனி நண்பர்கள், அரட்டையாளர்கள், மட்டுமின்றி,

அவ்வப்போது என்னுடன் பேசிக்கொண்டே வரும், 
ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள்,

 இதயம், மூளை, வயிறு,கல்லீரல், சிறுநீரகம், எலும்பு, பல், காது , கண்  துறை மட்டுமன்றி மற்ற துறைகளிலும்  72 ஆண்டுகளாக என்னை பொறுமையுடன் சோதித்து மருந்து தரும் மருத்துவர்கள், 

எனது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்(இவர்களில் பலர் இன்னமும் இவ்வுலகத்தில் இருப்பாரோ என்றே தெரியவில்லை.) ,மற்றும், என்னை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த எனது  மாணவர்கள்,சக ஊழியர்கள், எனக்கு இன்னமும் பென்ஷன் தந்து கொண்டு இருக்கும் எங்கள் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், 

எங்கள் பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய 
ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்களுக்கும் அவரது சிறந்த சீடர்களுக்கும்

அவர்களிடம் புரிகிறதோ, புரியல்லையோ என்று கவலை படாமல்,வேதம் பாடம் கற்க வரும் என்னைப்போன்ற கிழடுகளுக்கும்,

வாழ்க வளமுடன் என போதிக்கும் பெரியவர்களுக்கும்


நடுச் சந்தியில் ரோடை கடக்க முடியாது தவிக்கும்போது எனை அக்கறையுடன் அக்கரை சேர்க்கும் நல்ல உள்ளங்கள் எல்லோருக்கும் , 

கோவில்களில், குளங்களில் என்னை பிரதோஷ காலங்களில் பார்த்து ஹௌ ஆர் யூ கேட்கும் நண்பர்களுக்கும் , சனிக்கிழமை தோரும் அனுமார் கோவிலில் சிரத்தையுடன் அர்ச்சனை செய்யும் பட்டர்களுக்கும், வெறும் தேங்காயை உடைத்து கற்பூரம் மட்டும் காட்டி விட்டு, அர்ச்சனை செய்ததாக சொல்லும் அர்ச்சக சகோதரருக்கும், 

ஒவ்வொரு நாளும் விடியும்போதே இது நல்ல நாளாக இருக்கவேண்டும் என எங்கள் குல தெய்வம் மாந்துரையானை எண்ணி நான் கணினியைத் திறக்கும்போது எல்லாம் நல்ல துதிகளையும் நல்ல படங்களைபும் இடும் வலைபதிவர் , 

இரண்டு நாட்கள் முன்பு, அந்த மாந்துறை கடவுளை, கருப்பனை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய  என் வலை நண்பர்.

திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும்,  

எங்கள் ஊரு தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் கரந்தை ஜெயகுமார் அவர்களுக்கும் துறை செல்வராஜ் அவர்களுக்கும், 

எனது தஞ்சை வீட்டில் நான் செய்யவேண்டியவற்றை செய்திடும் நண்பர் திரு ஆராவமுதன் அவர்களுக்கும், எங்கள் தஞ்சை வீட்டு காம்பௌண்ட் வாசலில் இருக்கும் வில்வ மரத்தடி பிள்ளையாருக்கு, சிவனுக்கு, தினம் தீபம் ஏற்றி வைக்கும் அம்புஜா பாட்டிக்கும், 

வருடத்திற்கொரு முறை காலண்டர் டைரி கொண்டு வந்து தரும் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் 

மத்தியானம் சாப்பிட்டு கண் அசரும்போது , க்ரெடிட் கார்டு வேண்டுமா என்று என் பிளட் பிரசரை டபிலாக்கும் அனாமத்து பேர்களுக்கும்,

என்னிடம் ஜோதிடம் ஜாதகப் பொருத்தம்  பார்க்க வந்து ஒரு மூணு மணி நேரம் , எனக்கு ஒரு வால்யூ இருப்பதாக நானே நினைத்துக்கொள்ள வகை செய்யும், நன்பர்களுக்கும்,

அவ்வப்போது நல்லா இருக்கியா என்று செல்லடிக்கும் செல்வங்களுக்கும் 


என் உற்றார், சுற்றத்தார், அனைவருக்கும்,

எனது மகன், மகள்கள் ,
எங்களது மாப்பிள்ளை களுக்கும்,
மருமகளுக்கும்
மற்றும்

என் செல்லப் பேரக் குழந்தைகள்
சஞ்சு, அக்ஷயா,பிரணாவ்,தினேஷ், பிரஜ்வல்

இன்னும்,

என் பாடல்களை பொறுமையாக தினசரி கேட்கும்
மதுரை மீனாச்சி மாதிரி என்னை ஆண்டுகொண்டு இருக்கும்
என் தர்ம பத்தினி
மீனாச்சி பாட்டிக்கும்

எங்கள் வீட்டில் எங்களுக்கு துணையாய் இருக்கும் வீட்டு வேலைகள் செய்து எங்களுக்கு உதவி செய்யும் தவமணி அவர்களுக்கும்

அவரது செல்வங்கள் பரமேச்வரி, மற்றும் சீனிவாசன் எனும் எதிர்கால நடசத்திரங்களுக்கும் 

நான் ஒரு இருபது ஆண்டுகளாகத் தேடி கொண்டு இருக்கும் எனது நண்பர் திருச்சியில் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த இராஜகோபால் அவர்களுக்கும் அவரது மனைவி திருமதி பங்கஜம் ராஜ கோபால் அவர்களுக்கும், மற்றும் ஆர்.சங்கரன்,தமிழ் ஆசிரியர் பண்ணைக்காடு  ரமணி அவர்களுக்கும், ஜெயந்திலால் அவர்களுக்கும், 

நான் மறக்க முடியாத நண்பர் திரு ஜபருல்லா அவர்களுக்கும்,

சுப்பு தாத்தாவின் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். 

ஹாப்பி நியூ இயர் 2014 


Wednesday, December 25, 2013

இனிய கிருஸ்துமஸ்

அன்பின் ஒளியாக, வடிவாக,  அவதரித்த ஏசுபிரான் வருகையைபோற்றும் புகழ் பாடும் திருமதி இளமதி அவர்கள், யேசுவின்  சிறப்பென்ன என , நம் சிந்தையைக் கவரும் வகையில் ஒரு பாடல் இயற்றி இருந்தார்கள்.  அது இதுவே.

                                 அன்பெனும் அருளினில் அகிலமே நனைந்திட
அருந்தவன் வந்துதித்தான்! - எங்கள்
ஆதவன் வந்துதித்தான்!
துன்பங்கள் தொலைந்திடத் துயரங்கள் அகன்றிடத்
தூயனாய் வந்துதித்தான்! - நல்ல
தூதனாய் வந்துதித்தான்! 

பொய்மையைப் போக்கவும் உண்மையைக் காக்கவும்
புனிதனாய் வந்துதித்தான் !- உலகில்
புதுமையாய் வந்துதித்தான்!
நல்லதை நாட்டவும் நன்மையைக் கூட்டவும் 
நமக்கென வந்துதித்தான்! - யேசு
நாட்டினைக் காக்க வந்தான்!

வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும் 
வேதமாய் வந்துதித்தான்! - வானில்
விண்மீனாய் வந்துதித்தான்!
விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற
விரைவாக வந்துதித்தான்! - அந்த
விண்மகன் வந்துதித்தான்!

விரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டிய
ஆண்டவன் வந்துதித்தான்! - ஒளி
பூண்டவன் வந்துதித்தான்! -
அரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே
நலமெலாம் ஏற்றிடுவோம் - யேசு
மலரடி போற்றிடுவோம்!
~~~000~~~


உலகத்தே பரவி இருக்கும் கிருஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நல வாழ்த்துக்களை அவர் பதிவு மூலம் தெரிவித்த நான், இந்தப் பதிவின் மூலமும் 

எல்லோருக்கும் எங்கள் இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

திருமதி இளமதி பாடிய பாடலை அங்கே நான் ஹிந்தோள ராகத்தில் பாடி இருந்தேன். அவரும் தன பெட்டகத்தில் அதை இட்டு எனக்கு கௌரவம் அளித்து இருக்கிறார்கள்.  

தமிழ் அன்னை நமக்கெல்லாம் தந்த கோஹினூர் ரத்தினம் கண்ணதாசன் அவர்களின் இயேசு காவியம் உலகப் புகழ்  பெற்றது. உலகத்தில் எல்லோராலும் பாடப்பெறுகிறது.

 அந்த யேசு காவியத்தின் ஒரு பாடலை திரு தி. எம்.சௌந்தரராஜன் பாட, 
நாம் அதனுடன் இணைந்து நாமும் பாடுவோம். 




ANIMATION VIDEO THAT TELLS US THE CHRISTMAS STORY IN FULL

TURN BACK TO GOD.


நாகையில் நாங்கள் இருந்தபோது நாங்கள் அடிக்கடி சென்ற திருத்தலம். 
வேளாங்கன்னி சர்ச். 

வேளாங்கன்னி அன்னையை தரிசித்த அடுத்த நிமிடம் வாசல் கதவு மணி அடித்தது.
திறந்தேன்.
எனக்காக எனது நண்பர் திரு பிரேம் குமார் வீட்டில் இருந்து கிருஸ்துமஸ் கேக் வந்திருக்கிறது.

எ வெரி ஹாப்பி கிருஸ்துமஸ் பிரேம் குமார் சார்.
A very happy New year 2014 .

A Tasty Christmas Cake and Breakfast from my neighbour.

Wednesday, December 11, 2013

அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” .

“அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” .

இதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி.


காந்திக்குத் தெரியவில்லை.

அவரை, அவர் சொன்னவற்றை பாதுகாக்கவே இந்தியாவில் ஒருவரும் இல்லை. 

தென் ஆப்பிரிக்காவில் ஒருவர் இருந்தார். 
அவரும் நேற்று விடை பெற்றுக்கொண்டு சென்று விட்டார். 

பாரதிக்கு ஜே. 
காந்திக்கு ஜே. 

இன்னும் படிக்க இங்கே செல்லுங்கள்.

Monday, December 02, 2013

பக்தி ரசம் இன்று.

டிசம்பர் மாத இனிய இசைக் கச்சேரியில் இன்று என்ன ரசம் ?

பக்தி ரசம் இன்று.

திரு ஓ.எஸ். அருண்

குமரா என்று உருகுவதை கேளுங்கள்.

பித்துக்குளி முருகதாஸ் பாடுகிறார்.  அலை பாயுதே.. மனம் கண்ணா என் மனம் அலை பாயுதே..உன் ஆனந்த வேணு கான ...


 என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை. முருகா.
Madurai Somu sings the same song here.
அதே பாடலை அந்தக் காலத்து மதுரை சோமு பாடுகிறார். கேட்கக் கொடுத்து வைக்கவேண்டும்

Sunday, December 01, 2013

எல்லா இசையும் இங்கே தமிழில்

டிசம்பர் மாதம் துவங்கி  விட்டது.

எங்கு பார்த்தாலும் இசை வெள்ளம்.
இங்கே தமிழ் இசை 

டிசம்பர் மாதம் முழுவதும் ஒலிக்கும்.


கிராமீய இசை, பாரம்பரிய பண் இசை, மட்டும் கர்நாடக இசை, ஆன்மிகம், கலந்த இசை
எல்லாமே ஒலிக்கும்.

இசை கலைஞர் பலரும் வந்து உங்களை மகிழ்விப்பார் என்பது திண்ணம்.

ஒன்று மட்டும் சொல்ல வேண்டும்.

எல்லா இசையும் இங்கே

தமிழில் மட்டுமே.

ஒவ்வொரு நாளும் நவ ரசங்களில் ஒரு ரசம்
இன்று குதூகலம்

இன்று மாட்டு வண்டி பூட்டிகிட்டு வந்து  இருக்கிறார்.
புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் அனிதா குப்புசாமி அவர்கள்.




கேட்போம். மன மகிழ்வோம்.


தோடு கடை ஓரத்திலே...... விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்


Saturday, November 02, 2013

ஆஹா.. அப்படி போவுதா கதை...

தீபாவளி ஆத்திசூடியும் அறங்களும்...



என்னும் தலைப்பிலே வாழ்த்துக்களுடன் நல் அறங்களையும் எடுத்துக்கூறி இருக்கும் ஹரணி அவர்களுக்கு,

திருமதி துளசி கோபால் , ரேவதி வல்லி நரசிம்மன், ரஞ்சனி நாராயணன் , கிரேஸ்,ராஜேஸ்வரி, சசிகலா, ஹேமா, கோவைக்கவி, இளமதி இளைய நிலா, 
பார்வதி ராமச்சந்திரன், தீபப் பிரியா டான்டிக்ஸ், ப்ரியா பாஸ்கர், இராம லக்ஷ்மி, தேனம்மை இலக்ஷ்மணன், கோமதி அரசு, ராஜலக்ஷ்மி பரமசிவம், கீதா சாம்பசிவம், லக்ஷ்மி, தங்கமணி , கோவைக்கவி, வேதா இலங்கா திலகம்,
அம்பாள் அடியாள், ரூபிகா, காயத்ரி, மஞ்சு பாஷிணி, ( அஞ்சான் )
 ரேவா, அனன்ய மகாதேவன், லலிதா மிட்டல், பிரிய சகி, ஆதிரா, காயத்ரி தேவி, கிருஷ்ணா குஞ்சிதபாதம்,ஷைலஜா ,ராஜி, ஸ்ரவாணி, அவர்களுக்கும்,
எந்த ஒரு பண்டிகைக்கும் அதற்கு ஏற்றால்போல் கோலங்கள் இட்டு பிரமிக்க வைக்கும் வாணி முத்துகிருஷ்ணன் 



வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என வாழும் காலத்தில் சுவர்க்கத்தைக் காண வழி காட்டும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், +Dindigul Dhanabalan அவர் வலைக்கு வரும் நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கும்,

ரிஷபன், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி, சுப்பு, சுந்தர்ஜி, அப்பாதுரை, மோஹன் பரோடா, திவாகர், துரை செல்வராஜ், கரந்தை ஜெயகுமார், சீனா சார், ஜி.என். பி. சார், அவரோட பிரண்ட்ஸ்.ஆரஞ்சு ஜூஸ் தரும்  கோபாலக்ருஷ்ணர் திருச்சிலே எங்க வீதிக்காரர், பெரியவரைப் பற்றிய கடந்த கால சம்பவங்களை அப்படியே கண்முன்னே நிறுத்துபவர்.

வேலன், பொன்மலர்,
+Balasubramanian Ganesh பால கணேஷ் , வேங்கட நாகராஜ்,(தினம் ஒரு ஸ்வீட் செய்து தரும் கோவை 2 டெல்லி , ) நஸ்ரியா ரசிகன் கோவை ஆவி, அரூர் மூனா செந்தில், ராஜா, மதுமதி, பதிவர் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திய அத்தனை நண்பர்கள், +Surekaa Sundar சுரேகா (என்ன கம்பீரிங் அடே அப்பா )  , தக்குடு, சீனு, சே.குமார், மகேந்திரன் , மோகன் குமார்,பகவான்ஜி,

என்.கனேசன், ஜீவா வெங்கடராமன், கபீரன்பன், பூவனம் என்ற வலையின் ஆசிரியர் இவர் பெயரும் வெங்கடராமன் கணேசன் என்று நினைக்கிறேன் )

செல்லப்பா யக்யசாமி, தி தமிழ் இளங்கோ, .புலவர் இராமாநுசம் , கவிஞ்ர் பாரதி தாசன், இரமணி,அப்பாதுரை ,
சென்னை பித்தன், நந்தினி,ஹெச். ஆர். வைத்யா, வித்யா சூரி, வீணை காயத்ரி, கடம் சுரேஷ் ,
சுசீலா அம்மா, தோழி (சித்தர்கள் பற்றி எழுதுபவர்), ரத்னவேல் நடராசன், கல்பதரு நடராசன், இன்ன்னாம்பூர் , சுந்தர ராஜன்,
+Vasudevan Tirumurti வாசுதேவன் திருமூர்த்தி, கண்ணபிரான், குமரன், ஜெயகாந்தன் பழனி, ஜோதிட வல்லுநர் சுப்பையா வாத்தியார், பெட்டகம் என்ற வலையில் எளிய மருத்துவங்களைச் சொல்லும் முகம்மது அலி அவர்களுக்கும்

சந்திரசேகரன் ராமசாமி மற்றும்
கடுகு, கே.ஜி.கௌதமன், பாலு ஸ்ரீராம், அவர்களுக்கும்,

மற்றும் என்னை தத்தம் வளையத்துக்குள்ளே மறக்காமல் வைத்திருக்கும் நண்பர்களுக்கும்,

எனது உறவினர்களுக்கும், அந்தக்காலத்து எல்.ஐ.சி. நண்பர்களுக்கும் , எனது மருத்துவர்களுக்கும்,

நான் மறந்து போன நண்பர்களுக்கும், என்னை மறந்து போன நண்பர்களுக்கும் ,

நான் ஒரு 20 வருடங்களாக பார்க்க முயற்சி செய்யும் எனது பழைய நண்பர் திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த திரு ராஜகோபால் (இப்பொழுது அவருக்கு 80க்கு மேல் இருக்கலாம் ) மற்றும் அவர் மனைவி பங்கஜம் ராஜகோபால் அவர்களுக்கும், அவர்களை திருச்சியில் தெரிந்து எனக்கு நல்ல செய்தி சொல்லப்போகும் நபருக்கும், 



எங்கள் காலனி நண்பர்கள் குறிப்பாக ப்ரேம் குமார், வெங்கடராமன், சந்திரசேகரன், வைத்தியநாதன், விஸ்வநாதன், தண்டபாணி, பாலக்ருஷ்ணன், அவர்களுக்கும்,

LAST BUT NOT THE LEAST

அம்மன் பாட்டு வலைப்பதிவர்
கவி நயா அவர்களுக்கும்,


எங்கள் குருஜி ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா 
சரஸ்வதி அவர்களுக்கும், அவர்களது மாணவர்களுக்கும் 
குறிப்பாகவும் சிறப்பாகவும் திருமதி சுதா நாராயணன் +sudha narayanan அவர்களுக்கும், 
****************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். 
*************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
என்னங்க... ?

என்ன என்னங்க...?

எனக்கு தெரியுமுங்க..

என்ன தெரியுமுங்க..?

எல்லாமே தெரியுமுங்க..

என்ன எல்லாமே தெரியுமுங்க ?

இத்தனை பேருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீக...

ஆமாம். இவங்க அத்தனை பேரு வலைப் பதிவும் நான் படிக்கிறேன் இல்ல.

அது சரி, அத படிக்கிறதுக்கு வசதியா அப்பப்ப காபி, டீ , சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி, அப்படின்னு நான் நீங்க இருக்கற இடத்துக்கு வந்து தர்றேன் இல்ல,  என்ன மறந்துட்டீகளே ?

உன்னை மறப்பதா ? என்ன சொல்றே ?

ஆமாம். எனக்கு வாழ்த்து சொல்லவேண்டாமா ?

ஆஹா.. அப்படி போவுதா கதை...

தீர்க்க சுமங்கலி பவ. 



Friday, October 11, 2013

சரஸ்வதி அந்தாதி (மகாகவி கம்பர் இயற்றியது)

சரஸ்வதி அந்தாதி (மகாகவி கம்பர் இயற்றியது)
    சரஸ்வதி அந்தாதி (மகாகவி கம்பர் இயற்றியது)
    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என் அம்மை-தூய
    உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
    இருப்பள் இங்கு வாராது இடர்.

    படிக நிறமும், பவளச்செவ்வாயும்
    கடிகமழ்பூந் தாமரை போற் கையும்-துடியிடையும்
    அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
    கல்லும் சொல் லாதோ கவி?

    நூல்

    1. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி, செஞ்சொல்
    தார் தந்த என்மனத் தாமரை யாட்டி, சரோருகமேல்
    பார் தந்த நாதன் இசைதந்த ஆரணப் பங்கயத்தாள்
    வார் தந்த சோதிஅம் போருகத் தாளைவணங்குதுமே.

    2. வணங்கும், சிலைநுதலும் கழை தோளும்வன முலைமேற்
    சுணங்கும், புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே
    பிணங்கும் கருந்தடங் கண்களும், நோக்கிப் பிரமன் அன்பால்
    உணங்கும் திருமுன்றி லாய், மறை நான்கும் உரைப்பவளே.

    3. உரைப்பார் உரைக்கும் கலைகள் எல்லாம் எண்ணில்
    உன்னையன்றித் தரைப்பால் ஒருவர் தரவலரோ?தண்
    தரளமுலை வரைப்பால் அது தந்து இங்கெனைவாழ்வித்த
    மாமயிலே விரைப்பா சடை மலர்வெண் தாமரைப் பதி மெல்லியலே.

    4. இயலானது கொண்டு நின் திருநாமங்கள் ஏத்துதற்கு
    முயலாமையால் தடுமாறுகின்றேன்; இந்த மூவுலகும்
    செயலால் அமைத்த கலைமகளே, நின் திருவருளுக்கு
    அயலாய் விடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே.

    5. அருணோ தயத்திலும் சந்திரோதயம் ஒத்து அழகு எரிக்கும்
    திருக்கோல நாயகி, செந்தமிழ்ப் பாவை திசை முகத்தால்
    இருக்கோது நாதனும், தானும் எப்போதும் இனிதிருக்கும்
    மருக்கோல நாண் மலராள் என்னை ஆளும் மடமயிலே.

    6. மயிலே, மடப்பிடியே, கொடியே இளமான் பிணையே
    குயிலே, பசுங்கிளியே, அன்னமே மனக்கூர் இருட்கோர்
    வெயிலே, நிலவெழும் மேனி மின்னே, இனி வேறுதவம்
    பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற் பாதங்களே.

    7. பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
    வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி; வெள்ளிதழ் பூஞ்
    சீதாம் புயத்தில் இருப்பாள்; இருப்ப என் சிந்தையுள்ளே
    ஏதாம்? புவியில் பெறல் அரிதாவது எனக்கினியே !

    8. இனிநான் உணர்வது எண்ணென் கலையாளே, இலகு தொண்டைக்
    கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலஅயன்
    தனி நாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப்
    பனிநாள் மலர் உறை பூவையை ஆரணப் பாவையையே.

    9. பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
    மேவும் கலைகள் விதிப்பாளிடம், விதியின் முதிய
    நாவும், பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும், நறுங்கமலப்
    பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே.

    10. புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென் கோ?
    அந்தியில் தோன்றிய தீபம் என்கோ? நல் அருமறை யோர்
    சந்தியில் தோன்றும் தபனன் என்கோ? மணித் தாமம் என்கோ?
    உந்தியில் தோன்றும் பிரான் புயந் தோயும் ஒருத்தியையே.

    11. ஒருத்தியை, ஒன்றும் இலா என் மனத்தின் உவந்து தன்னை
    இருத்தியை, வெண்கமலத்து இருப்பாளை எண்ணெண் கலை தோய்
    கருத்தியை, ஐம்புலனும் கலங்காமல் கருத்தை யெல்லாம்
    திருத்தியை, யான்மற வேன்; திசை நான் முகன் தேவியையே.

    12. தேவரும், தெய்வப் பெருமானும், நான்மறை செப்புகின்ற
    மூவரும், தானவர் ஆகி உள்ளோரும், முனிவரும்
    யாவரும், ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த
    பூவரும் மாதின் அருள்கொண்டு, ஞானம் புரிகின்றதே.

    13. புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்து  இருளை
    அரிகின்றது, ஆய்கின்ற எல்லா அறிவின் அரும் பொருளைத்
    தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
    விரிகின்றது, எண்ணென் கலைமாது உணர்த்திய வேதமே.

    14. வேதமும், வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப் பொருளாம்
    பேதமும், பேதத்தின் மார்க்கமும், மார்க்கப் பிணக்கு அறுக்கும்
    போதமும், போத உருவாகி எங்கும் பொதிந்த விந்து
    நாதமும், நாதவண்டு ஆர்க்கும் வெண்டாமரை நாயகியே.

    15. நாயகம் ஆனமலர் அகமாவதும் ஞான இன்பச்
    சேய் அகம் ஆன மலர் அகமாவதும் தீவினையால்
    ஏய் அகம் மாறிவிடும் அகமாவதும் எவ்வுயிர்க்கும்
    தாயகம் ஆவதும், தாதார் சுவேத சரோருகமே.

    16. சரோருகமே; திருக்கோயிலும் கைகளும் தாள் இணையும்
    உரோருகமும், திரு அல்குலும், நாபியும் ஓங்கிருள் போற்
    சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டம், சேயிதழும்
    ஓரோர் உகம் ஈர் அரை மாத்திரை ஆன உரை மகட்கே.

    17. கருந்தாமரை மலர், கண் தாமரைமலர், காமருதாள்
    அருந்தாமரை மலர், செந்தாமரை மலர், ஆலயமாத்
    தருந்தாமரை மலர், வெண்தாமரை மலர் தாவில் எழில்
    பெருந்தாமரை மணக்கும் கலைக்கூட்டப் பிணைதனக்கே.

    18. தனக்கே துணிபொருள் என்னும் தொல்வேதம்; சதுர் கத்தோன்
    எனக்கே சமைந்த அபிடேகம் என்னும்; இமையவர் தாம்
    மனக்கேதம் மாற்றும் மருந்து என்ப; சூடும் மலர் என்பன் யான்
    கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே.

    19. கமலந்தனில் இருப்பாள் விருப்போடு அம்கரம் குவித்துக்
    கமலம் கடவுளர் போற்றும் மென்பூவை; கண்ணில் கருணைக்
    கமலந்தனைக் கொண்டுகண்டு, ஒருகால் தம் கருத்துள் வைப்பார்
    கமலம் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே.

    20. காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
    நாரணன் ஆகம் அகலாத் திருவும், ஓர் நான் மருப்பு
    வாரணன் தேவியும், மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
    ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே.

    21. அடிவேதம் நாறும்சிறப்பு ஆர்ந்த வேதம் அனைத்தினுக்கும்
    முடிவே, தவள முளரி மின்னே, முடியா இரத்ன
    வடிவே, மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
    விடிவே, அறிந்து என்னை ஆள்வார் தலந்தனில் வேறு இலையே.

    22. வேறு இலையென்று, உன் அடியாரிற், சுடி விளங்கும் நன்பேர்
    கூறிலை, யானும் குறித்து நின்றேன்; ஐம்புலக் குறும்பர்,
    மாறிலை கள்வர் மயக்காமல், நன் மலர்த்தாள் நெறியில்
    சேறிலை ஈந்தருள்; வெண்தாமரை மலர்ச் சேயிழையே.

    23. சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வௌர் சிந்தனையும்
    சோதிக்கலாம்; உறப் போதிக்கலாம்; சொன்னதே துணிந்து
    சாதிக்கலாம்; மிகப் பேதிக்கலாம் முத்தி தான் எய்தலாம்;
    ஆதித் கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவர்க்கே.

    24. அடையாள நாள்மலர் அங்கையில் ஏடும் அணிவடமும்
    உடையாளை நுண்ணிடை ஒன்றும் இலாளை, உபநிடதப்
    படையாளை, எவ்வுயிரும் படைப்பாளைப் பதும நநுந்
    தொடையாளை, அல்லது மற்று, இனியாரைத் தொழுவதுவே.

    25. தொழுவார் வலம் வருவார், துதிப்பார் தம்தொழில் மறந்து
    விழுவார், அருமறை மெய் தெரிவார், இன்ப மெய் புளகித்து
    அழுவார், இன்னும் கண்ணில்நீர்மல்குவார் என்கண் ஆவது என்னை?
    வழுவாத செஞ்சொற் கலைமங்கை பால் அன்பு வைத்தவரே.

    26. வைக்கும் பொருளும், இல்வாழ்க்கைப் பொருளும், மற்றுளப் பொருளும்
    பொய்க்கும் பொருள் அன்றி, நீடும் பொருள் அல்ல; பூதலத்தின்
    மொய்க்கும் பொருளும், அழியாப் பொருளும் விழுப்பொருளும்
    உய்க்கும் பொருளும், கலைமாது உணர்த்து உரைப்பொருளே.

    27. பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ?
    மருளாத சொற்கலை வான்பொருளோ? பொருள் வந்து வந்தித்து
    அருளாய் விளங்கு மவர்க்கு ஒளியாய் அறியாத வர்க்கு
    இருளாய் விளங்கும் நலங்கிளர் மேனி இலங்கிழையே.

    28. இலங்கும் திருமுகம்; மெய்யிற் புளகம் எழும்; கண்கள் நீர்
    மலங்கும்; பழுதற்ற வாக்கும் வலிக்கும்; மனம் மிகவே
    துலங்கும்; முறுவல் செயக் களி கூரும் சுழல் புனல் போல்
    கலங்கும் பொழுது தெளியும், சொல்மானைக் கருதினர்க்கே.

    29. கரியார் அளகமும், கண்ணும், கதிர் முலைக் கண்ணும், செய்ய
    சரியார் கரமும், பதமும், இதழும், தவள நறும்
    புரியார்ந்த தாமரையும், திருமேனியும், பூண் பனவும்
    பிரியாது என்நெஞ்சினும் நாவினும் நிற்கும்; பெருந்திருவே.

    30. பெருந்திருவும் சமயமங்கையும் ஆகி, என் பேதை நெஞ்சில்
    இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில், எல்லா உயிர்க்கும்
    பொருந்திய ஞானந்தரும்; இன்ப வேதப் பொருளும் தரும்;
    திருந்திய செல்வம் தரும்; அழியாப் பெருஞ் சீர்தரு

    Monday, September 30, 2013

    ராம் ராம்.

    காந்தி என ஒரு மனிதர் நாம் வாழும் பூமியிலே 
      இருந்தாராம். 

      அவர் என்ன சொன்னாராம் ?

      அவர் என்ன செய்தாராம் ?

      மக்கள்  எல்லாரும் மறந்து போனாராம். 

      இவர்கள்  அதை நினைவு வைத்துக்கொண்டு 
      ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி 
       எடுத்து சொல்கின்றாராம்.

       இந்த கூட்டத்தில் யார் யார் பேசுவாராம்?

       ராம் ராம்.

    ****************************************************************************
        சேவாலயா தொண்டு நிறுவனம் சார்ந்த திரு முரளிதரன் +Muralidharan  அவர்கள் பங்கு பெறுகிறார்கள்.
    Please click above to know what SEVALAYA does.
     
         சும்மா பேசி விட்டு போகாமல்,  காந்தீய வழியில் என்ன இயலும் என்பதை எடுத்துச் சொல்வது மட்டுமல்ல,      நடத்துபவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

         அன்று கூட்டத்திற்கு போகவேண்டும்.

         சுப்பு தாத்தா அங்கு போவார் .

        அப்ப நீங்க....?

    **************************************************************************

    தகவல் தந்த மதுமதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 
       அவர்கள் வலைக்கு இவ்வழி செல்லவும்.

    **************************************************************************
        

    Sunday, September 22, 2013

    அபிராமி அந்தாதி


    சென்ற வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பஞ்ச புராணம் என்று சொல்லப்படும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, பெரிய புராணம் ஆகியவற்றிலிருந்து ஒரு பாடல் எழுதி வெளியிட்டேன்.

    இன்று காலை முற்றிலும் எதேச்சியாக எனது வலை நண்பர்

     திருமதி ரேவதி வல்லி நரசிம்மன் அவர்கள் நாச்சியார் வலை பார்த்தேன். 

    அங்கு ஒரு முழு மதி பிரகாசித்து விகசித்து என் நினைவுக்கு அபிராமி அந்தாதியை கொண்டு வந்தது என்றால் அது உண்மை.

    இன்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதி யை இட்டு இருக்கிறேன்.

    அந்த அபிராமியே திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் வழியினிலே முழு மதியை காட்டி என்னை இப்பதிவை இட செய்துள்ளார் போலும்.


     

    Saturday, September 21, 2013

    சனிக்கிழமை அன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். பஞ்ச புராணம்.

    வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். 

    பஞ்ச புராணம். 
    1. தேவாரம். 
    திருநாவுக்காரசர்.
    திருவித்தம் 9ம் திருமுறை.

    கரு உற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு 
    உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்தது அலந்து எய்தொழிந்தேன் 

    2. திருவாசகம்.
    மாணிக்கவாசகர்.

    8ம் திருமுறை. 

    இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து 
    எழுகின்ற ஞாயிறே போன்று 
    நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைத்தேன்.
    'நீ அலால் பிறிது மற்று இன்மை.
    சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் 
    திருப்பெருந்துறை உறை சிவனே 
    ஒன்றும் நீ அல்லை, அன்றி ஒன்று இல்லை.
    யார் உன்னை அறியகிற்பாரே 

    3. திருவிசைப்பா 
    பண் பஞ்சமம்.  
    கண்டராத்தித்தர். 
    9ம் திருமுறை.

    முத்தியாளர் நான் மறையர் மூ ஆயிரவர் நின்னோடு 
    ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையைத் "
    "தெத்தே" என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் 
    அத்தா, உந்தன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ 


    4. திருப்பல்லாண்டு.

    பண்: பஞ்சமம்.
     சேந்தனார்.
      9ம் திருமுறை 


    நிட்டை இலா உடன் நீத்து என்னை ஆண்ட 
    நிகர் இலா வண்ணங்களும் 
    சிட்டன் சிவன் அடியாரைச் சீராட்டும் 
    திறங்களுமே சிந்தித்து 
    அட்டமூர்த்திக்கு என் அகம் நேக ஊறும் 
    அமிர்தினுக்கு, ஆழ நிழல் 
    பட்டனுக்கு என்னைத் தன்பால் படுத்தானுக்கே 
    பல்லாண்டு கூறுதுமே. 

    5. பெரிய புராணம்.
    சேக்கிழார். 
    12ம் திருமுறை.

    இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் 
    வேண்டுகின்றார்;
    "பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல் 
    உன்னை என்றும் 
    மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும், நான் 
    மகிழ்ந்து பாட 
    அறவா . நீ ஆடும்பொழுது உன் அடியின் கீழ் 
    இருக்க" என்றார்.

    திருச்சிற்றம்பலம். 

    Friday, September 20, 2013

    வெள்ளிக்கிழமை பாடிட வேண்டிய சிவ தோத்திரங்கள்.


    பஞ்ச புராணமான ஐந்து சமய நூல்கள்.

    ஒவ்வொரு நாளும் சிவனை துதித்து முத்தி பெறுவோமாக. 

    வெள்ளிக்கிழமை பாடிட வேண்டிய சிவ தோத்திரங்கள். 

    முதலாவது தேவாரம்.
    சுந்தரர்.
     7ம் திருமுறை.
     பண்; தக்கேசி.

    பொன்னும் மெய்பொருளும் தருவானை 
    போகமும் திருவும் புணர்ப்பானை 
    பின்னை என் பிழையைப் போருப்பானை 
    பிழை எலாம் தவிரப் பணிப்பானை 
    இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா 
    எம்மானை வைகும் வயல் பழனத்து அணி 
    ஆரூரானை மறக்கலும் ஆமே. 

    2. திருவாசகம்.
     மாணிக்கவாசகர்.
     8ம் திருமுறை.

    மெய்தான் அரும்பி விதிர் விதித்து 
    உன் விரை ஆர் கழற்கு என் 
    கைதான் தலை வைத்து கண்ணீர் 
    ததும்பி, வெதும்பி, உள்ளம் பேய்தான் 
    தவிர்த்து உன்னைப்போற்றி,
    சய சய போற்றி என்னும் 
    கை தான் நெகிழ விடேன், உடையாய் 
    என்னைக் கண்டு கொள்ளே.

    3. திருவிசைப்பா 

    பண்: இளந்தளம் 
     திருவாலியமுதனார்.  
    9ம் திருமுறை.

    அன்ன நடையார் அமுத மொழியார் 
    அவர்கள் பயில் தில்லைத் 
    தென்னன் தமிழும் இசையும் கலந்த 
    சிற்றம்பலம் தன்னுள் பொன்னும் 
    மணியும் இரத்த தலத்துப் 
    புலித்தோல் ப்ப்பிற்கு இட்டு 
    மின்னின் இடையாள் உமையாள் காண 
    விகிர்தன் ஆடுமே.

    4. திருப்பல்லாண்டு
     சேந்தனார்.
    பண்: பஞ்சமம் 
    9ம் திருமுறை 


    குழல் ஒலி , யாழ் ஒலி , கூத்து ஒலி , ஏத்து ஒலி
    எங்கும் குழாம் பெருகி,
    விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி,
    மிகு திரு ஆரூரின்
    மழவிடையாற்கு வழி வழி ஆளாய்
    மனம் செய் குடிப்பிறந்த
    பழ அடியாரோடும் கூடி எம்மானுக்கே
    பல்லாண்டு கூறுதுமே.

    5. பெரிய புராணம்.
      சேக்கிழார் 
     12ம் திருமுறை.

    மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்,மதி ஆடும்
    அண்ணலார் அடியார் தமை அமுது செய்வத்தல்
    கண்ணிணாம் அவர்  நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்,
    உண்மையாம் எண்ணி உலகர் முன் வருக.

    திருச்சிற்றம்பலம். 


    Thursday, September 19, 2013

    பஞ்ச புராணத்தில் இன்று படிக்கவேண்டிய சிவ துதிகள்.

    இன்று வியாழக்கிழமை.  குரு வாரம். 
    ஆலமர் கடவுள் அவர் தென்புலம் நோக்கி அமர்ந்திருக்கும் காட்சி கண்முன்னே கண்டு களிப்பீர்.

    பஞ்ச புராணத்தில் இன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். 

    சிந்தையை சிவன் பால் திருப்பி சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், சேந்தனார், சேக்கிழார் இயற்றிய சிவ மயமான பாடல்களை பாடுங்கள். 


    முதலிலே வருவது தேவாரம்.
    சுந்தரர்.
    பண் கொல்லி.
    7ம் திருமுறை. 





    தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் 
    சார்கினும் தொண்டர் தருகிலாப் 
    பொய்மையாளரைப் பாடாதே எந்தை இன்று ஓர்
    புகலூர் பாடுவீர் புலவர்காள் 
    இம்மையே தரும் சோறும் கூரையும் 
    ஏத்தலாம் இடர் கெடலுமாம் 
    அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு 
    யாதும் ஐயுறவு இல்லையே...

    அடுத்து வருவது 
    திருவாசகம்.
    மாணிக்கவாசகர்.

    8ம் திருமுறை. 


    அன்றே எனத்தான் ஆவியும் 
    உடலும் உடமை எல்லாமும் 
    குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட 
    போதே கொண்டிலையோ'

    இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ ?
    எண்தோள் முக்கண் எம்மானே 
    நன்றே செய்வாய் பிழை செய்வாய் 
    நானோ இதற்கு நாயகமே. 

    மூன்றாவது திருவிசைப்பா. 
    அருளியவர். அருள் செய்யும் 
    ருவூர்த்தேவர். 
    9ம் திருமுறை.

    தந்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த 
    தயாவை, நூறு ஆயிரம் கூறிட்டு 
    அத்தில், அங்கு ஒரு கூறு உண்கண் வைத்தவருக்கு 
    அமர் உலகு அளிக்கும் நின் பெருமை.
    பித்தன் என்று ஒரு கால் பேசுவாரெனும் 
    பிழைத்தலைபொருத்து அருள் செய்யும் 
    கைத்தலம் அடியேன் சென்னி வைத்த கங்கை 
    கொண்ட சோளேசரத்தானே

    4. திருப்பல்லாண்டு 
    சேந்தனார்.
    9ம் திருமுறை. 

    தாதையைத் தாள் அற வீசிய 
    சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே 
    பூதலத்தோரும் வணங்கப் பொன் 
    கோயிலும் பொனகமும் அருளி 
    சோதி மணிமுடித் தாமமும் 
    நாமமும் தொண்டர்க்கு நாயகமும் 
    பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே 
    பல்லாண்டு கூறுதுமே. 
    மகாதேவ் 

    ஐந்தாவதாக வருவது 
    பெரிய புராணம்.

    சேக்கிழார் 
    12ம் திருமுறை.

    ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை 
    வாந்தி மிசை அன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை 
    தேன்  நக்க மலர்க் கொன்றை செஞ்சடையார் சீர் தொடுக்கும் 
    கானத்தின் எழுபிறப்பைக்  கண் களிப்பக் கண்டார்கள்.

    திருச்சிற்றம்பலம். 


    Wednesday, September 18, 2013

    புதன்கிழமை. ஓதி உள்ளுணர்வு பெறவேண்டிய சிவத் துதிகள்.

    இன்று புதன்கிழமை. 

    பஞ்ச புராணத்தில் இன்று ஓதி உள்ளுணர்வு பெறவேண்டிய 
    சிவத் துதிகள். 

    முதலில்
     தேவாரம் 
    திருநாவுக்கரசர்
    திருத்தாண்டகம்
    . 6ம் திருமுறை.

    திரு நாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில்
    தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்
    ஒரு காலும் திருக்கோயில் சூழார் ஆகில்
    உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணார் ஆகில்
    அரு நோய்கள் கெட வெண் நீறு அணியார் ஆகில்
    அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
    பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப்
    பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே.


    2. திருவாசகம். 
    மாணிக்கவாசகர்
    .8 ம் திருமுறை.

    வேண்டத்தக்கது அறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
    வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணி கொண்டாய்
    வேண்டி நீ யாது அருள் செய்தாய்.

    யானும் அதுவே வேண்டின் அல்லால்
    வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் 
    அதுவும் உன்றன் விருப்பு அன்றே. 



     3. திருவிசைப்பா. 
    பண்: பஞ்சமம்;  
     சேந்தனார்.
      9 ம் திருமுறை.

    ஏக நாயகனை, இமயவர்க்கு அரசை
    என் உயிர்க்கு அமுதினை, எதிர் இல்
    போக நாயகனை புயல்வணற்கு அருளிய‌
    பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த‌
    மேக நாயகனை மிகு திருவிழி
    மிழலை விண் இழி செழும் கோயில்
    யோக நாயகனை அன்றிட மற்று ஒன்றும்
    உண்டு என உணர்கிலேன் யானே. 


     4. திருப்பல்லாண்டு
     பண்: பஞ்சமம்.
     சேந்தனார். 
    9ம் திருமுறை

    பாலுக்கு பாலகன் வேண்டி
    அமுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
    மாலுக்குச் சக்கரம் அன்று அருள்
    செய்தவன்; மன்னிய தில்லை தன்னுள்
    ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற 
    சிற்றம்பலமே இடம் ஆக‌
    பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே 
    பல்லாண்டு கூறுதுமே. 

    5. பெரிய புராணம்.
     சேக்கிழார்
    . 12ம் திருமுறை

    சிவன் அடியே சிந்திக்கும் திருப் பெருக சிவஞானம்
    பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
    உவமை இலாக் கலைஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்
    தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அ ந் நிலையில் 

     திருச்சிற்றம்பலம்.



    Tuesday, September 17, 2013

    இன்று செவ்வாய். இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்திரங்கள்


    பஞ்ச புராணத்தின் தொடர் இன்று மூன்றாவது நாள்.

    இன்று செவ்வாய்.
    இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்திரங்கள் என்ன என பார்ப்போம்.
    படிப்போம். பயனுறுவோம்.


    .




    Posted by Picasa


    3. திருவிசைப்பா
     பூந்துருத்தி நம்பிகாட நம்பி
    . 9ம திருமுறை.

    பண் : சாளரபாணி.  

    களையா உடலோடு சேரமான் ஆரூரம்
    விளையா மதம் மாறா வெள் ஆனை மேல் கொள்ள
    முளையாம திசூடி மு ஆயிர வரொடும்
    அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடு அரங்கே.

    4. திருபல்லாண்டு 
    பண்: பஞ்சமம். 9ம் திருமுறை.

    சீரும் திருவும் பொலிய 
    ஆரும் பெறாத அறிவு பெற்றேன்.
    பெற்றது ஆர் பெறுவார் உலகில் ?
    ஊரும் உலகும் சுழற 
    உழறி உமை மணவாளனுக்கு ஆள் 
    பாரும் விசும்பும் அறிவும் 
    பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.

    5. பெரிய புராணம்.
    சேக்கிழார் 
    12ம் திருமுறை.

    ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள 
    அளப்பரும் கர ண்கள் நான்கும் 
    சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் 
    திருத்து சாத்துவிகமே ஆக 
    இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த 
    எல்லையில் தனிப்பெரும் கூத்தின் 
    வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து 
    மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

    திருச்சிற்றம்பலம்.

    Monday, September 16, 2013

    இன்று திங்கள் கிழமை பஞ்ச புராணத்தின் இன்றைய துதிகள்




    வாரத்தின் ஒவ்வொரு நாளும் விடியலிலே சிவனை நினைப்போம். 

    பஞ்ச புராணத்தின் ஞாயிறு துதிகளை நேற்று படித்தோம். துதித்தோம்.

    இன்றைய துதிகள் 

    இன்று திங்கள் கிழமை.

    முதல் வருவது 
    தேவாரம்: 
    அருளியது: திரு ஞான சம்பந்தர்;
    பண்: கொல்லி. 
    3ம் திருமுறை.

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
    எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஒரு குறையும்  இல்லை;
    கண்ணில் நல்லதொறூம் கழுமல் வளநகர்ப் 
    பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே

    திருவாசகம்.
     மாணிக்கவாசகர்.
     8ம் திருமுறை.

    நானேயோ தவம் செய்தேன்? சிவாய நாம எனப்பெற்றேன்.
    தேனாய் இன் அமுதமுமாய் தித்திக்கும் சிவ பெருமான்
    தானே வந்த எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
    ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே.

    மூன்றாவது. 
    திருவிசைப்பா.
    பூந்துருத்தி நம்பிகாடநம்பி.
    பண் : சாளர பாணி. 9ம் திருமுறை.

    எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும்
    சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட்கொண்டு அருளி
    அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லைச்
    செம்பொன் செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.

    நாலாவது 
    திருப்பல்லாண்டு 
    பண்: பஞ்சமம். சேந்தனார். 9ம் திருமுறை.

    சொல் ஆண்ட கருதி ப்பொருள் சோதித்த 
    தூ மனத்தொண்டர் உள்ளீர்.
    சில ஆண்டில் சிதையும் சில 
    தேவர் சிறு நெறி சேராமே 
    வில் ஆண்டைக் கனகத் திறன் 
    மேரு விடங்கன் விடைப்பாகன் 
    பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே 
    பல்லாண்டு கூறுதுமே 

    ஐந்தாவது 
    பெரிய புராணம் 
    சேக்கிழார் 
    12ம் திருமுறை.

    தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும், தாழ்வடமும் 
    நாயகன் சேவடி தைவரும் சிந்தையும், நைந்து உருகிப் 
    பாய்வதுபோல் அன்பு நீர் பொழி கண்ணும், பதிகச் செஞ்சொல் 
    மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே.




    Sunday, September 15, 2013

    இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு

    அண்மையிலே ஒரு அருமையான கைப்புத்தகம் ஒன்று கிடைக்கப்பெற்றேன். 

    தமிழ் வேதம் எனச் சொல்லப்படும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய திரு நூல்களிலிருந்து ஒரு சிறிய பாடல் ஒன்றை எடுத்து, 

    வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலையில் ஐந்து பாடல்களைப்  பாடி சிவ பெருமானைத் துதித்திட வேண்டுகிறார் இந்த புத்தக ஆசிரியர். 

    இந்த ஐந்து பண்டைய தமிழ் நூல்களையும் ஆசிரியர் பஞ்ச புராணம் என்பர். 

    தமிழ் மொழியினது சரித்திரமே என்னைப் பொறுத்த அளவில், சமயமும் இலக்கியமும் இரண்டறக் கலந்த ஒன்றாம். 

    சமய நூல்கள் மட்டும் அன்றி, நீதி நூல்கள் பலவும் வெவ்வேறு காலத்தே புலவர் பெருமக்களால் படைக்கப்பட்டன.  மக்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தன என்பது வெள்ளிடை மலை. 

    இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதியை வெளியிடுவதில் அப்பாடல்களைப் பாடி மகிழ்வதில் இறை அருள் பெறுவதில் மனம் நிறைவு பெறுவோமாக. 

    ஞாயிறு.

    1.  தேவாரம். 
      திருஞா ன  சம்பந்தர் 
    பண்: சீகாமரம்.
     2ம் திருமுறை. 

    திருச்சிற்றம்பலம்.

    பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினவு 
    ஆயினவே வரம் பெறுவர் , ஐயுற வேண்டா ஒன்றும்;
    வேய் அனதோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குல நீர் 
    தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே. 

    2. திருவாசகம்.  
     மாணிக்க வாசகர் 
      8ம் திரு முறை. 

    பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் 
    பரிந்து நீ, பாவியேனுடைய 
    ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, 
    உவப்பு இலா ஆனந்தம் ஆய 
    தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த 
    செல்வமே சிவ பெருமானே 
    யான் உனைத் தொடர்ந்துஇ சிக்கெனப் பிடித்தேன் 
    எங்கு எழுந்தருளுவது இனியே..

    3.திருவிசைப்பா 
    கருவூர்த்தேவர்.
    9ம் .திருமுறை 

    நையாத மணத்தினனை நைவிப்பான் இத்தெருவே 
    ஐயா நீ உலாப்போந்த அன்று முதல் இன்று வரை 
    கையாரத்தொழுது அருவி கன்னாராஸ் சொரிந்தாலும் 
    செய்யாயோ அருள் ? கோடைத் திரைலோக்கிய சுந்தரனே 

    4. திருப்பல்லாண்டு. 
    சேத்தனார் .  9ம் திருமுறை. 

    மிண்டு மனத்தவர் போமின்கள் 
    மெய் அடியார்கள் விரைந்து வம்மின் 
    கொண்டும் கொடுத்தான் குடி குடி 
    ஈசற்கு ஆட்செய்வின் குழாம் புகுந்து 
    அண்டம் கடந்த பொருள், அளவு 
    இல்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் 
    பண்டும் இன்றும் என்றும் உள்ள 
    பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 

    5. பெரிய புராணம்.

    சேக்கிழார் 
    12ம் திருமுறை. 

    ஆதியாய் நடுவும் ஆகி, அளவு இலா அளவும் ஆகி,
    சோதியாய் உணர்வும் ஆகி, தோன்றிய பொருளும் ஆகி,
    பேதியா வேகம் ஆகி, பெண்ணுமாய் ஆணும் ஆகி 
    போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.

    திருச்சிற்றம்பலம்.