Pages

Monday, September 30, 2013

ராம் ராம்.

காந்தி என ஒரு மனிதர் நாம் வாழும் பூமியிலே 
  இருந்தாராம். 

  அவர் என்ன சொன்னாராம் ?

  அவர் என்ன செய்தாராம் ?

  மக்கள்  எல்லாரும் மறந்து போனாராம். 

  இவர்கள்  அதை நினைவு வைத்துக்கொண்டு 
  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி 
   எடுத்து சொல்கின்றாராம்.

   இந்த கூட்டத்தில் யார் யார் பேசுவாராம்?

   ராம் ராம்.

****************************************************************************
    சேவாலயா தொண்டு நிறுவனம் சார்ந்த திரு முரளிதரன் +Muralidharan  அவர்கள் பங்கு பெறுகிறார்கள்.
Please click above to know what SEVALAYA does.
 
     சும்மா பேசி விட்டு போகாமல்,  காந்தீய வழியில் என்ன இயலும் என்பதை எடுத்துச் சொல்வது மட்டுமல்ல,      நடத்துபவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

     அன்று கூட்டத்திற்கு போகவேண்டும்.

     சுப்பு தாத்தா அங்கு போவார் .

    அப்ப நீங்க....?

**************************************************************************

தகவல் தந்த மதுமதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 
   அவர்கள் வலைக்கு இவ்வழி செல்லவும்.

**************************************************************************
    

Sunday, September 22, 2013

அபிராமி அந்தாதி


சென்ற வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பஞ்ச புராணம் என்று சொல்லப்படும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, பெரிய புராணம் ஆகியவற்றிலிருந்து ஒரு பாடல் எழுதி வெளியிட்டேன்.

இன்று காலை முற்றிலும் எதேச்சியாக எனது வலை நண்பர்

 திருமதி ரேவதி வல்லி நரசிம்மன் அவர்கள் நாச்சியார் வலை பார்த்தேன். 

அங்கு ஒரு முழு மதி பிரகாசித்து விகசித்து என் நினைவுக்கு அபிராமி அந்தாதியை கொண்டு வந்தது என்றால் அது உண்மை.

இன்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதி யை இட்டு இருக்கிறேன்.

அந்த அபிராமியே திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் வழியினிலே முழு மதியை காட்டி என்னை இப்பதிவை இட செய்துள்ளார் போலும்.


 

Saturday, September 21, 2013

சனிக்கிழமை அன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். பஞ்ச புராணம்.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். 

பஞ்ச புராணம். 
1. தேவாரம். 
திருநாவுக்காரசர்.
திருவித்தம் 9ம் திருமுறை.

கரு உற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு 
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்தது அலந்து எய்தொழிந்தேன் 

2. திருவாசகம்.
மாணிக்கவாசகர்.

8ம் திருமுறை. 

இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து 
எழுகின்ற ஞாயிறே போன்று 
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைத்தேன்.
'நீ அலால் பிறிது மற்று இன்மை.
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் 
திருப்பெருந்துறை உறை சிவனே 
ஒன்றும் நீ அல்லை, அன்றி ஒன்று இல்லை.
யார் உன்னை அறியகிற்பாரே 

3. திருவிசைப்பா 
பண் பஞ்சமம்.  
கண்டராத்தித்தர். 
9ம் திருமுறை.

முத்தியாளர் நான் மறையர் மூ ஆயிரவர் நின்னோடு 
ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையைத் "
"தெத்தே" என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் 
அத்தா, உந்தன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ 


4. திருப்பல்லாண்டு.

பண்: பஞ்சமம்.
 சேந்தனார்.
  9ம் திருமுறை 


நிட்டை இலா உடன் நீத்து என்னை ஆண்ட 
நிகர் இலா வண்ணங்களும் 
சிட்டன் சிவன் அடியாரைச் சீராட்டும் 
திறங்களுமே சிந்தித்து 
அட்டமூர்த்திக்கு என் அகம் நேக ஊறும் 
அமிர்தினுக்கு, ஆழ நிழல் 
பட்டனுக்கு என்னைத் தன்பால் படுத்தானுக்கே 
பல்லாண்டு கூறுதுமே. 

5. பெரிய புராணம்.
சேக்கிழார். 
12ம் திருமுறை.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் 
வேண்டுகின்றார்;
"பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல் 
உன்னை என்றும் 
மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும், நான் 
மகிழ்ந்து பாட 
அறவா . நீ ஆடும்பொழுது உன் அடியின் கீழ் 
இருக்க" என்றார்.

திருச்சிற்றம்பலம். 

Friday, September 20, 2013

வெள்ளிக்கிழமை பாடிட வேண்டிய சிவ தோத்திரங்கள்.


பஞ்ச புராணமான ஐந்து சமய நூல்கள்.

ஒவ்வொரு நாளும் சிவனை துதித்து முத்தி பெறுவோமாக. 

வெள்ளிக்கிழமை பாடிட வேண்டிய சிவ தோத்திரங்கள். 

முதலாவது தேவாரம்.
சுந்தரர்.
 7ம் திருமுறை.
 பண்; தக்கேசி.

பொன்னும் மெய்பொருளும் தருவானை 
போகமும் திருவும் புணர்ப்பானை 
பின்னை என் பிழையைப் போருப்பானை 
பிழை எலாம் தவிரப் பணிப்பானை 
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா 
எம்மானை வைகும் வயல் பழனத்து அணி 
ஆரூரானை மறக்கலும் ஆமே. 

2. திருவாசகம்.
 மாணிக்கவாசகர்.
 8ம் திருமுறை.

மெய்தான் அரும்பி விதிர் விதித்து 
உன் விரை ஆர் கழற்கு என் 
கைதான் தலை வைத்து கண்ணீர் 
ததும்பி, வெதும்பி, உள்ளம் பேய்தான் 
தவிர்த்து உன்னைப்போற்றி,
சய சய போற்றி என்னும் 
கை தான் நெகிழ விடேன், உடையாய் 
என்னைக் கண்டு கொள்ளே.

3. திருவிசைப்பா 

பண்: இளந்தளம் 
 திருவாலியமுதனார்.  
9ம் திருமுறை.

அன்ன நடையார் அமுத மொழியார் 
அவர்கள் பயில் தில்லைத் 
தென்னன் தமிழும் இசையும் கலந்த 
சிற்றம்பலம் தன்னுள் பொன்னும் 
மணியும் இரத்த தலத்துப் 
புலித்தோல் ப்ப்பிற்கு இட்டு 
மின்னின் இடையாள் உமையாள் காண 
விகிர்தன் ஆடுமே.

4. திருப்பல்லாண்டு
 சேந்தனார்.
பண்: பஞ்சமம் 
9ம் திருமுறை 


குழல் ஒலி , யாழ் ஒலி , கூத்து ஒலி , ஏத்து ஒலி
எங்கும் குழாம் பெருகி,
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி,
மிகு திரு ஆரூரின்
மழவிடையாற்கு வழி வழி ஆளாய்
மனம் செய் குடிப்பிறந்த
பழ அடியாரோடும் கூடி எம்மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

5. பெரிய புராணம்.
  சேக்கிழார் 
 12ம் திருமுறை.

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்,மதி ஆடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வத்தல்
கண்ணிணாம் அவர்  நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்,
உண்மையாம் எண்ணி உலகர் முன் வருக.

திருச்சிற்றம்பலம். 


Thursday, September 19, 2013

பஞ்ச புராணத்தில் இன்று படிக்கவேண்டிய சிவ துதிகள்.

இன்று வியாழக்கிழமை.  குரு வாரம். 
ஆலமர் கடவுள் அவர் தென்புலம் நோக்கி அமர்ந்திருக்கும் காட்சி கண்முன்னே கண்டு களிப்பீர்.

பஞ்ச புராணத்தில் இன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். 

சிந்தையை சிவன் பால் திருப்பி சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், சேந்தனார், சேக்கிழார் இயற்றிய சிவ மயமான பாடல்களை பாடுங்கள். 


முதலிலே வருவது தேவாரம்.
சுந்தரர்.
பண் கொல்லி.
7ம் திருமுறை. 





தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் 
சார்கினும் தொண்டர் தருகிலாப் 
பொய்மையாளரைப் பாடாதே எந்தை இன்று ஓர்
புகலூர் பாடுவீர் புலவர்காள் 
இம்மையே தரும் சோறும் கூரையும் 
ஏத்தலாம் இடர் கெடலுமாம் 
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு 
யாதும் ஐயுறவு இல்லையே...

அடுத்து வருவது 
திருவாசகம்.
மாணிக்கவாசகர்.

8ம் திருமுறை. 


அன்றே எனத்தான் ஆவியும் 
உடலும் உடமை எல்லாமும் 
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட 
போதே கொண்டிலையோ'

இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ ?
எண்தோள் முக்கண் எம்மானே 
நன்றே செய்வாய் பிழை செய்வாய் 
நானோ இதற்கு நாயகமே. 

மூன்றாவது திருவிசைப்பா. 
அருளியவர். அருள் செய்யும் 
ருவூர்த்தேவர். 
9ம் திருமுறை.

தந்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த 
தயாவை, நூறு ஆயிரம் கூறிட்டு 
அத்தில், அங்கு ஒரு கூறு உண்கண் வைத்தவருக்கு 
அமர் உலகு அளிக்கும் நின் பெருமை.
பித்தன் என்று ஒரு கால் பேசுவாரெனும் 
பிழைத்தலைபொருத்து அருள் செய்யும் 
கைத்தலம் அடியேன் சென்னி வைத்த கங்கை 
கொண்ட சோளேசரத்தானே

4. திருப்பல்லாண்டு 
சேந்தனார்.
9ம் திருமுறை. 

தாதையைத் தாள் அற வீசிய 
சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே 
பூதலத்தோரும் வணங்கப் பொன் 
கோயிலும் பொனகமும் அருளி 
சோதி மணிமுடித் தாமமும் 
நாமமும் தொண்டர்க்கு நாயகமும் 
பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே 
பல்லாண்டு கூறுதுமே. 
மகாதேவ் 

ஐந்தாவதாக வருவது 
பெரிய புராணம்.

சேக்கிழார் 
12ம் திருமுறை.

ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை 
வாந்தி மிசை அன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை 
தேன்  நக்க மலர்க் கொன்றை செஞ்சடையார் சீர் தொடுக்கும் 
கானத்தின் எழுபிறப்பைக்  கண் களிப்பக் கண்டார்கள்.

திருச்சிற்றம்பலம். 


Wednesday, September 18, 2013

புதன்கிழமை. ஓதி உள்ளுணர்வு பெறவேண்டிய சிவத் துதிகள்.

இன்று புதன்கிழமை. 

பஞ்ச புராணத்தில் இன்று ஓதி உள்ளுணர்வு பெறவேண்டிய 
சிவத் துதிகள். 

முதலில்
 தேவாரம் 
திருநாவுக்கரசர்
திருத்தாண்டகம்
. 6ம் திருமுறை.

திரு நாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில்
தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்
ஒரு காலும் திருக்கோயில் சூழார் ஆகில்
உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணார் ஆகில்
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியார் ஆகில்
அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே.


2. திருவாசகம். 
மாணிக்கவாசகர்
.8 ம் திருமுறை.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்.

யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் 
அதுவும் உன்றன் விருப்பு அன்றே. 



 3. திருவிசைப்பா. 
பண்: பஞ்சமம்;  
 சேந்தனார்.
  9 ம் திருமுறை.

ஏக நாயகனை, இமயவர்க்கு அரசை
என் உயிர்க்கு அமுதினை, எதிர் இல்
போக நாயகனை புயல்வணற்கு அருளிய‌
பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த‌
மேக நாயகனை மிகு திருவிழி
மிழலை விண் இழி செழும் கோயில்
யோக நாயகனை அன்றிட மற்று ஒன்றும்
உண்டு என உணர்கிலேன் யானே. 


 4. திருப்பல்லாண்டு
 பண்: பஞ்சமம்.
 சேந்தனார். 
9ம் திருமுறை

பாலுக்கு பாலகன் வேண்டி
அமுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்று அருள்
செய்தவன்; மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற 
சிற்றம்பலமே இடம் ஆக‌
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே 
பல்லாண்டு கூறுதுமே. 

5. பெரிய புராணம்.
 சேக்கிழார்
. 12ம் திருமுறை

சிவன் அடியே சிந்திக்கும் திருப் பெருக சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலைஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அ ந் நிலையில் 

 திருச்சிற்றம்பலம்.



Tuesday, September 17, 2013

இன்று செவ்வாய். இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்திரங்கள்


பஞ்ச புராணத்தின் தொடர் இன்று மூன்றாவது நாள்.

இன்று செவ்வாய்.
இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்திரங்கள் என்ன என பார்ப்போம்.
படிப்போம். பயனுறுவோம்.


.




Posted by Picasa


3. திருவிசைப்பா
 பூந்துருத்தி நம்பிகாட நம்பி
. 9ம திருமுறை.

பண் : சாளரபாணி.  

களையா உடலோடு சேரமான் ஆரூரம்
விளையா மதம் மாறா வெள் ஆனை மேல் கொள்ள
முளையாம திசூடி மு ஆயிர வரொடும்
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடு அரங்கே.

4. திருபல்லாண்டு 
பண்: பஞ்சமம். 9ம் திருமுறை.

சீரும் திருவும் பொலிய 
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்.
பெற்றது ஆர் பெறுவார் உலகில் ?
ஊரும் உலகும் சுழற 
உழறி உமை மணவாளனுக்கு ஆள் 
பாரும் விசும்பும் அறிவும் 
பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.

5. பெரிய புராணம்.
சேக்கிழார் 
12ம் திருமுறை.

ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள 
அளப்பரும் கர ண்கள் நான்கும் 
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் 
திருத்து சாத்துவிகமே ஆக 
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த 
எல்லையில் தனிப்பெரும் கூத்தின் 
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து 
மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

திருச்சிற்றம்பலம்.

Monday, September 16, 2013

இன்று திங்கள் கிழமை பஞ்ச புராணத்தின் இன்றைய துதிகள்




வாரத்தின் ஒவ்வொரு நாளும் விடியலிலே சிவனை நினைப்போம். 

பஞ்ச புராணத்தின் ஞாயிறு துதிகளை நேற்று படித்தோம். துதித்தோம்.

இன்றைய துதிகள் 

இன்று திங்கள் கிழமை.

முதல் வருவது 
தேவாரம்: 
அருளியது: திரு ஞான சம்பந்தர்;
பண்: கொல்லி. 
3ம் திருமுறை.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஒரு குறையும்  இல்லை;
கண்ணில் நல்லதொறூம் கழுமல் வளநகர்ப் 
பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே

திருவாசகம்.
 மாணிக்கவாசகர்.
 8ம் திருமுறை.

நானேயோ தவம் செய்தேன்? சிவாய நாம எனப்பெற்றேன்.
தேனாய் இன் அமுதமுமாய் தித்திக்கும் சிவ பெருமான்
தானே வந்த எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே.

மூன்றாவது. 
திருவிசைப்பா.
பூந்துருத்தி நம்பிகாடநம்பி.
பண் : சாளர பாணி. 9ம் திருமுறை.

எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட்கொண்டு அருளி
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லைச்
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.

நாலாவது 
திருப்பல்லாண்டு 
பண்: பஞ்சமம். சேந்தனார். 9ம் திருமுறை.

சொல் ஆண்ட கருதி ப்பொருள் சோதித்த 
தூ மனத்தொண்டர் உள்ளீர்.
சில ஆண்டில் சிதையும் சில 
தேவர் சிறு நெறி சேராமே 
வில் ஆண்டைக் கனகத் திறன் 
மேரு விடங்கன் விடைப்பாகன் 
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே 
பல்லாண்டு கூறுதுமே 

ஐந்தாவது 
பெரிய புராணம் 
சேக்கிழார் 
12ம் திருமுறை.

தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும், தாழ்வடமும் 
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும், நைந்து உருகிப் 
பாய்வதுபோல் அன்பு நீர் பொழி கண்ணும், பதிகச் செஞ்சொல் 
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே.




Sunday, September 15, 2013

இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு

அண்மையிலே ஒரு அருமையான கைப்புத்தகம் ஒன்று கிடைக்கப்பெற்றேன். 

தமிழ் வேதம் எனச் சொல்லப்படும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய திரு நூல்களிலிருந்து ஒரு சிறிய பாடல் ஒன்றை எடுத்து, 

வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலையில் ஐந்து பாடல்களைப்  பாடி சிவ பெருமானைத் துதித்திட வேண்டுகிறார் இந்த புத்தக ஆசிரியர். 

இந்த ஐந்து பண்டைய தமிழ் நூல்களையும் ஆசிரியர் பஞ்ச புராணம் என்பர். 

தமிழ் மொழியினது சரித்திரமே என்னைப் பொறுத்த அளவில், சமயமும் இலக்கியமும் இரண்டறக் கலந்த ஒன்றாம். 

சமய நூல்கள் மட்டும் அன்றி, நீதி நூல்கள் பலவும் வெவ்வேறு காலத்தே புலவர் பெருமக்களால் படைக்கப்பட்டன.  மக்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தன என்பது வெள்ளிடை மலை. 

இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதியை வெளியிடுவதில் அப்பாடல்களைப் பாடி மகிழ்வதில் இறை அருள் பெறுவதில் மனம் நிறைவு பெறுவோமாக. 

ஞாயிறு.

1.  தேவாரம். 
  திருஞா ன  சம்பந்தர் 
பண்: சீகாமரம்.
 2ம் திருமுறை. 

திருச்சிற்றம்பலம்.

பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினவு 
ஆயினவே வரம் பெறுவர் , ஐயுற வேண்டா ஒன்றும்;
வேய் அனதோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குல நீர் 
தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே. 

2. திருவாசகம்.  
 மாணிக்க வாசகர் 
  8ம் திரு முறை. 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் 
பரிந்து நீ, பாவியேனுடைய 
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, 
உவப்பு இலா ஆனந்தம் ஆய 
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த 
செல்வமே சிவ பெருமானே 
யான் உனைத் தொடர்ந்துஇ சிக்கெனப் பிடித்தேன் 
எங்கு எழுந்தருளுவது இனியே..

3.திருவிசைப்பா 
கருவூர்த்தேவர்.
9ம் .திருமுறை 

நையாத மணத்தினனை நைவிப்பான் இத்தெருவே 
ஐயா நீ உலாப்போந்த அன்று முதல் இன்று வரை 
கையாரத்தொழுது அருவி கன்னாராஸ் சொரிந்தாலும் 
செய்யாயோ அருள் ? கோடைத் திரைலோக்கிய சுந்தரனே 

4. திருப்பல்லாண்டு. 
சேத்தனார் .  9ம் திருமுறை. 

மிண்டு மனத்தவர் போமின்கள் 
மெய் அடியார்கள் விரைந்து வம்மின் 
கொண்டும் கொடுத்தான் குடி குடி 
ஈசற்கு ஆட்செய்வின் குழாம் புகுந்து 
அண்டம் கடந்த பொருள், அளவு 
இல்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் 
பண்டும் இன்றும் என்றும் உள்ள 
பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 

5. பெரிய புராணம்.

சேக்கிழார் 
12ம் திருமுறை. 

ஆதியாய் நடுவும் ஆகி, அளவு இலா அளவும் ஆகி,
சோதியாய் உணர்வும் ஆகி, தோன்றிய பொருளும் ஆகி,
பேதியா வேகம் ஆகி, பெண்ணுமாய் ஆணும் ஆகி 
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.

திருச்சிற்றம்பலம்.






Wednesday, September 11, 2013

பாரதி ஒரு புயல்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும். 





இன்று அதிகாலை எழுந்த உடன் கண்ணில்  பட்டது திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவு .  ஆஹா. இன்று பாரதி நினைவு நாளன்றோ !  எனக்கு நினைவுட்டிய சக பதிவருக்கு எனது நன்றி.

அடுத்த கணமே, ஒரு பிரமிக்கத்தக்க கவிதை கண்டு சிலிர்த்துப்போனேன்.

மரபின் மைந்தன் எனத் தலைப்பிட்டு, இவர் எழுதும் வலைக்குள் இன்று தான் முதன் முறையாகச் செல்கிறேன் என நினைக்கிறேன்.

ஊழி உலுக்கியவன் எனும் தலைப்பிலே பாரதி பற்றி ஒரு எழுச்சி மிகு கவிதை.

பாரதியை நினைவு கூர்ந்து அந்த அற்புதமான அதிசயிக்கத்தக்க மனிதரை என்ன அழகாக , இப்படி ஒரு மனிதர் நம் மண்ணில் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறார் எனப்பெருமை உறும் அளவுக்கு, நம்மை உணரவைக்கும் கவிதை ஒன்றைப் படைத்து வெளியிட்டு இருக்கிறார்.

 கீறிய சூரியப் பிஞ்சின் சுடர்கொண்டு
ககனம் நிறைத்தது யார்-?

என ஒரு வினா வருகிறது. அக்கவிதையில். 

எத்துணை முறை அவ்வரியின் நயத்தினை படித்தேன் என சொல்ல இயலாது. 

அருமை. !! இதுவல்லவோ பாரதிக்கு யாம் செய்யும் நினைவு அஞ்சலி. 


அதைப் பாடி, வெளியிடஅவரிடம் அனுமதி கோரியிருக்கிறேன்.

நீங்கள் இங்கே சென்று  அந்த கவிதையைப் படிக்கவேண்டும்.

இன்று தமிழகத்தை தமிழ் கவிதை உலகை எங்கோ இழுத்துச்செல்லும் சாரதிகள் மத்தியிலே
பாரதி ஒரு வழிகாட்டி.

அவனை நினைவு கூர்வோம்.  அவன் இதயத்துடிப்புகளை சற்றே குரல் கொடுத்துக் கேட்போம்.

பாரதி ஒரு புயல்.


Monday, September 09, 2013

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால்

விநாயக சதுர்த்தி தினமான இன்று நம் எல்லோருமே விநாயகன், கணேசன், பிள்ளையார், கணபதி, என்று பல்வேறு பெயருடைய விநாயகரை விக்நேச்வரரை தரிசித்து வருவது வழக்கம் . 

காலையில் வீட்டிலும் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து


 நீதானே அந்த விநாயகன் என்று  அமர்த்தி ஆவாஹனம் செய்து நமக்குத் தெரிந்த நெஞ்சக்கனகல்லூ பாட்டு முதல் விநாயகர் அகவல் வரை , வாதாபி கணபதிம் முதல் மூலாதார மூர்த்தே கிருதி வரை ஸ்ருதி சுத்தமாக  இருக்கிறதோ இல்லையோ, மனசு சுத்தமாக வைத்துக்கொண்டு பாடி, 


அந்த வேகத்துக்கும் விவேகத்துக்கும் அதிபதியாக அரச மரத்தடியிலே ஆனந்தமாக உட்கார்ந்து வருவோர் போவோர் அனைவருக்கும் தன்னை வணங்குவோர் சுற்றி வருவோர் கொழுக்கட்டை படைப்போர்,




 மாலை போடுவோர் முல்லை, மல்லி, ரோஜா, என்று அன்றாட மக்கள் விரும்பி சூடும் பூக்கள் தான் என்றில்லாது எருக்கம்பூ மாலையிலும் இன்பம் கண்டு, 

தோப்புக்கரணம்  போடுவோர்,



அருகம்பில்லை எடுத்து அருகிலே வைப்போர்,

நூற்றெட்டு நாமா சொல்வோர்,அஷ்டோத்தரம் சொல்வோர், சஹச்ர நாமா சொல்வோர், கணபதி ஹோமம் செய்வோர் என்று இருப்போர் மட்டுமன்றி,

கணேசா என்னைக் காப்பாத்துப்பா என்று கண்ணீர் மல்கி கண்முன்னே நிற்பவர்க்கும் கடைக்கண் பார்வையாலே கனி அருள் தரும் 

பிள்ளையார்பட்டி பிள்ளையார் முதல் திருச்சி உச்சிப்பிள்ளையார் வரை, திருவலஞ்சுழி வலம்புரி விநாயகர்  முதல், வேழ முகத்தானே ஞான குருபரனே என்று ஆனந்த விநாயகனாக, அற்புத விநாயகனாக, வினை தீர்த்த விநாயகனாக, சிந்தாமணி விநாயகன் கோவிலில் வீற்றிருக்கும் சிந்தை கவர்ந்த 

அந்த மூலாதாரப் பெருமானை 

கம் கணபதியே நமஹ என்று உச்சரித்துக்கொண்டே ஒரு நூறு தடவை அவன் அருளை வேண்டிக்கொண்டே 




சென்னை முழுவதும் சுற்றி எல்லா பிள்ளையார் கோவில்களுக்கும் இயன்றவரை, உடல் இடம் கொடுக்கும் வரை சென்று  வரலாம் என்று நினைத்தபோது,

நினைத்தபோது நீ வரவேண்டும் என்று சொன்னபடி, 

அந்த விநாயகப்பெருமானை நினைந்து நினைந்து மனமுருகி பாடி இருக்கும் பதிவர் வலைகளுக்கெல்லாம் சென்று வந்தாலே பிள்ளையார் கோவில்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்குமே என்று அந்த தொந்திக்  கணபதியே எனக்கு சொல்வதாக கனவில் வந்து  சொல்வார் என எனக்கு தோன்றியதால்,  

முதன் முதலில் நான் ஒரு காலத்து இருந்த திருச்சி ஆண்டார் வீதி அரச மரத்தடியிலே வீற்று இருக்கும் பிள்ளையாரை தினம் தரிசிக்கும் ,

 எனது நண்பர் திரு வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் வலைக்குச் சென்றால்,என்ன அற்புதம், என்ன அற்புதம் ... ஈசனை வணங்குமுன் என் குருவையும் முதற்கண் நினைத்திட வேண்டுமேன சொல்லும் அவர் வலையில் காஞ்சி முனிவரின் அருள் பெற்று, 


பதிவின் தலைப்போ ஓடி வந்த பிள்ளையார்  
நம்மை த்தேடி வந்து நமக்கெல்லாம் அருள் புரியும் பிள்ளையாரப்பாடிய புகழ் பெற்ற அவ்வையின் அகவல் அதையும் ஒரு முறை பாடி, 

பின் நான் பல காலம் வாழ்ந்து இருந்த தஞ்சைத் தரணி புகழ் எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ்  அவர்கள் தமிழ் தரும் கணபதி எனும் தலைப்பிலே , 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால் நோக்குண்டாம் 


எனப்பாடி மகிழ்ந்து பின் அவர் இயற்றிய ( என நினைக்கிறேன் ) பிள்ளையார், பிள்ளையார் பாடலை எனக்கேற்ற வகையில் ராகத்தில் பாடி, பதிவேற்றி, 


செம்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் வலம் வரும் வேளையிலே

ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் அங்கு வந்த வேளையிலே எவ்வாறு யானை ஊர்வலம் நடுவிலே அடம் புடித்ததும், சுவாமிகள் தமது பழைய ஆக்ஞை தனை நினைவில் கொண்டு உடன் அந்த விநாயகனுக்கு 108 தேங்காய் உடைத்து வழி பட்ட சரித்திரத்தையும் பார்த்து அதிசயித்து, பின், 

அம்பாள் அடியாள் அவர்கள் வலையில் ஒரு அழகான கவிதை படித்து 
தும்பிக்கையான் துணை இருக்க துயர்கள் யாவும் மறையட்டும் என அவர்களுடன் நானும் பாடிப் பின் 
அதையும் ஆனந்த பைரவி ராகத்தில் பாடி, அவர்களிடம் யூ ட்யூபில் போட அனுமதி கேட்டு, 

திரும்பி பின் திருமதி ச்ரவாணி அவர்கள் வலையிலே விநாயகனைத் துதித்தால் வினைகள் ஓடும் என ஒரு பூங்கொத்துடன் காத்து நின்று கணபதியை தரிசித்து கொண்டு இருக்கும் வேளையிலே நானும் அந்த தமிழ் கவிதைச் சுரங்கத்துக்குள்ளே சென்று அத்தனை அருளையும் விநாயகப் பெருமானிடம் பெற்று, 

பின் எனது அருமை வலை நண்பர் ஆன்மீக வித்தகி, ஆன்மீக கடல்  திருமதி ராஜ ராஜேஸ்வரி வலை  சென்றால் 
அங்கே ஆஹா 

கருணை தெய்வம் கல்யாண கணபதி எனக்கண்டு தெளிந்து ,

நக்கீரர் எழுதிய அகவல் இங்கு இருக்கிறது என்ற செய்தி கேட்டு  திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் வலைப் பதிவுக்கும் சென்று அதையும் படித்து முடித்து,




பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்  என சூளுரை தந்து , நானும் அவன்திகாவுடன் சேர்ந்து இசை பாடி, 

 உடனே, 

கஜானனம் பூத கணாதி சேவிதம் 
பவித ஜம்பூ பல சார பக்ஷிதம் 
உமா சுதம் சோக வினாச காரணம் 
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

 என்ற சுலோகத்தையும் சொல்லி, 



திரு பட்டாபி ராமன் வலையிலே மூலாதார மூர்த்தியின் பெருமை சொல்லும் கவிதையும் படித்து மனம் உருக 

உருகி நின்றேன். 

விநாயக சதுர்த்தி ஆவணி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் சதுர்த்தி. இன்று.
விநாயகனோ அவன் பக்தர்களின் வினைகளை தினம் தோறும் அல்லவா தீர்த்து வைக்கிறான்.

நெஞ்சக்கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கரவானை பதம் பணிவோம்

காலை எழுந்து உடன் தொழுவது கணபதியையே.


ஒவ்வொருஆண்டும் இந்த பண்டிகை வந்தாலும் இந்த வருடம் வலை நண்பர்கள் வலைகள் எல்லாவற்றிலுமே விநாயகன் அவனே பிரதானமாக இருந்து எல்லோர் மனதிலுமே  குடி கொண்டு இருக்கிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் அல்லவா தெரிகிறது.

எல்லாம் அந்த பிள்ளையாரப்பன் அருள்.விக்னேஸ்வரன் 

வலை நண்பர்கள் எல்லாருக்கும் எல்லா நல்லதும் நடக்கவேண்டும் என நானும் என் வீட்டுக்காரியும் அதாவது சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் 
பிரார்த்திக்க

இன்று முழுவதும் அவன்  விக்னேச்வரனான  ( விக்னங்களை எல்லாம் விலக்குபவன் )அந்த  கணேசனின் மந்திரத்தை சங்கர் மகாதேவனுடன் நானும் சொல்வேன். .

நீங்களும் என்னுடன் சேர்ந்து ஒரு அஞ்சு நிமிஷம் சொல்லுங்களேன். 


ஏக தந்தாய வித்மஹே வக்கிர துண்டாய தீமஹி 
தன்னோ தந்திப் பிரசோதயாத்.

என்று சொல்லும்போதே நான் பாடிய இந்த பாட்டை மட்டும் மறந்துட்டீகளா?

  இன்னிக்கு நீங்களும் கேட்க வேண்டாமா என்று வீட்டுக்கிழவி குரல் கொடுக்க, 

வினாயகனே வினை தீர்ப்பவனே என்று துவங்கும் இந்த பாடலை மீனாச்சி பாட்டி என்னுடைய தர்ம பத்தினி யூ ட்யூப் லே பாடி இந்த நாலு வருசத்துலே ஒரு இரண்டு லட்சத்திற்கும் மேலே கேட்டு இருக்கிரார்கள் என்றால்

அது விநாயகன் பெருமை தான் உனக்கு அல்ல, என்று நானும் சொல்ல,

நீங்களும் கேளுங்களேன்.


இத்தனை கத்தி பாடணுமா ?

விநாயகனை மனசினால் ஸ்மரித்தல் போதுமே
என்று தோன்ற,

மகா கணபதிம் மனசா ஸ்மராமி.
ஆஹா..

கம்பீரமான நாட்டைலே அந்த பிரபலமான   பாட்டையும் 
கேட்போமா...

பாடிக்கொண்டே ஒரு சூடா கொழக்கட்டை சாப்பிடுவோம்.



Saturday, September 07, 2013

ஞான வினாயகனே சரணம்

Gnana VinayakanE..charanam

ஞான வினாயகனே சரணம்