Pages

Monday, January 16, 2012

மாடுகள் இல்லேயேல் மனிதன் இல்லை.

மாட்டு பொங்கல் பண்டிகை சிறப்புகள்.
தமிழ் மக்கள் பண்டை காலம் தொட்டே மாடுகளுக்கு மனிதனின் நன்றி உணர்வினை வெளிப்படுத்தும் வகையிலே இந்த சிறப்பான பண்டிகையை ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு மறு நாள் கொண்டாடுகின்றனர்.

மாடுகள் இல்லேயேல் மனிதன் இல்லை. மனித வாழ்வு மகிழ்ச்சியாக இருப்பதில் மாடுகளின் அங்கம் சிறப்புடைத்து. அயர்ச்சி அடையாது வயல்களில் உழைக்கும் அந்த ஐந்தறிவு படைத்ததாக நாம் சொல்லும் மாடுகள் தான் நாம் வயிறார உணவு தின்பதற்கு காரணம்.
மழையை படைத்த இறைவன், வெய்யிலை கொடுக்கும் சூரியன் இவர்களை நாம் வணங்குவது போல, மாடுகளையும் வணங்கி தொழுகிறோம். பசு மாடுகளை கோ மாதா என்றும் மகா லக்ஷ்மி என்றும் வர்ணித்து அவற்றை பூசை செய்கிறோம்.  இடையறாது பால் வழங்கும் அந்த வாயில்லா ஜீவன்களை காம தேனு என்றும் சொல்லி வணங்குகிறோம்.

மாடுகளுக்கிடையே போட்டியும் வைத்து அவைகளையும் உற்சாகப்படுதுவதே ஜல்லிக்கட்டின் துவக்க லட்சியம். மாடுகளை அலங்கரித்து, அவற்றினை நம் வீட்டு முக்கிய விருந்தினராக வரவழைத்து பூசை செய்து அவற்றிக்கு பொங்கல் அளித்து மகிழ்வது இந்த மாட்டு பொங்கல் வைபவத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
மறைகளில் சொல்லப்பட்ட முறைப்படி இங்கு மாடுகளுக்கு பூசை செய்யப்படுகிறது.


மாடுகள் வயதாகிவிடினும் அவைகள் காக்கப்படவேண்டும். நமது அம்மா அப்பா வயதாகிவிட்டதே என்று அவர்களை  வெளியே அனுப்புவது நமது பண்பு அல்ல. வயதான அன்னையை நடு  இரவில் வெளியே துரத்தி விட்டு போகச் சொல்லிவிட்டு அவர்களை வெகு தூரம்  அனுப்பி விட்டு, ( அண்மையில் ஜீ தமிழ் டி.வி. யில் பார்த்த அதிர்ச்சி தந்த நிகழ்ச்சி ) ஏழைகளுக்கு அன்ன தானம் செய்கிறேன் என்று சொல்வது எத்துனை சிறுமைச் செயலோ அது போலவே தான், தனது வாழ் நாள் முழுவதும் மனித இனத்துக்காக உழைத்து பாடுபட்ட மாடுகளை காட்டுக்கு அனுப்புவதும் ஆகும்.  வயதான தாய் வீட்டிலே இருந்தால் மொன மொன என்றோ தொனோ தொனோ என்று தான் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பது போல கிழ மாடுகளும் அவ்வப்போது குரல் கொடுக்கத்தான் செய்யும். அன்பாக அவைகளிடம் சென்று தோல் பட்டையை, முதுகை தடவி கொடுங்கள். கோடி புண்ணியம்.
மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு இன்றி அமையாத இரும்பு பாலம் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் ஆதாரம்.
நமது பரம்பரையில் மாட்டு பூசை செய்யும் வழி முறைகளை இங்கு பார்க்கலாம். இன்றும் பல கிராமங்களில் இது நடக்கிறது.  உண்மை இது.நன்றி: ஆமந்த.

அது சரி.  இது தேவைதானா !! இப்படித்தான் நமது வீரம் வெளிப்பட வேண்டுமா !!


ஜல்லிக்கட்டு

MATTU PONGAL IS THE THANKS GIVING DAY BY THE FAMILY IN OFFERING POOJA TO COW ( GHO MATHA) AS OUR MOTHER GIVING US WITH AN ENDLESS SUPPLY OF MILK, YEAR AROUND. HINDU SOCIETY WORSHIP THE COW AS DIVINE MOTHER MAHALAKSHMI SHOWERING HAPPINESS & PROSPERITY TO THE FAMILIES. THIS IS THE DAY WE GET TO SEE ALL THE COWS & BULLS DECORATED AND WE GET TO THANK THE BULLS FOR THEIR HARD WORK IN THE FARM. THERE USED TO BE A BULL FIGHTING SESSION ON THIS MATTU PONGAL DAY
Category:


Indian epic and legends symbolise the reverence for animals, particularly cows & bulls, inherent in Indian philosophy. Religious symbolism stress animal welfare, animal protection and even worship. The man-animal bond has always been very strong because animals are being treated as close companions for his need and greed. This is the background of MATTU PONGAL in India.

ammaitha 11 months ago

Running through the events of my younger day's life in a rural hamlet, Maraiyur village, near Mayiladuthurai, toiling at the paddy fields in the process of ploughing, water in-let & outlet management, Nadavu in the wet lands, weed removal, fertilizing protecting from rats and such other tricky operations finally we reach the harvesting level. Many such tedious tasks are encountered in the premetive stage of cultivation in 1930s and 1940s without significant econnomic return.

ammaitha 11 months ago

All through the process of cultivation, transportation and human living, we are gifted with the most dutiful, endlessly hardworking companions the bull & cows. Their tioling labour, work and service to the humanity is un-parallel, amazing and astonishing without expecting anything in return.

ammaitha 11 months ago

The farmer community had attained Divine values to these silent companions and worship them on Mattu Pongal day over the past ages. Mattu Pongal festival had been unheard of in modern days and we seem to be gradually drifting towards Tractor pongal celebration. ammaitha finds great pleasure in finding an opportunity to run on this ancient festival in traditional pattern.

ammaitha 11 months ago

2 comments:

 1. கோமாதா, மற்றும் உழவுக்கு பயன்படும் மாடு, பாரம் இழுக்கும் மாடு, ஜல்லிக்கடு மாடு எல்லாம் பற்றிய செய்திகள் அருமை.

  கோமாதா பூஜை காணொளி மிக நன்றாக இருக்கிறது.

  வயதான மாடை காட்டுக்கு அனுப்பினால் கூட பராவாயில்லை அதை கேரளாவிற்கு அடி மாட்டுக்கு அனுப்புவது மிகவும் வருந்ததக்க நிகழச்சி.

  மாடுகள் அருமையை மனிதன் அறிய நல்ல பதிவு.

  ReplyDelete
 2. சின்னதாய் நிழல்போல ஊர் ஞாபகம் வருது தாத்தா.என் தாத்தா இருந்தகாலத்தில் கண்டிருக்கிறேன் !

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி