Pages

Tuesday, September 04, 2012

மேலே ஒரு படி செல்ல ...

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையுங் கல்லாத வாறு.

(ஊரென்ன ? நாடென்ன ?  கற்றவனை அகிலமும் போற்றி மகிழும் .  அவ்வண்ணம் ஒருவன் கல்லாமல் இருப்பது தான் தான் ஏன்?    ...  என்றார்  வள்ளுவர்)


என்கின்ற வள்ளுவனின் வாய்மொழி தான்

இன்று நினைவுக்கு வருகிறது.

இன்று ஆசிரியர்  தினம்.

அன்னை தந்தையை காட்ட,
தந்தை குருவிடம் கூட்டிச் சென்று இவனுக்கு நற்கல்வி புகட்டுங்கள் என்று சொல்ல அந்த
குருவோ, அந்த மாணவனிடம், நீ யார் என்பதை நீயே உணர்ந்து கொள் என்று
இறைவனிடம் அழைத்துச் செல்கிறார்
இல்லை.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் 


என்ற வள்ளுவப்பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப 
வையத்தில் வாழ்வாங்கு வாழும் வழிதனைப் புகட்டுகின்றார் 

ஆகவே தான் மாதா பிதா குரூ தெய்வம் என்றனர் 

ஆசிரியரைப் போற்றுவது நமது கடமை. 
ஆசிரியரின் கடமை என்ன என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவது அதுவும் தலையாயதே 

எதிர்கால மன்னவர்களின் திறம்பட வாழ்வு மட்டும் அல்ல அற நெறிக்குட்பட்ட வாழ்வும் 
நம் ஆசிரியர்கள் கையிலேதான் இருக்கிறது. 

தனக்கென வாழா பிறர்கெனவே வாழும் ஆசிரியர்களைப் பணிவோம் போற்றுவோம் 

மேலே ஒரு படி செல்ல  
மேலே படிக்க இங்கே செல்க  




8 comments:

  1. ஆசிரியரைப் போற்றுவது நமது கடமை.

    அருமையான பகிர்வுகள்..

    சிறப்பான சிந்தனைகளை அறியத் தந்ததற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. எமது தளத்தின் தொடர்பு தந்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  3. ஆசிரியர் தினத்தை நினைவு கூர்ந்தமை நன்று!

    ReplyDelete
  4. சிறப்பானவர்களுக்கு சிறப்பான பகிர்வு...
    ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. ஆசிரியர் தின வாழ்த்துகள் அய்யா :)

    ReplyDelete
  6. ஆசிரியர் தினத்தினைச் சிறப்பான முறையில் நினைவு படுத்தியிருப்பது அழகு....

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  7. வள்ளுவர் நெறி பரப்பும் தங்களுக்கு, எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. திருமதி ராஜேஸ்வரி
    திரு வெங்க்ட நாகராஜ்
    திரு சூர்ய ப்ரகாஷ்
    திரு வரலாற்று சுவடுகள்
    திரு இளங்கோ
    திரு திண்டுக்கல் தனபாலன்

    அனைவரது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

    சுப்பு ரத்தினம்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி