Pages

Thursday, August 30, 2012

என்னங்க ?




என்னங்க ?

என்ன என்னங்க ?

என்னவா ? ஒரு மணி நேரமா கத்திண்டே  இருக்கேன் ? காதிலே விழல்லையாங்க ?

ஒரு மணி நேரமா ? பொய் சொல்லாதே ? ஒரு நிமிஷம் கூட இல்லை.

நானா பொய்  சொல்றேன் ! என் மூஞ்சியைப் பாத்து சொல்லுங்க.

ஏன் உன் மூஞ்சிலே தான் எதுனாச்சும் ஒட்டி இருக்குதா ?

உங்க மூஞ்சிலாதங்க அதெல்லாம் ஒட்டி இருக்கும். என் மூஞ்சி நெத்தி எல்லாம் எப்பவுமே பட்டுபோல பளிச்சுன்னு தான் இருக்கும்.

அப்ப என் மூஞ்சிலே என்ன ஒட்டி இருக்குதுன்னு சொல்றே ?

மூஞ்சிலே மட்டுமா ? உடம்பு பூராவே இருக்கு.

அது என்னடி அப்படி கண்டே ?

நான் மட்டுமா கண்டேன் .  யாரைபாத்தாலும் அதே தானே சொல்வாக.

அது என்ன சொல்வாக ?


அது சரி. என்ன விஷயம்னு கூப்பிட்ட? ஒரு முக்கியமா விஷயம் பாத்துகிட்டு இருக்கேன்ல ?

அப்படி என்னங்க முக்கியமான விஷயம் ? சாம்பார் கொதிக்குது. குக்கர் சத்தம் போடுது. அனைங்க அணைங்க அப்படின்னு ஆயிரம் தரம் சொல்லணுமா ?

(மனசுக்குள்ளே ) (அனைங்க, அணைங்க  அப்படி நீ சொல்லாமலேயே அணைச்ச காலம் எல்லாமே அம்பது வருசத்துக்கு முன்னாடியே போயிடுச்சே )

ஏன்  நீ என்ன  பண்ணுறே ? நீ போய் அணைக்க வேண்டியதுதானே ?

நான் என்ன பன்னுறேனா ?  பாத்தா தெரியலையா ?

என்னத்தை பாக்கிறது ?

உங்களுக்கு எத பாக்கிறது எத பாக்க வேண்டாம் அப்படி என்னாலே கிளாஸ் எடுக்க முடியாது.   இந்த சரவணன் மீனாச்சி சீரியல் இப்ப விட்டா அப்பறம் பாக்க முடியுமா ?

அப்ப நான் தான் சமையலை கவனிக்கனுமா என்ன ?
அடேய் சரவணா ? நீ எப்படா சீரியலே முடிக்கப்போறே ?

சீரியல் முடியறதுக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ளே சாம்பார் தீஞ்சு போயிடும்.
போயி சாம்பார் வாணலியை  ஆF  பண்ணுங்க.

பண்ணிட்டேன்

குக்கரை ஆப பண்ணுங்க.

பண்ணிட்டேன்.

பண்ணிட்டேன், பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னா எப்படி. நீங்க என்ன
பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்ன கவனிக்கிறத விட்டுட்டு. ?

இத பாத்துகினு இருக்கேன்.

என்ன அது ?





என்னங்க உங்களுக்கு பொன்னாடை போத்தறாங்க ?

ஆமாண்டி. மெதுவா கேளு.

சரி வேகமா கேட்கறேன். யாருங்க அது? என்ன விசேஷம் ?

எனக்கு போன ஞாயிறு அன்னிக்கு தமிழ் பதிவாளர்கள் கூட்டத்தில் சமூக ஆர்வலர்
மூத்த குடிமகன் அப்படின்னு சொல்லி கௌரவச்சாங்க .  ஒரு நினைவுப் பரிசும் தந்தாங்க

அதான் இந்த போட்டோவாங்க ?

ஆமாண்டி   எப்படி கீறேன் பாத்தியா ? சும்மா ஸல் லுனு இருக்கேன்ல ...

ரொம்ப தான் மெலிஞ்சு போயிட்டீங்க

கரெக்ட். பொன்னாடை போத்த கூப்பிடும்போது கூடத்தான் அத சொன்னாக இப்படி ஒல்லியா இருக்கீகளே ? அது என்ன சீக்ரட் அப்படின்னாக ?

என்ன சொன்னீங்க ..

சொல்லனும்னு நினைச்சேன். மறந்து போச்சு.

என்ன அது ?

Most of us live to eat.
Some of us eat to live. 

.
என்ன செஞ்சா நம்ப உடம்ப ட்ரிம்மா வச்சுக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்க இங்கன  க்ளிக்குங்க 

சுப்பு தாத்தா ஞாயிறு இரவு ஒரு கனவு காண்கிறார் அது என்ன ? 

சுப்பு தாத்தா பாராட்டு பெற்றதை முன்னிட்டு ஒரு கச்சேரி







8 comments:

  1. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் சார்!

    மறந்து போன ரகசியத்தை இங்கே பார்த்து தெரிந்து கொண்டோம்:))!

    ReplyDelete
  2. உங்களை அன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  3. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    பேச முடிவில்லையே என்று வருத்தம்...

    ReplyDelete
  4. ஹாஹா! சூப்பரோ சூப்பர்! வாழ்த்துகள் தாத்தா! :)

    ஆமாம்... நிஜமாவே அணைச்சீங்களா இல்லையா? :P

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - அழகா இருந்தது!

    ReplyDelete
  5. பதிவர் சந்திப்பில் உங்கள் புகைப்படம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

    இனிய பகிர்வு.... :) உரையாடல் நடையை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  6. பதிவர் திருவிழாவில் உங்களை சந்தித்ததிலும். நாங்களனைவரும் உங்களுக்கு மரியாதை செய்ததிலும் அளவற்ற ஆனந்தம் எனக்கு. அதிகம் உரையாடத்தான் இயலாமல் போய் விட்டது. அடுத்த சந்திப்புல நிறையப் பேசலாம். அழகான் இயல்பான உரையாடல்களுடன் அமைந்த இந்தப் பதிவு அருமை. நன்றி ஐயா.

    ReplyDelete
  7. அழகிய வர்ணனையுடன் அருமையான பதிவு நன்றிங்க.

    ReplyDelete
  8. திருமதி ராமலக்ஷ்மி, திரு திண்டுக்கல் தனபாலன், திருமதி கவி நயா
    திரு வெங்கட நாகராஜ், திரு எல்.கே, திரு பால கணேஷ் மற்றும்
    திருமதி சசிகலா அவர்கள் எல்லோருக்கும்

    எனது நன்றி.

    எழுபது என் வயது என்றாலும்
    எழு, எழுது என
    எனை
    உற்சாகமளிப்பதும் ஊக்கமளிப்பதும்
    உங்கள் அன்பு
    உள்ளங்களே.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி