Pages

Sunday, March 18, 2012

தூங்காமலேயே கனவு கண்டுண்டு இருக்கேன்.

Courtesy: arvindsdad.blogspot.in/2012/03/who-is-great-mother-or-daughter.html



சீக்கிரம் போடும்மா பொத்தானை !! நான்  உடனே போகணும் அம்மா !!

எங்கடா கண்ணா இன்னிக்கு இத்தனை அவசரம் ஸ்கூலுக்கு ?

அம்மா அம்மா !! உனக்குத் தெரியாதா !! சசின் நூறு நூறு எடுத்துட்டாராம் 
எங்க ஸ்கூல் லே விழா கொண்டாடுறாங்க...அதிலே நாங்க டான்சே ஆடப்போறோம். 

ராசாத்தி ...போயிட்டு வாடி என் கண்ணம்மா !!  

ஏம்மா !! எம்புட்டு சம்பாதிக்கிறாரு அந்த சசின்னு ?  நம்மைப் போலவுங்களுக்கு
ஒரு வீடு கட்டி தரக்கூடாதா ?

அத நம்ப மாரியாத்தா தான் செய்யணும். செய்ய முடியும். 
நல்ல படிச்சு நீயே காணி நிலம் வாங்குவே. அதிலே ஒரு மாளிகை கட்டுவே. 
அத நினச்சு நினச்சு தான் கண்ணம்மா நான் தூங்காமலேயே கனவு கண்டுண்டு இருக்கேன்.    

என்னம்மா கனவு ?

காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும் 
அந்த காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டி தர வேண்டும். 

7 comments:

  1. நல்ல கனவு..... கனவில் தான் இது சாத்தியமோ.....

    ReplyDelete
  2. சசின் நூறு நூறு எடுத்துட்டாராம் -- காணி நிலம் எல்லாம்
    "தூங்காமலேயே கனவு கண்டுண்டு இருந்தால்தான் கிடைக்குமோ...

    ReplyDelete
  3. இவர்களின் கனவுகள் பலிக்க வேண்டுவோம்!

    ReplyDelete
  4. ம்ம்ம்...நல்ல கனவு.ஆனால் எமக்கென கனவுகளை நிரப்பியபடிதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் !

    ReplyDelete
  5. 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...'

    ReplyDelete
  6. கனவுகள் பலிக்கட்டும்!

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா..

    எனது கவிதையை பாடலாக்கி
    தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா...

    எழுதிய போதிலும் பெரும் மகிழ்ச்சி கொண்டேன் தங்களின்
    பாடல் வடிவம் கண்டு...
    மிக்க மகிழ்ச்சி ஐயா..
    இதைவிட எனக்கு பெரிய அங்கீகாரம் எனக்கு வேறு என்ன கிடைத்து விடப்போகிறது...

    என் கண்கள் பனித்துவிட்டது
    என் சிரம் தாழ்ந்த கோடானுகோடி நன்றிகள் ஐயா..

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி