Pages

Thursday, September 20, 2012

ராமலக்ஷ்மிக்கு ஜே.






உலகைக் காத்திடும் கணபதியே -- நீ
   ஓரமாய் ஒதுங்கிய தேனோ  !!

   பகலும் இரவும் பக்தர்கள் காணவே
   பந்தலில் பிரகாசமானாய்.
   அதிரும் அர்ச்சனை ஒலியில் நீயும்
   அசராமலே அமர்ந்தாய்.

    கலிகள் எங்கள் துடைத்திடவே நீ
    களிமண்ணிலிருந்து வந்தாய்.
    கழியும் எங்கள் துயரெனச் சொல்லிட‌
    களிமண்ணாகிக் கரைவாய்.  
  (  பின் 
     கடலிலே கலந்தாய்  )

இந்தப்பாட்டை  எழுத எனக்குத் தோன்றியது திருமதி ராமலக்ஷ்மி அவர்களின் வலைப்பதிவு தான். அதை எல்லோரும் அவசியம் படிக்கவேண்டும். \\

ஸோ ராமலக்ஷ்மிக்கு ஜே. 

இந்தப்பாட்டை எழுதி ஒரு நிமிடத்தில் உடனே எங்க வீட்டுக் கிழவியிடம் கான்பித்தேன். 
சக்தியில்லையேல் சிவன் இல்லை இல்லையா?
அவள் அதைப்பார்த்துவிட்டு,
கருத்து என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. 
இருந்தாலும்,
பிள்ளையார் ஏற்கனவே டயர்டா உட்கார்ந்து இருக்கார்.
அவரை நீங்கள் உங்கள் பாட்டால் 
ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்கிறாள்.

நம்மதான் துளசி கோபால் அவர்கள் அறுபது கல்யாணத்திலே மூக்கைப் பிடித்து ஒரு சாப்பாடு சாப்பிட்டு அப்பாடின்னு டயர்டா இருக்கிறோம் அப்படின்னா இங்கே பிள்ளையார் சாரும் டயர்டாத்தான் இருக்கார் 

அது சரி,  என்னோட பாட்டு எப்படி இருக்கு?


பிள்ளையாரப்பா ... நீயே வந்து 
பதில் சொல்லப்பா 


4 comments:

  1. மிக அருமையாகப் பாடியிருக்கிறீர்கள்:)! கோமதிம்மா வீட்டு பிள்ளையாருடன் நான் எடுத்த படங்களையும் இணைத்திருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  2. பாட்டு நல்லா இருக்கு.. :)

    ReplyDelete
  3. நீங்கள் பாட்டு எழுதி அதை நீங்களே அருமையாக பாடிஇருக்கிறீர்கள். எங்கள் வீட்டு பிள்ளையாரையும், ராமலக்ஷ்மி எடுத்த பிள்ளையார் படங்களையும் உங்கள் பாடலில் இணைத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    உங்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
    மாமியை மிகவும் கேட்டதாக சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. எங்கள் வீட்டு பிள்ளையார் இரண்டு பேர்
    ராமலக்ஷ்மி அவர்கள் பார்த்த பிள்ளையாருடன்
    ஃப்ரன்ட்ஸ் ஆகி,
    சுப்பு ரத்தினம் சார் வலையில் ஜாலியாகப் பாடுவதை கேட்டேன் மகிழ்ந்தேன். நன்றி சார்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி