மஸ்தான் சாகிபு பாடல்கள் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்.
எந்த ஒரு கூட்டத்திலும் குணங்குடியார் பாடல் ஒன்றினை மேற்கோள் காட்டாது இருக்க மாட்டார்.
அந்த காலத்தில், 1950 1960 களில், திருச்சி பெரிய கடை வீதியின் ஒரு சந்திலே (தங்க மாளிகைக்கு எதிரில் இருக்கும் சந்து. பெயர் சட்டென்று
நினைவுக்கு வரவில்லை )அங்கே ஒரு வீட்டில் ஒரு திண்ணை. தமிழ்த் திண்ணை என்று சொல்லவேண்டும். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தமிழ்ப் புலவர் கூடுவர். யாரேனும் ஒரு புலவர் அல்லது ஒரு தமிழ் ஆசிரியர் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவர்
.மாலை மூன்று மணி அளவில் துவங்கும் கூட்டம் . இரவு 8 மணி வரை செல்லும். அதில் வருகை தந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பொருள் பற்றி பேசுவர் அல்லது தாம் இயற்றிய கவிதை (பொதுவாக அந்தக்காலத்திலே எல்லாமே மரபுக் கவிதை தான்) தனை அரங்கேற்றுவர். ஆறுமுக நாவலர், பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார், பேராசிரியர் இராதாகிருஷ்ணன் எனது உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் குலசேகரன் போன்றவர்கள் பேச்சினை நான் அங்கு கேட்டு இருக்கிறேன். திருமூலர் பாடல்கள் பற்றி மாதம் ஒரு முறையாவது சொற்பொழிவு நடக்கும்.
தத்துவப் பாடல்கள் பல அந்தக் காலத்திலே முதல் நிலை வகுத்தன.
மஸ்தான் சாகிபு பாடல்கள் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்.
எந்த ஒரு கூட்டத்திலும் குணங்குடியார் பாடல் ஒன்றினை மேற்கோள் காட்டாது இருக்க மாட்டார்.
சூபி தத்துவங்களை உள்ளடக்கி இருக்கும் இப்பாடல்களில் பல அந்தக் காலத்தில், என் தந்தை படிக்க பாடக்கேட்ட எனக்கு மனப்பாடமாக இருந்தன. மஸ்தான் சாகிபு பாடல்களை ஒரு தத்துவக்கடல் என்று சொல்லவேண்டும். அதில் முழுகி விட்டால் எழுந்து வரும் எண்ணமே வராது.
ஒரு உதாரணம். இப்படத்தில் உள்ள கவிதை , பிறந்த எல்லா உயிர்களுமே பொம்மலாட்டத்தில் கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மைகள் எனவும் அவற்றினை ஆட்டிப்படைப்பவர் யாரெனத் தெரிய, கட்டிய கயிற்றினைப் புரிதல் அவசியம் என்பார்.
கயிற்றை ஆட்டுபவனுக்கும் பொம்மைக்கும் உள்ள உறவு என்ன?
தான் ஆட்டப்படுகிறோம் என பொம்மை உணர்கிறதா?
தனக்கும் தன்னை ஆட்டுவிப்பவனுக்கும் உள்ள இணைப்பு, பந்தம் பற்றி அவன் ஆராய்வது உண்டா?
கட்டியிருக்கும் கயிறின் வலிமை என்ன? எத்தனை நாள் இந்த ஆட்டம்? ஏன் இந்த பொம்மலாட்டம்?
குணங்குடி மஸ்தான் சாகிபு
அவர்கள் பேரில்
மகாவித்துவான் திருத்தணிகை
சரவணப்பெருமாளையர் அவர்கள் பாடிய
குணங்குடியார் நான்மணிமாலை
அவற்றில் ஒன்று இங்கே.
மாறுகொண் டென்மன மாகிய பரியை
வீறுகொண் டவாவெனும் வீரனிங் கொருவன்
அழுக்கா றெனுங்கல் கணைமிசை யார்த்தாங்கு
இழுக்கா றுடைசின மெனுங்கலி னஞ்சேர்த்து
அளியறு செருக்குமிக் காகிமே லிவர்ந்து
வளியெனும் வாதுவன் வாய்ந்துடன் தொடர்தரப்
பொற்பெனுங் கொடுவழி புகுந்திடச் செய்தலும்
நெறிபிறழ்ந் தப்பரி நீள்புலக் கான்புகுந்து
அரிவையர் மயக்கெனும் குளத்தினுள் வீழ்ந்துந்
தெரிபொன் னெனும்வனத் தீமிதித் தழுங்கியும்
பகர்மண் ணெனுங்கொடும் பாறைதாக் குற்று
மிகுபெருந் துன்பொடு மெலிந்துழல் கின்றதால்
இன்குணங் குடியான் எனுந்தவர்க் கரசே
நன்குமற் றதனைநீ நல்வழி திருப்பியே
அருளெனும் வாளினவ் வீரனைத் துமித்துக்
கருதமக் கல்லனை யாதிகள் களைந்தொழித்து
என்வசம் ஆக்குவை யெனின்யான்
நின்வச மாக்குவன் நினதியல் புகழ்ந்தே. (16)
நம்மிடையே கவிதை படைக்கும் பலர் இருக்கின்றார்கள். மரபுக் கவிதை மட்டுமன்றி, வசனக் கவிதை அல்லது மரபு சாராக் கவிதையில் மனதை ஈர்ப்பரும் உள்ளார்.
இவர்கள் இந்த குணங்குடியார் கவிதையின் பொருளினைச் சிறப்பினை தனது கவிதையாகச் சொன்னால் எப்படி இருக்கும்?
மேலும், இன்னுமொரு படி எடுத்து வைத்து மஸ்தான் சாகிப் அவர்களின் கருத்துக்களை இக்காலக் கவிதையில் எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் !!
பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்ற வரிகளைத் தான் எத்தனை எத்தனை தரம் படித்திருப்போம் ! பாடியிருப்போம் !! மகிழ்ந்திருப்போம்.
அண்மைக்காலங்களில், கவிதை எழுதுவதே தனது தொழில் என்று தளரா உறுதியுடன் , காலைக் கதிரவன் விடியல் போல், கண் துஞ்சாது, தமிழ்ப் பாடல் ஒன்று படைப்பதே தன் தினசரிக் கடமை எனக்கொண்டு,
இலக்கியம் சமைப்பவர்களில் முதன்மையானவர்களில் முன் நிற்பவர் பாவலர் சசிகலா மேடம் . வீறு கொண்டு எழுதுவதில் இவர் ஒரு பெண் சிங்கம்.
தமிழ் மொழி உணர்வுகளைத் தாங்கி வரும் இவர் படைப்புகள் எல்லா எல்லைகளையும் கடந்து தமிழ், தமிழ் என்ற எண்ணம் ஒன்றைத் தான் தனது அடித்தளமாகக் கொண்டுள்ளன.
இந்நூற்றாண்டின் அவ்வை பிராட்டி என ஒரு எதிர்காலத்தில் இவர் தமிழ் மக்களால் போற்றப்படுவார் என்பது திண்ணம்.
இவரது கவிதையை பாடுவதே நான் தமிழுக்குச் செய்யும் தொண்டென நினைக்கிறேன்.
நவராத்திரி திரு நாட்கள் நடக்கும் இந்நன்னாளில்
நமது ஒரே பிரார்த்தனை துர்கை, இலக்குமி, நா மகள் அன்னையிடம்
இவர் எல்லா நலமும் பெற்றிட இவருக்கு இவர் குடும்பத்தாருக்கு அருள்
புரியுங்கள்.
வாருங்கள் தமிழ்ப்ப்பதிவர்களே !!
எல்லா நலமும் பெற்று வாழ்க என இப்பாவலரை வாழ்த்துவோம்.
வாருங்கள்.
மங்கள நாதம்
எங்கும் ஒலிக்கிறது.
இவர் எண்ணங்களில், எழுத்தில், பேச்சில், மூச்சில்.
முருகா நீ தானே தமிழ்க் கடவுள் . அவ்வை முதலாய் அனைத்து புலவரும் சங்க காலம் தொடங்கி இன்று வரை உன்னை வணங்காது கவி படைத்தோர் இல்லை. ஆறு படை வீடு எங்கிலும் உனது படை. உன்னை வணங்குவோர் எண்ணுக்கு எல்லை இல்லை.
தமிழ்க் கடவுளாம் நீ.
தமிழ்ப் பதிவாளர் மாநாட்டுக்கும் நீயே தலைவன்.
பதிவர் மாநாட்டினை முன் நின்று நடத்தும் முத்து நிலவன் அவர்களும் அவருக்கு உறு துணையாய் நிற்கும் ஆயிரம் ஆயிரம் தமிழ் பதிவாளரும் புதுகையிலே ஒன்று கூடுகின்றனர்
அவர்கள் வெற்றி பெற உனது அருள் வேலை அனுப்பி வைப்பாய். புதுக்கோட்டையிலே அக்டோபர் 11ம் தேதி.ஞாயிறு அன்று அந்த மாநாடு சரித்திரம் படைத்திட அருள் புரிவாய்.
சுப்பு தாத்தா இன்று தான் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரெஸ் ல் ரயில் பயணம் டிக்கட் பதிவு செய்ய முனைகிறார்.
அவருக்கு,
லோயர் பெர்த்தில் ஒரு இடம் வாங்கிக் கொடு. முடிந்தால்,
அப்பர் பெருமானுடன் ஒரு வார்த்தை சொல்லிவிடு. அன்று சிவனுக்கும் உகந்த நாள்.
சொல்லிவிட்டேன்.
விழாவை இனிதே நடத்தி வைப்பது இனி உன் பொறுப்பு.
கண்டு களிப்பது உண்டு மகிழ்வது மட்டுமே என் சிறப்பு.
அவன் விட்டுச்சென்ற பாக்கள் என்னும் பூக்களின் வாசம்!
கல்வடிவக்கடவுளைபோல்
அவன் சொல்வடிவத்தமிழ் சிற்பம் காலத்தால் அழியுமா என்ன!வெறும் தமிழ்
வண்ணத்தமிழ் ஆனது அவன் கைவண்ணத்தில்! அணையா ஜோதியாக அவன் அறிவு விளக்கு
எரிந்துகொண்டே இருந்ததினால் அளவில்லா கவிதைகளை அள்ளி வழங்கிவிட்டான்! அவனே
மரபுக்கும் புதுமைக்கும் நடுவே நின்ற நெருப்பு!
ஷைலஜா அவர்களுக்கு நன்றி சொல்லுவோம்.
இதை விட அழகாக பாரதியின் எழுத்துக்களை நான் என்ன வர்ணித்து எழுதிட இயலும் ?
அதையே எல்லோரும் படிக்க வேண்டும்.
இன்றைய கவிதை உலகம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கவில்லை. வீறு நடை போட்டு விண்ணைத் தொட்டு விட்டு அதற்கு மேலும் அண்டத்திற்கே ஒளி சேர்க்கிறது என்றால் மிகை அல்ல.
நான் இசை அமைத்திட்டு பாடும் பாடல்கள் கவிதைகள் பலவற்றின் ஆசிரியர்கள் இன்றைய முன்னணி கவிஞர் ஆவர். இவர்கள் அண்மைய காலமாக, மரபு சாராக் கவிதைகளை சற்று நேரம் மறந்து விட்டு,
மரபு ஒத்த, தொல்காப்பியம் காட்டிடும் வழியில் பாடல்கள் பல இயற்றுகின்றனர். சந்தம் எதுகை மோனை எல்லாமே இவர்கள் அங்குசத்திற்குக் கட்டுப்பட்ட யானை போல் இருப்பதைப் பார்த்து வியக்கும் வண்ணம் உள்ளது.
பாவலர் பட்டம் பெற்ற பலர் இனியா, இளமதி, சசிகலா, கிரேஸ் , சீராளன் போன்றோர் எழுதும் கவிதைகள் மிக்க சிறப்புடைத்ததாக இருக்கின்றன.
இன்று நான் பார்த்த ஒரு கவிதையில் ஒரு இலக்கணக் குறிப்பு காணப்பட்டது.
பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க நேரிசை வெண்பா வர வேண்டும்! நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் ! நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க குறள் வெண்பா வர வேண்டும் !
பாவலர் இளமதி அவர்கள் எழுதிய வயற்காட்டு பாடல் இது. பெரும்புலவர் பாரிஸ் நகரத்தைச் சார்ந்த புலவர் பாரதி தாசன் அவர்களால் பாவலர் எனப் போற்றப்பட்டு, பட்டம் வாங்கிய பின் எழுதிய முதற் பாட்டு என்பதாலும் சிறப்புடைத்து. படம் கூகிளாருக்கு நன்றி.
புதுவையிலே அக்டோபர் திங்கள் 11ம நாள் நடக்க இருக்கும் பதிவர் மா நாட்டினை ஒட்டி, பதிவாளர் கீதா துளசிதரன் அவர்கள் இயற்றி, தமது வழிதனிலே இட்டு இருக்கும் பாடல் இது.
பெரும்புலவர் பிரான்சு நாட்டில் தமிழ் மணம் பரப்பி வரும் புலவர் பாரதி தாசன்
அவர்கள் தமிழின் பெருமையை, தமிழ் நாட்டின் வளமையை பொலிவினை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார் பாருங்கள்.
இன்று நான் வலைச்சரத்தில் படித்த புதுமைக் கவிதை தனை பாடி மகிழ்கின்றேன். இந்த வாரம் ஆசிரியர் பணியதனை மேற்கொண்டு, கவிதை மழை பொழிந்து கொண்டு இருக்கிறார் புலவர் பாரதிதாசன் அவர்கள். அவர் பிறந்த மண் புதுவை. புதுவையின் பெருமையை பறை சாற்றும் நற்கவிதை இது. பாட்டினை இயற்றிய பிரான்சு நாட்டுப் புலவர் இரண்டாம் பாரதி தாசன் அவர்களை எத்துணை பாராட்டினாலும் அது மிகையாகாது. பாட்டினை இங்கும் கேட்கலாம்.
எல்லோரும் இன்புற்று எல்லா நலங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்.
மன்மத ஆண்டு சித்திரை மாதப்பிறப்பு.
தமிழ்க்குடி மக்கள் கொண்டாடும் இந்த சித்திரை த்திங்கள் திருவிழாவினை
எனது வலை நண்பர்கள் எவ்வாறு சித்தரிக்கிறார்கள் என்று பார்க்க சிலர் வலைக்குச் சென்றேன். +Venkataraman Nagarajan வேங்கட நாகராஜ் அவர்கள் இன்று பிறக்கும் மன்மத ஆண்டிற்கான வெண்பா
பாடல்......ஒன்றினை பதிவு இட்டு நண்பர்களை வாழ்த்தி இருக்கிறார்.
திருமதி ரேவதி நரசிம்மன் அவர்கள் எல்லோரும் இனிதே வாழவேண்டும் என வாழ்த்தி மகிழ்ந்து இருக்கிறார்கள் . அவர்கள் மஞ்சள் நிற காசியா ப்லச்சிங் மரத்தை படம் எடுத்து போட்டு தமிழ் புத்தாண்டு தனை பூக்கள் ஆண்டாக மாற்றி இருப்பது புதுமை.
நல்ல மனதுடன் நாம் இறைவனை வணங்கும்போது நம்மை எல்லா நலன்களுமே தடை இன்றி, வந்தடையும் என்று இவர் சொல்வதில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. நீங்கள் அவசியம் படிக்கவேண்டிய பதிவு இது.
+Tulsi Gopal மன்மதன் வந்தானடி என்க்கொண்டாடுவது எங்களை அக்கா அத்திம்பேர் எனச் சொந்தம் கொண்டாடும் உடன் பிறவா சகோதரி துளசி கோபால் அவர்கள்.
கேரளா விஷூ , ஈஸ்டர் பண்டிகை, மற்றும் தமிழ்ப்புத்தாண்டையும் சேர்த்து த்ரீ இன் ஒன்னாக கொண்டாடிய அவர்கள் வலையில் காணப்படும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
www.thulasidhalam.blogspot.com
எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்களை எப்படி எல்லாம் வலை நண்பர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் !!!
பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடி மகிழ்கிறார்கள் என்று பார்க்க வீடு வீடாக விரைந்து போனேன்.
முதலில் நான் பார்த்தது சசி கலா மேடம் அவர்கள். +Sasi Kala
சசிகலா அவர்கள் பிரமிக்கத்த ஒரு பொங்கல் கவிதை எழுதி அசத்தி இருக்கிறார்.
கவிதையைக் காண இங்கே சொடுக்கவும். பாடலை சுப்பு தாத்தா பாட கீழே சொடுக்கவும்.
sasikala
www.veesuthendral.blogspot.com
அடுத்து, இனியா அவர்களும் தனது காவியக்கவி எனும் வலையிலே பொங்கலை மகிழ்வுடன் கொண்டாட, எனக்கு வரம் தந்து அருள்வாயே என்று ஒரு மிகவும் அழகான பாடலை பொழிந்து
வாணி தேவியின் அருள் வேண்டி இருக்கிறார். அவரது வலை இங்கே.www.kaviyakavi.blogspot.com
பாட்டு சுப்பு தாத்தா பாட கீழே.
+
மூன்றாவதாக க்ரேஸ் அவர்கள். அயல் நாட்டில் கணினியில் பணி புரியும் அவர்கள் உழவுத் தொழிலின் பெருமை குறித்து பாடுவது இங்கே.
இலைதளை கொண்டே வீடுசெய்யலாம் - உழவு இல்லையென்றால் எதை உண்பீர் தெளிந்திடுவீரே!
அறுவடைத் திருநாளாம் பொங்கல் இன்று அறுசுவை உணவோடு மகிழ்ந்து கொண்டாடுவீர்
உழவும் உலகமும் தழைக்கவே போற்றுவோம் உலகம் சுற்றும் மஞ்சள் கதிரவனை!
வாழ்த்து அட்டைகள் இல்லாத பொங்கல் அந்தக் காலத்தில் இல்லை.
ஒரு ரூபாய் முதல் ஒரு நூறு ரூபாய் வரை வித விதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள்.
அவை பொங்கல் முடிந்தபின்னும் அடுத்த பத்து நாட்களுக்கு தபால் காரர் தினம் ஒன்றாக இரண்டாக கொடுப்பார்.
எந்த ஒரு தபால் அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும். இவற்றை வீதி வாரியாகப் பிரிப்பதற்கே அவர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனசாக தரவேண்டும்.
வாழ்த்துக்கள் வாங்க எத்தனை நேரம் செலவிட்டு இருப்போம் !!
ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கிலே விற்ற இந்த வாழ்த்து அட்டைகள் இன்று இல்லையே என்று பரிவுடன் ஒரு ஆதங்கத்துடன் கேட்பது குமார்.
அன்று வெளிவந்த மூன்று அட்டைகளை இன்று அவர் தம் வலையிலே வெளியிட்டு இருப்பது எனக்கு 1960 ம் வருடங்களை நினைவு படுத்துகிறது.
அந்தக் காலத்துலே இந்தக் கிழவிக்கு எத்தனை வண்ண வண்ண வாழ்த்து மடல் அனுப்பி இருப்பேன். ஏதாவது ஒன்றாவது கையில் வைத்து இருக்கிறாளா எனத் தெரியவில்லை.
தமிழர் திரு நாளிதன் உட்பொருள் என்னும் தலைப்பிலே மதுரை ரமணி எஸ். அவர்கள், நாம் இருப்பதின் காரணம் யார் என்ன எனத் தெரிந்து அவர்களுக்கு நன்றிக் கடன் சொல்லவே இந்த பொங்கல் திரு நாள் என்று சொல்கிறார். அதுவும் சரிதான்
இளங்கோ அவர்கள் தமிழ் இந்துவின் பொங்கல் மலரை வர்ணித்து இருக்கிறார். மலரை நானே வாங்கி படித்த உணர்வு வந்தது. +Gomathy Arasu திருமதி கோமதி அரசு அவர்கள் பதிவுக்குச் சென்றேன். எங்கள் தஞ்சை கிராமங்களுக்குச் சென்று அங்கு உழவு த்தொழிலும் உழவர் வாழ்வும் ஒன்று சேர இருப்பதை நேராக பார்ப்பது போன்று இருக்கிறது. படங்கள் அசத்துகின்றன. அதைத் தொடர்ந்து பண்டிகையின் சிறப்பும் வர்ணிக்கப்படுகிறது.
+Karanthai Jayakumar
கரந்தை ஜெயகுமார் அவர்கள் வாழ்த்துகிறார்.
ஜி.எம்.பி. வாழ்த்துகிறார். அருணா செல்வம் எழுதிய கவிதை பொங்கலுக்கு முதல் நாள் போகியில் எதை கொளுத்த வேண்டும் என குறிப்பாக சொல்கிறது. சரியான அறிவுரை தான். ஆனா கேட்கவேண்டிய மக்கள் கேட்கணுமே !!
மேலும் இவர் எழுதிய ஒரு வெண்பா படித்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
அதில் ஈற்று வரிகள் இதோ:
வன்பகை ஓடிட, வஞ்சனை இன்றித்
தெளிதமிழ்ப் பேசிட, தெம்புடன் நாமும்
களிப்புடன் ஆடிட, காதலரும் கூடியே
போற்றிடும் பொங்கலாய்ப் பொங்கு!
(பஃறொடை வெண்பா) பொங்கல் பால் பொங்குவது போல், தமிழர் உள்ளமெல்லாம் உவகையினால் பொங்கவேண்டும் என்று கூவி அழைத்து இருக்கிறார், தமிழர்களை. உணர்வு உள்ளிட்ட கவிதை இது. பார் முழுவதும் இக்கவிதையை பாராட்டும். ஐயமில்லை. +kummachi K கும்மாச்சி போகி பண்டிகை, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற விளக்கம் தந்துவிட்டு, போகிற போக்கில், போகி அன்று பழைய பஞ்சாங்கங்களை கொளுத்தவேண்டும் என்கிறார். சரிதான். வீட்டிலே பாதி இடம் காலி ஆகி விடும். எல்லாம் நன்மைக்கே.
********************************************************** +Thenammai Lakshmanan
சிவப்பரிசி பனை வெல்லப் பொங்கல் செய்வது எப்படி என திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் குமுதம் இதழில் குறிப்பு தந்து இருக்கிறார்கள் . அவர்கள் வீட்டுக்கு சென்று ஒரு வாய் பொங்கல் சாப்பிடலாம் என்று மனதில் தோன்றியது. ஒரு நாலு கரண்டி பொங்கல் சின்னதா பார்ஸல் செய்து இந்த தாத்தாவுக்கு அனுப்பக் கூடாதோ !!
***************************************************** +பார்வதி இராமச்சந்திரன். பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் பொங்கல் வாழ்த்து சொல்லி சக்கரை கட்டிகள் செய்வது எப்படி என்றும் எழுதி உள்ளார். எல்லோர் வீடுகளிலும் பாலுடன் சந்தோஷமும் சேர்ந்து பொங்கட்டும் என்று அவர் எழுதியதைப் படித்து மனம் நெகிழ்ச்சி அடைந்தது.
அவரது பதிவிலே ஒரு கோலம் அழகோ அழகு.
புலவர் இராமானுஜம் வலைக்கு சென்றேன்.
அவர் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார்.
மின்னல் வரிகள் முன்னே நின்றேன். பதிவர் மாநாடு தேவையா என்ற கோபத்திலே இன்னமும் இருக்கிறாரோ ? சார்...சார்... பொங்கல் இனிய பொங்கல் சாப்பிடுங்க சார்.
துளசி கோபால் அவர்கள் இன்னமும் பாண்டி பஜார் லேயே இருக்கிறார். கோபால் இளநீர் குடிக்கிற போடோ சூப்பர்.
நாளைக்கு பொங்கல் வாழ்த்து சொல்வார்கள் என நினைக்கிறேன்.
**************************************************** +chandrasekaran narayanaswami
சென்னை பித்தன் வீட்டுக்கு சென்றேன்.
அவரோ எதையோ மும்முரமாக எழுதிக்கொண்டு இருந்தார். என்னவென்று எட்டி பார்த்தேன்.
பெரும்பானமையானவர்களுக்குச்
சர்க்கரை வியாதி;சர்க்கரைப்
பொங்கலைவளைத்துக் கொண்டு
சாப்பிட முடியாது.அது தவிர ,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்டரால்எல்லாம்.’நெய்
பெய்து முழங்கை வழி வார’ எனபதை நினைத்துகூடப் பார்க்கமுடியாது.சம்பிரதாயத்துக்கு
ஏதோ இனிப்பு குறைந்த,நெய்யில்லாத பொங்கல் சாப்பிடவேண்டியதுதான்.
எங்கள் காலனியில் மிகவும்
சம்பிரதாயமான ஒரு வீட்டிலிருந்து கொஞ்சம் பொங்கல் நாளை வீடு தேடி வந்து விடும்
ருசிக்குத்தானே அது
பசிக்கல்லவே!
சார் !1 எனக்கு சக்கரை வியாதி சுத்தமா கிடையாது. நான் எப்ப வரட்டும் ? ஒரு பானை நிறைய பொங்கல் தந்தாலும் பத்தே நிமிசத்தில் சாப்ப்பிட்டு விடுவேன். என்று சொல்லணும் .
***************************************** +Vani Muthukrishnan வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டே ஒரு கோலம் வரைந்து இருக்கிறார்.
இவரது கோலங்கள் எல்லாமே பிரமிக்கத் தக்கவை.
காணக் கண் கோடி வேண்டும் என்றால் உண்மை.
எல்லா நலன்களும் தரும் ஆதவனைப் போற்றும் திருநாள் இது.
உழவின் பெருமையை போற்றும் தினம் இது.