Pages

Tuesday, September 08, 2015

ஒரே பாடலில் நாலு வெண்பாக்கள்.


இன்றைய கவிதை உலகம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கவில்லை. 
வீறு நடை போட்டு விண்ணைத் தொட்டு விட்டு அதற்கு மேலும் அண்டத்திற்கே ஒளி சேர்க்கிறது என்றால் மிகை அல்ல. 

நான் இசை அமைத்திட்டு பாடும் பாடல்கள் கவிதைகள் பலவற்றின் ஆசிரியர்கள் இன்றைய முன்னணி கவிஞர் ஆவர். இவர்கள் அண்மைய காலமாக, மரபு சாராக் கவிதைகளை சற்று நேரம் மறந்து விட்டு, 

மரபு ஒத்த, தொல்காப்பியம் காட்டிடும் வழியில் பாடல்கள் பல இயற்றுகின்றனர்.  சந்தம் எதுகை மோனை எல்லாமே இவர்கள் அங்குசத்திற்குக் கட்டுப்பட்ட யானை போல் இருப்பதைப் பார்த்து வியக்கும் வண்ணம் உள்ளது. 

பாவலர் பட்டம் பெற்ற பலர் இனியா, இளமதி, சசிகலா, கிரேஸ் , சீராளன் போன்றோர் எழுதும் கவிதைகள் மிக்க சிறப்புடைத்ததாக இருக்கின்றன.

 இன்று நான் பார்த்த ஒரு கவிதையில் ஒரு இலக்கணக் குறிப்பு காணப்பட்டது. 

பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !


காவியக்கவி அவர்களின் கவிதை இங்கே காண்க. 
என் நாவில் வந்து குடி ஏறு
ஒரே பாடலில் நாலு வெண்பாக்கள். 
இனியா அவர்கள் செய்திட்ட அற்புதம்.

அதைப் பாராட்ட சுப்பு தாத்தா என்ன செய்வார் ?
வாழ்க வளர்க.
என வாழ்த்து சொல்வதோடு மட்டும் நில்லாது
பாடலை நான்கு ராகங்களில் பாடி மகிழ்ந்திருக்கிறார். 
புன்னாக வராளி, கானடா, மத்யமாவதி ராகங்கள் கேட்கலாம்.

காவியக்கவி அவர்கள் மேன்மேலும் சிற்ப்பு பெற்று, தமிழகத்தின் இலக்கிய வானில் ஒளி மிகு விண் மீன் என வலம் வருவார்.

3 comments:

  1. வணக்கம் ஐயா!

    அட.! அட...!! அடடா...!!!..

    அற்புதம் ஐயா!

    உள்ளத்தில் சொல்லவொணா ஆனந்தம் பரவியது ஐயா!
    அழகான பாவிற்கு அற்புதமாக இராகங்களை மாற்றிப்
    பண்ணிசைத்தீர்கள்!

    இரண்டாவதாகப் பாடிய ராகம் நீலாம்பரியா ஐயா?
    மெய் மறந்தேன்!
    மிக அருமை!

    பாவெழுதிய தோழி இனியாவுக்கும்
    பாடி மகிழச் செய்த உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வணக்கம் தாத்தா !
    என்ன தவம் செய்தேன் தாத்தா தங்களைப் போன்றோர் ஆசி பெற. மகிழ்ச்சியில் துள்ளுகிறது நெஞ்சு. மேலும் எழுத ஆவல் பல மடங்கு பெருகிறது தாத்தா. எத்தனை இனிமையாக நாலு ராகத்தில் பாடி அசத்திவிட்டீர்கள். என் பாடலையும் மிளிரச் செய்கிறீர்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் ..!

    ReplyDelete
  3. வணக்கம் தாத்தா அருமையாக பாடி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி