பெரும்புலவர் பிரான்சு நாட்டில் தமிழ் மணம் பரப்பி வரும் புலவர் பாரதி தாசன்
அவர்கள் தமிழின் பெருமையை, தமிழ் நாட்டின் வளமையை பொலிவினை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார் பாருங்கள்.
வலைச்சரத்தில் இன்று கன மழை. கவிதை மழை.
நனைந்துகொண்டே இருக்கலாம். இன்புறலாம்.
படித்துக்கொண்டே இருக்கலாம் என்னைப் போன்றவர்கள் பாடிக்கொண்டே இருக்கலாம்.
நன்றி. பாரதி தாசன் அவர்களே.
வணக்கம்!
ReplyDeleteபாடும் பணியாற்றிப் பாவலர் நெஞ்சத்துள்
சூடும் சுவைக்கு நிகரேதாம்? - ஆடுகிறேன்
துள்ளிநான் ஓடுகிறேன்! துாய இசைபருகி
அள்ளிநான் ஊட்டுகிறேன் அன்பு!
ReplyDeleteவணக்கம்!
மூவேந்தர் சீருரைக்கும் பாவேந்தன் என்பாட்டை
நாவேந்திப் பாடி நலம்படைத்தீர்! - பூவேந்தி
உம்மைப் புகழ்கின்றோம்! உள்ளம் ஒளிர்கின்றோம்!
செம்மைத் தமிழால் செழித்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
ஐயா வணக்கம்!
ReplyDeleteஇந்தப் பாடல்களை என் மின்வலையில் பதிய வேண்டும் எப்படி பதிவு செய்வது!
வழியை உரைக்கவும்.
வணக்கம் ஐயா!
ReplyDeleteஎங்கள் கவிஞரையாவின் அழகிய சந்தப்பாடல்
மேலும் இனிக்கின்றது உங்கள் குரலில் பாடக் கேட்கும்போது!..
தங்களின் ஆர்வமும் அனைவரையும் ஊக்குவிக்கும் மனப்பாங்கும் உளம் நிறைந்து விட்டது ஐயா!
நலமோடு நீங்கள் வாழ வேண்டி வாழ்த்துகிறேன்!
மிக்க நன்றி ஐயா!
ஐயா பாடல் கேட்க முடியவில்லையே...
ReplyDelete