தமிழர் கிராமப்புற வாழ்விலே நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை சுவைபட தனது வலையிலே கவிதையாக மிளிரச் செய்யும் இந்த புலவர் தனது படைப்புகளிலே
காதலையும் காணக் கிடைக்கா அன்பினையும்
நாணத்தையும் நா நயத்தையும்
பண்பையும் வண்ணமிகு விழாக்களையும்
வயலோரக் கதைகளையும்
எண்ணிலடங்கா இலக்கிய நயங்களையும்
சளைக்காமல் சலிக்காமல்
அயராமல், உறங்காமல்
வானத்தே மின்னும்
நட்சத்திரங்கள் போல்
அன்றாடம்
அன்னை அன்ன பூரணியாக
அள்ளித் தருவதில்
வல்லவர்.
இன்று
கோபம் கொண்டு ஒரு
கவிதை எழுதி இருக்கிறார் என்றால்
அது ஏன்
எனத் தெரிந்து கொள்ள
இங்கே செல்லுங்கள்.
நன்றி: சசிகலா மேடம்.
மிக்க மகிழ்ச்சிங்க ஐயா. தங்கள் குரலில் பாடலைக் கேட்டு மிகவும் உளம் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.
ReplyDelete