இன்று நான் வலைச்சரத்தில் படித்த புதுமைக் கவிதை தனை பாடி மகிழ்கின்றேன்.
இந்த வாரம் ஆசிரியர் பணியதனை மேற்கொண்டு, கவிதை மழை பொழிந்து கொண்டு இருக்கிறார் புலவர் பாரதிதாசன் அவர்கள்.
அவர் பிறந்த மண் புதுவை. புதுவையின் பெருமையை பறை சாற்றும் நற்கவிதை இது.
பாட்டினை இயற்றிய பிரான்சு நாட்டுப் புலவர் இரண்டாம் பாரதி தாசன் அவர்களை எத்துணை பாராட்டினாலும்
அது மிகையாகாது.
பாட்டினை இங்கும் கேட்கலாம்.

வணக்கம் ஐயா!
ReplyDeleteவலைச்சரத்தில் தங்களின் அன்பான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா!
எங்கள் ஆசானின் அழகிய அறிமுக அகவற்பா
இன்று உங்கள் குரலால் மிளிர்கிறது!
பாவுக்குச் சிறப்புச் சேர்த்தீர்கள்!
மிக மிக அருமை!
பணிவோடு வாழ்த்துகிறேன் ஐயா!
வணக்கம் ஐயா நலம்தானே...
ReplyDeleteகாணொளி வரவில்லை ஐயா,,,,,
ReplyDeleteவணக்கம்!
ஆகா.. அருமை! அளித்தீர் அரும்பெருமை!
ஓகோ எனஓங்கும் என்புலமை! - பாகாகப்
பாடிப் படைத்தீர்! பசும்புதுவைப் பேரழகைச்
சூடிப் படைத்தீர் சுவை!
ReplyDeleteவணக்கம்!
நல்ல கவிகளை நாளும் வரவேற்று
வல்ல இசையை வழங்கிடுவார்! - தொல்லுலகில்
எப்பொழுதும் பாடி இனித்திடுவார்! மின்னிசைக்குச்
சுப்பெனும் தாத்தா சுடர்!