Pages

Monday, September 09, 2013

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால்

விநாயக சதுர்த்தி தினமான இன்று நம் எல்லோருமே விநாயகன், கணேசன், பிள்ளையார், கணபதி, என்று பல்வேறு பெயருடைய விநாயகரை விக்நேச்வரரை தரிசித்து வருவது வழக்கம் . 

காலையில் வீட்டிலும் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து


 நீதானே அந்த விநாயகன் என்று  அமர்த்தி ஆவாஹனம் செய்து நமக்குத் தெரிந்த நெஞ்சக்கனகல்லூ பாட்டு முதல் விநாயகர் அகவல் வரை , வாதாபி கணபதிம் முதல் மூலாதார மூர்த்தே கிருதி வரை ஸ்ருதி சுத்தமாக  இருக்கிறதோ இல்லையோ, மனசு சுத்தமாக வைத்துக்கொண்டு பாடி, 


அந்த வேகத்துக்கும் விவேகத்துக்கும் அதிபதியாக அரச மரத்தடியிலே ஆனந்தமாக உட்கார்ந்து வருவோர் போவோர் அனைவருக்கும் தன்னை வணங்குவோர் சுற்றி வருவோர் கொழுக்கட்டை படைப்போர்,




 மாலை போடுவோர் முல்லை, மல்லி, ரோஜா, என்று அன்றாட மக்கள் விரும்பி சூடும் பூக்கள் தான் என்றில்லாது எருக்கம்பூ மாலையிலும் இன்பம் கண்டு, 

தோப்புக்கரணம்  போடுவோர்,



அருகம்பில்லை எடுத்து அருகிலே வைப்போர்,

நூற்றெட்டு நாமா சொல்வோர்,அஷ்டோத்தரம் சொல்வோர், சஹச்ர நாமா சொல்வோர், கணபதி ஹோமம் செய்வோர் என்று இருப்போர் மட்டுமன்றி,

கணேசா என்னைக் காப்பாத்துப்பா என்று கண்ணீர் மல்கி கண்முன்னே நிற்பவர்க்கும் கடைக்கண் பார்வையாலே கனி அருள் தரும் 

பிள்ளையார்பட்டி பிள்ளையார் முதல் திருச்சி உச்சிப்பிள்ளையார் வரை, திருவலஞ்சுழி வலம்புரி விநாயகர்  முதல், வேழ முகத்தானே ஞான குருபரனே என்று ஆனந்த விநாயகனாக, அற்புத விநாயகனாக, வினை தீர்த்த விநாயகனாக, சிந்தாமணி விநாயகன் கோவிலில் வீற்றிருக்கும் சிந்தை கவர்ந்த 

அந்த மூலாதாரப் பெருமானை 

கம் கணபதியே நமஹ என்று உச்சரித்துக்கொண்டே ஒரு நூறு தடவை அவன் அருளை வேண்டிக்கொண்டே 




சென்னை முழுவதும் சுற்றி எல்லா பிள்ளையார் கோவில்களுக்கும் இயன்றவரை, உடல் இடம் கொடுக்கும் வரை சென்று  வரலாம் என்று நினைத்தபோது,

நினைத்தபோது நீ வரவேண்டும் என்று சொன்னபடி, 

அந்த விநாயகப்பெருமானை நினைந்து நினைந்து மனமுருகி பாடி இருக்கும் பதிவர் வலைகளுக்கெல்லாம் சென்று வந்தாலே பிள்ளையார் கோவில்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்குமே என்று அந்த தொந்திக்  கணபதியே எனக்கு சொல்வதாக கனவில் வந்து  சொல்வார் என எனக்கு தோன்றியதால்,  

முதன் முதலில் நான் ஒரு காலத்து இருந்த திருச்சி ஆண்டார் வீதி அரச மரத்தடியிலே வீற்று இருக்கும் பிள்ளையாரை தினம் தரிசிக்கும் ,

 எனது நண்பர் திரு வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் வலைக்குச் சென்றால்,என்ன அற்புதம், என்ன அற்புதம் ... ஈசனை வணங்குமுன் என் குருவையும் முதற்கண் நினைத்திட வேண்டுமேன சொல்லும் அவர் வலையில் காஞ்சி முனிவரின் அருள் பெற்று, 


பதிவின் தலைப்போ ஓடி வந்த பிள்ளையார்  
நம்மை த்தேடி வந்து நமக்கெல்லாம் அருள் புரியும் பிள்ளையாரப்பாடிய புகழ் பெற்ற அவ்வையின் அகவல் அதையும் ஒரு முறை பாடி, 

பின் நான் பல காலம் வாழ்ந்து இருந்த தஞ்சைத் தரணி புகழ் எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ்  அவர்கள் தமிழ் தரும் கணபதி எனும் தலைப்பிலே , 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால் நோக்குண்டாம் 


எனப்பாடி மகிழ்ந்து பின் அவர் இயற்றிய ( என நினைக்கிறேன் ) பிள்ளையார், பிள்ளையார் பாடலை எனக்கேற்ற வகையில் ராகத்தில் பாடி, பதிவேற்றி, 


செம்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் வலம் வரும் வேளையிலே

ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் அங்கு வந்த வேளையிலே எவ்வாறு யானை ஊர்வலம் நடுவிலே அடம் புடித்ததும், சுவாமிகள் தமது பழைய ஆக்ஞை தனை நினைவில் கொண்டு உடன் அந்த விநாயகனுக்கு 108 தேங்காய் உடைத்து வழி பட்ட சரித்திரத்தையும் பார்த்து அதிசயித்து, பின், 

அம்பாள் அடியாள் அவர்கள் வலையில் ஒரு அழகான கவிதை படித்து 
தும்பிக்கையான் துணை இருக்க துயர்கள் யாவும் மறையட்டும் என அவர்களுடன் நானும் பாடிப் பின் 
அதையும் ஆனந்த பைரவி ராகத்தில் பாடி, அவர்களிடம் யூ ட்யூபில் போட அனுமதி கேட்டு, 

திரும்பி பின் திருமதி ச்ரவாணி அவர்கள் வலையிலே விநாயகனைத் துதித்தால் வினைகள் ஓடும் என ஒரு பூங்கொத்துடன் காத்து நின்று கணபதியை தரிசித்து கொண்டு இருக்கும் வேளையிலே நானும் அந்த தமிழ் கவிதைச் சுரங்கத்துக்குள்ளே சென்று அத்தனை அருளையும் விநாயகப் பெருமானிடம் பெற்று, 

பின் எனது அருமை வலை நண்பர் ஆன்மீக வித்தகி, ஆன்மீக கடல்  திருமதி ராஜ ராஜேஸ்வரி வலை  சென்றால் 
அங்கே ஆஹா 

கருணை தெய்வம் கல்யாண கணபதி எனக்கண்டு தெளிந்து ,

நக்கீரர் எழுதிய அகவல் இங்கு இருக்கிறது என்ற செய்தி கேட்டு  திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் வலைப் பதிவுக்கும் சென்று அதையும் படித்து முடித்து,




பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்  என சூளுரை தந்து , நானும் அவன்திகாவுடன் சேர்ந்து இசை பாடி, 

 உடனே, 

கஜானனம் பூத கணாதி சேவிதம் 
பவித ஜம்பூ பல சார பக்ஷிதம் 
உமா சுதம் சோக வினாச காரணம் 
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

 என்ற சுலோகத்தையும் சொல்லி, 



திரு பட்டாபி ராமன் வலையிலே மூலாதார மூர்த்தியின் பெருமை சொல்லும் கவிதையும் படித்து மனம் உருக 

உருகி நின்றேன். 

விநாயக சதுர்த்தி ஆவணி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் சதுர்த்தி. இன்று.
விநாயகனோ அவன் பக்தர்களின் வினைகளை தினம் தோறும் அல்லவா தீர்த்து வைக்கிறான்.

நெஞ்சக்கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கரவானை பதம் பணிவோம்

காலை எழுந்து உடன் தொழுவது கணபதியையே.


ஒவ்வொருஆண்டும் இந்த பண்டிகை வந்தாலும் இந்த வருடம் வலை நண்பர்கள் வலைகள் எல்லாவற்றிலுமே விநாயகன் அவனே பிரதானமாக இருந்து எல்லோர் மனதிலுமே  குடி கொண்டு இருக்கிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் அல்லவா தெரிகிறது.

எல்லாம் அந்த பிள்ளையாரப்பன் அருள்.விக்னேஸ்வரன் 

வலை நண்பர்கள் எல்லாருக்கும் எல்லா நல்லதும் நடக்கவேண்டும் என நானும் என் வீட்டுக்காரியும் அதாவது சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் 
பிரார்த்திக்க

இன்று முழுவதும் அவன்  விக்னேச்வரனான  ( விக்னங்களை எல்லாம் விலக்குபவன் )அந்த  கணேசனின் மந்திரத்தை சங்கர் மகாதேவனுடன் நானும் சொல்வேன். .

நீங்களும் என்னுடன் சேர்ந்து ஒரு அஞ்சு நிமிஷம் சொல்லுங்களேன். 


ஏக தந்தாய வித்மஹே வக்கிர துண்டாய தீமஹி 
தன்னோ தந்திப் பிரசோதயாத்.

என்று சொல்லும்போதே நான் பாடிய இந்த பாட்டை மட்டும் மறந்துட்டீகளா?

  இன்னிக்கு நீங்களும் கேட்க வேண்டாமா என்று வீட்டுக்கிழவி குரல் கொடுக்க, 

வினாயகனே வினை தீர்ப்பவனே என்று துவங்கும் இந்த பாடலை மீனாச்சி பாட்டி என்னுடைய தர்ம பத்தினி யூ ட்யூப் லே பாடி இந்த நாலு வருசத்துலே ஒரு இரண்டு லட்சத்திற்கும் மேலே கேட்டு இருக்கிரார்கள் என்றால்

அது விநாயகன் பெருமை தான் உனக்கு அல்ல, என்று நானும் சொல்ல,

நீங்களும் கேளுங்களேன்.


இத்தனை கத்தி பாடணுமா ?

விநாயகனை மனசினால் ஸ்மரித்தல் போதுமே
என்று தோன்ற,

மகா கணபதிம் மனசா ஸ்மராமி.
ஆஹா..

கம்பீரமான நாட்டைலே அந்த பிரபலமான   பாட்டையும் 
கேட்போமா...

பாடிக்கொண்டே ஒரு சூடா கொழக்கட்டை சாப்பிடுவோம்.



9 comments:

  1. உங்களைப் போலத்தான் நானும் வலைஉலகைச் சுற்றி வருகிறேன் தாத்தா, பிள்ளையாரைத் தரிசிக்க :)

    விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. மகா கணபதிம் மனசா ஸ்மராமி.

    வலை உலகை அருமையாய் சுற்றிக்காட்டி சிறப்பான
    விநாயகர் தரிசன்ம் ..
    வாழ்த்துகள்..இனிய நன்றிகள்..

    ReplyDelete
  3. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஐயா... பாடல்கள் அருமை...

    ReplyDelete
  5. ஐயா! அருமையாக அழகான பதிவில் எத்தனை பதிவர்களையும் அறிமுகம் தந்தாற்போலவும் அற்புதமாகத் தொகுத்து தந்த விநாயகர் ஸ்பெஷல் பதிவாகக் கண்டேன்.

    மிக மிக அருமை! உங்கள் அயரா முயற்சிகண்டு வியக்கின்றேன்!

    வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன் ஐயா! ஆசீர்வதியுங்கள்!

    ReplyDelete
  6. அழகான பகிர்வு!


    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. மிக அருமை சார். :)

    ReplyDelete
  8. ஆஹா ....அருமையான விநாயக சதுர்த்திப் பகிர்வு ..!!!!! மனம் மகிழ்வின் உச்சிக்கே சென்று விட்டது .எங்களையும் சேர்த்து வாழ்த்துங்கள் ஐயா .அழகிய இப் பகிர்விர்னைப் போல் மனம் என்றென்றும் மகிழ்ந்திருகட்டும் !

    ReplyDelete
  9. பில்ளையார் சதுர்த்தி நாளில் எத்தனை பிள்ளையாரை வணங்கினோம் என்று கணக்கு பாத்து பேசிக் கொள்வோம் சிறு வயதில், அது போல் வலை உலகத்தை சுற்றி பிள்ளையார் தரிசனமும் செய்வித்து, அழகிய பாடல் பகிர்வும் தந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி