Pages

Saturday, September 21, 2013

சனிக்கிழமை அன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். பஞ்ச புராணம்.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். 

பஞ்ச புராணம். 
1. தேவாரம். 
திருநாவுக்காரசர்.
திருவித்தம் 9ம் திருமுறை.

கரு உற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு 
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்தது அலந்து எய்தொழிந்தேன் 

2. திருவாசகம்.
மாணிக்கவாசகர்.

8ம் திருமுறை. 

இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து 
எழுகின்ற ஞாயிறே போன்று 
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைத்தேன்.
'நீ அலால் பிறிது மற்று இன்மை.
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் 
திருப்பெருந்துறை உறை சிவனே 
ஒன்றும் நீ அல்லை, அன்றி ஒன்று இல்லை.
யார் உன்னை அறியகிற்பாரே 

3. திருவிசைப்பா 
பண் பஞ்சமம்.  
கண்டராத்தித்தர். 
9ம் திருமுறை.

முத்தியாளர் நான் மறையர் மூ ஆயிரவர் நின்னோடு 
ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையைத் "
"தெத்தே" என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் 
அத்தா, உந்தன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ 


4. திருப்பல்லாண்டு.

பண்: பஞ்சமம்.
 சேந்தனார்.
  9ம் திருமுறை 


நிட்டை இலா உடன் நீத்து என்னை ஆண்ட 
நிகர் இலா வண்ணங்களும் 
சிட்டன் சிவன் அடியாரைச் சீராட்டும் 
திறங்களுமே சிந்தித்து 
அட்டமூர்த்திக்கு என் அகம் நேக ஊறும் 
அமிர்தினுக்கு, ஆழ நிழல் 
பட்டனுக்கு என்னைத் தன்பால் படுத்தானுக்கே 
பல்லாண்டு கூறுதுமே. 

5. பெரிய புராணம்.
சேக்கிழார். 
12ம் திருமுறை.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் 
வேண்டுகின்றார்;
"பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல் 
உன்னை என்றும் 
மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும், நான் 
மகிழ்ந்து பாட 
அறவா . நீ ஆடும்பொழுது உன் அடியின் கீழ் 
இருக்க" என்றார்.

திருச்சிற்றம்பலம். 

1 comment:

  1. பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி