பஞ்ச புராணத்தின் தொடர் இன்று மூன்றாவது நாள்.
இன்று செவ்வாய்.
இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்திரங்கள் என்ன என பார்ப்போம்.
படிப்போம். பயனுறுவோம்.
.
3. திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பிகாட நம்பி
. 9ம திருமுறை.
பண் : சாளரபாணி.
களையா உடலோடு சேரமான் ஆரூரம்
விளையா மதம் மாறா வெள் ஆனை மேல் கொள்ள
முளையாம திசூடி மு ஆயிர வரொடும்
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடு அரங்கே.
4. திருபல்லாண்டு
பண்: பஞ்சமம். 9ம் திருமுறை.
சீரும் திருவும் பொலிய
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்.
பெற்றது ஆர் பெறுவார் உலகில் ?
ஊரும் உலகும் சுழற
உழறி உமை மணவாளனுக்கு ஆள்
பாரும் விசும்பும் அறிவும்
பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.
5. பெரிய புராணம்.
சேக்கிழார்
12ம் திருமுறை.
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கர ண்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்
திருத்து சாத்துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெரும் கூத்தின்
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்.
அருமையான பகிர்வு .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
ReplyDeleteசிவ தோத்திரங்கள் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete