இன்று வியாழக்கிழமை. குரு வாரம்.
ஆலமர் கடவுள் அவர் தென்புலம் நோக்கி அமர்ந்திருக்கும் காட்சி கண்முன்னே கண்டு களிப்பீர்.
பஞ்ச புராணத்தில் இன்று படிக்கவேண்டிய சிவ துதிகள்.
சிந்தையை சிவன் பால் திருப்பி சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், சேந்தனார், சேக்கிழார் இயற்றிய சிவ மயமான பாடல்களை பாடுங்கள்.
முதலிலே வருவது தேவாரம்.
சுந்தரர்.
பண் கொல்லி.
7ம் திருமுறை.
சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்மையாளரைப் பாடாதே எந்தை இன்று ஓர்
புகலூர் பாடுவீர் புலவர்காள்
இம்மையே தரும் சோறும் கூரையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே...
அடுத்து வருவது
திருவாசகம்.
மாணிக்கவாசகர்.
8ம் திருமுறை.
அன்றே எனத்தான் ஆவியும்
உடலும் உடமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலையோ'
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ ?
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
மூன்றாவது திருவிசைப்பா.
அருளியவர். அருள் செய்யும்
கருவூர்த்தேவர்.
9ம் திருமுறை.
தந்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த
தயாவை, நூறு ஆயிரம் கூறிட்டு
அத்தில், அங்கு ஒரு கூறு உண்கண் வைத்தவருக்கு
அமர் உலகு அளிக்கும் நின் பெருமை.
பித்தன் என்று ஒரு கால் பேசுவாரெனும்
பிழைத்தலைபொருத்து அருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னி வைத்த கங்கை
கொண்ட சோளேசரத்தானே
4. திருப்பல்லாண்டு
சேந்தனார்.
9ம் திருமுறை.
தாதையைத் தாள் அற வீசிய
சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே
பூதலத்தோரும் வணங்கப் பொன்
கோயிலும் பொனகமும் அருளி
சோதி மணிமுடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
மகாதேவ் |
ஐந்தாவதாக வருவது
பெரிய புராணம்.
சேக்கிழார்
12ம் திருமுறை.
ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை
வாந்தி மிசை அன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை
தேன் நக்க மலர்க் கொன்றை செஞ்சடையார் சீர் தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்.
திருச்சிற்றம்பலம்.
பஞ்சபுராணங்களின்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் ஐயா..