அண்மையிலே ஒரு அருமையான கைப்புத்தகம் ஒன்று கிடைக்கப்பெற்றேன்.
தமிழ் வேதம் எனச் சொல்லப்படும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய திரு நூல்களிலிருந்து ஒரு சிறிய பாடல் ஒன்றை எடுத்து,
வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலையில் ஐந்து பாடல்களைப் பாடி சிவ பெருமானைத் துதித்திட வேண்டுகிறார் இந்த புத்தக ஆசிரியர்.
இந்த ஐந்து பண்டைய தமிழ் நூல்களையும் ஆசிரியர் பஞ்ச புராணம் என்பர்.
தமிழ் மொழியினது சரித்திரமே என்னைப் பொறுத்த அளவில், சமயமும் இலக்கியமும் இரண்டறக் கலந்த ஒன்றாம்.
சமய நூல்கள் மட்டும் அன்றி, நீதி நூல்கள் பலவும் வெவ்வேறு காலத்தே புலவர் பெருமக்களால் படைக்கப்பட்டன. மக்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தன என்பது வெள்ளிடை மலை.
இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதியை வெளியிடுவதில் அப்பாடல்களைப் பாடி மகிழ்வதில் இறை அருள் பெறுவதில் மனம் நிறைவு பெறுவோமாக.
ஞாயிறு.
1. தேவாரம்.
திருஞா ன சம்பந்தர்
பண்: சீகாமரம்.
2ம் திருமுறை.
திருச்சிற்றம்பலம்.
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினவு
ஆயினவே வரம் பெறுவர் , ஐயுற வேண்டா ஒன்றும்;
வேய் அனதோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குல நீர்
தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே.
2. திருவாசகம்.
மாணிக்க வாசகர்
8ம் திரு முறை.
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி,
உவப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவ பெருமானே
யான் உனைத் தொடர்ந்துஇ சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே..
3.திருவிசைப்பா
கருவூர்த்தேவர்.
9ம் .திருமுறை
நையாத மணத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஐயா நீ உலாப்போந்த அன்று முதல் இன்று வரை
கையாரத்தொழுது அருவி கன்னாராஸ் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் ? கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
4. திருப்பல்லாண்டு.
சேத்தனார் . 9ம் திருமுறை.
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய் அடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தான் குடி குடி
ஈசற்கு ஆட்செய்வின் குழாம் புகுந்து
அண்டம் கடந்த பொருள், அளவு
இல்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ள
பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
5. பெரிய புராணம்.
சேக்கிழார்
12ம் திருமுறை.
ஆதியாய் நடுவும் ஆகி, அளவு இலா அளவும் ஆகி,
சோதியாய் உணர்வும் ஆகி, தோன்றிய பொருளும் ஆகி,
பேதியா வேகம் ஆகி, பெண்ணுமாய் ஆணும் ஆகி
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்.
மிகவும் பயனுள்ள பிரார்த்தனைப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteபாடல்களை பாடி மகிழ்ந்தேன்.
ReplyDeleteநன்றி.
பயனுள்ள பகிர்வு.....
ReplyDeleteபடித்தேன். ரசித்தேன்.
திருச்சிற்றம்பலம்..
ReplyDelete