Pages

Monday, September 16, 2013

இன்று திங்கள் கிழமை பஞ்ச புராணத்தின் இன்றைய துதிகள்




வாரத்தின் ஒவ்வொரு நாளும் விடியலிலே சிவனை நினைப்போம். 

பஞ்ச புராணத்தின் ஞாயிறு துதிகளை நேற்று படித்தோம். துதித்தோம்.

இன்றைய துதிகள் 

இன்று திங்கள் கிழமை.

முதல் வருவது 
தேவாரம்: 
அருளியது: திரு ஞான சம்பந்தர்;
பண்: கொல்லி. 
3ம் திருமுறை.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஒரு குறையும்  இல்லை;
கண்ணில் நல்லதொறூம் கழுமல் வளநகர்ப் 
பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே

திருவாசகம்.
 மாணிக்கவாசகர்.
 8ம் திருமுறை.

நானேயோ தவம் செய்தேன்? சிவாய நாம எனப்பெற்றேன்.
தேனாய் இன் அமுதமுமாய் தித்திக்கும் சிவ பெருமான்
தானே வந்த எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே.

மூன்றாவது. 
திருவிசைப்பா.
பூந்துருத்தி நம்பிகாடநம்பி.
பண் : சாளர பாணி. 9ம் திருமுறை.

எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட்கொண்டு அருளி
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லைச்
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.

நாலாவது 
திருப்பல்லாண்டு 
பண்: பஞ்சமம். சேந்தனார். 9ம் திருமுறை.

சொல் ஆண்ட கருதி ப்பொருள் சோதித்த 
தூ மனத்தொண்டர் உள்ளீர்.
சில ஆண்டில் சிதையும் சில 
தேவர் சிறு நெறி சேராமே 
வில் ஆண்டைக் கனகத் திறன் 
மேரு விடங்கன் விடைப்பாகன் 
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே 
பல்லாண்டு கூறுதுமே 

ஐந்தாவது 
பெரிய புராணம் 
சேக்கிழார் 
12ம் திருமுறை.

தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும், தாழ்வடமும் 
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும், நைந்து உருகிப் 
பாய்வதுபோல் அன்பு நீர் பொழி கண்ணும், பதிகச் செஞ்சொல் 
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே.




No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி