Pages

Wednesday, September 18, 2013

புதன்கிழமை. ஓதி உள்ளுணர்வு பெறவேண்டிய சிவத் துதிகள்.

இன்று புதன்கிழமை. 

பஞ்ச புராணத்தில் இன்று ஓதி உள்ளுணர்வு பெறவேண்டிய 
சிவத் துதிகள். 

முதலில்
 தேவாரம் 
திருநாவுக்கரசர்
திருத்தாண்டகம்
. 6ம் திருமுறை.

திரு நாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில்
தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்
ஒரு காலும் திருக்கோயில் சூழார் ஆகில்
உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணார் ஆகில்
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியார் ஆகில்
அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே.


2. திருவாசகம். 
மாணிக்கவாசகர்
.8 ம் திருமுறை.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்.

யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் 
அதுவும் உன்றன் விருப்பு அன்றே. 



 3. திருவிசைப்பா. 
பண்: பஞ்சமம்;  
 சேந்தனார்.
  9 ம் திருமுறை.

ஏக நாயகனை, இமயவர்க்கு அரசை
என் உயிர்க்கு அமுதினை, எதிர் இல்
போக நாயகனை புயல்வணற்கு அருளிய‌
பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த‌
மேக நாயகனை மிகு திருவிழி
மிழலை விண் இழி செழும் கோயில்
யோக நாயகனை அன்றிட மற்று ஒன்றும்
உண்டு என உணர்கிலேன் யானே. 


 4. திருப்பல்லாண்டு
 பண்: பஞ்சமம்.
 சேந்தனார். 
9ம் திருமுறை

பாலுக்கு பாலகன் வேண்டி
அமுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்று அருள்
செய்தவன்; மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற 
சிற்றம்பலமே இடம் ஆக‌
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே 
பல்லாண்டு கூறுதுமே. 

5. பெரிய புராணம்.
 சேக்கிழார்
. 12ம் திருமுறை

சிவன் அடியே சிந்திக்கும் திருப் பெருக சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலைஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அ ந் நிலையில் 

 திருச்சிற்றம்பலம்.



2 comments:

  1. உள்ளுணர்வு பெற அளித்த அருமையான துதிகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. உள்ளுணர்வு பெறவேண்டிய சிவத் துதிகள் படித்து மகிழ்ந்தேன்.
    நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி