Pages

Wednesday, September 11, 2013

பாரதி ஒரு புயல்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும். 





இன்று அதிகாலை எழுந்த உடன் கண்ணில்  பட்டது திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவு .  ஆஹா. இன்று பாரதி நினைவு நாளன்றோ !  எனக்கு நினைவுட்டிய சக பதிவருக்கு எனது நன்றி.

அடுத்த கணமே, ஒரு பிரமிக்கத்தக்க கவிதை கண்டு சிலிர்த்துப்போனேன்.

மரபின் மைந்தன் எனத் தலைப்பிட்டு, இவர் எழுதும் வலைக்குள் இன்று தான் முதன் முறையாகச் செல்கிறேன் என நினைக்கிறேன்.

ஊழி உலுக்கியவன் எனும் தலைப்பிலே பாரதி பற்றி ஒரு எழுச்சி மிகு கவிதை.

பாரதியை நினைவு கூர்ந்து அந்த அற்புதமான அதிசயிக்கத்தக்க மனிதரை என்ன அழகாக , இப்படி ஒரு மனிதர் நம் மண்ணில் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறார் எனப்பெருமை உறும் அளவுக்கு, நம்மை உணரவைக்கும் கவிதை ஒன்றைப் படைத்து வெளியிட்டு இருக்கிறார்.

 கீறிய சூரியப் பிஞ்சின் சுடர்கொண்டு
ககனம் நிறைத்தது யார்-?

என ஒரு வினா வருகிறது. அக்கவிதையில். 

எத்துணை முறை அவ்வரியின் நயத்தினை படித்தேன் என சொல்ல இயலாது. 

அருமை. !! இதுவல்லவோ பாரதிக்கு யாம் செய்யும் நினைவு அஞ்சலி. 


அதைப் பாடி, வெளியிடஅவரிடம் அனுமதி கோரியிருக்கிறேன்.

நீங்கள் இங்கே சென்று  அந்த கவிதையைப் படிக்கவேண்டும்.

இன்று தமிழகத்தை தமிழ் கவிதை உலகை எங்கோ இழுத்துச்செல்லும் சாரதிகள் மத்தியிலே
பாரதி ஒரு வழிகாட்டி.

அவனை நினைவு கூர்வோம்.  அவன் இதயத்துடிப்புகளை சற்றே குரல் கொடுத்துக் கேட்போம்.

பாரதி ஒரு புயல்.


11 comments:

  1. 'காந்திமதி நாதனைப்பாரதி சின்னப்பயல்'
    நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  2. மண்ணின் மைந்தன் பாரதி பற்றி மரபின் மைந்தன் எழுதிய கவிதைப் படித்தேன் ,அருமை !
    உங்கள் இதயத் துடிப்பை தெரிந்து கொள்ள நூறாவது பாலோவர்ஆகிவிட்டேன் !
    நூறை வென்றதற்கு பாராட்டு !

    ReplyDelete
  3. கீறிய சூரியப் பிஞ்சின் சுடர்கொண்டு
    ககனம் நிறைத்தது யார்-?


    அருமை !

    ReplyDelete
  4. மனதிலிருந்து மறையாத மகாகவி.

    ReplyDelete
  5. தங்களின் தேடல் மூலம் அருமையான கவிதையைக் ,கவிஞனைக்
    கண்டோம் .மிக்க மகிழ்ச்சி ஐயா .

    ReplyDelete
  6. https://www.facebook.com/photo.php?fbid=10201327782253744&set=a.1336357726198.2046607.1148741300&type=1&theater

    ReplyDelete
  7. இன்று தமிழகத்தை தமிழ் கவிதை உலகை எங்கோ இழுத்துச்செல்லும் சாரதிகள் மத்தியிலே
    பாரதி ஒரு வழிகாட்டி.//

    பாரதி என்றும் வழிகாட்டியாக திகழ்வார் உண்மை.
    அருமையான பதிவு பாரதிக்கு.

    ReplyDelete
  8. மிக மிக அருமையான பதிவரும் பகிர்தலும் ஐயா!

    உங்களின் பாரதியார் நினைவுகூரல் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்.
    மிகமிகச் சிறப்பு ஐயா!

    ReplyDelete
  9. அருமை.
    நன்றி.

    ReplyDelete
  10. பாரதிக்கு நினைவஞ்சலி அருமை. நீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்கு சென்று படிக்கிறேன்.
    பாரதி புகழ் பாரெங்கும் பரவட்டும்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி