Pages

Monday, May 31, 2010

பெருவெளியில் நடனம் பிரணவ நாதம்.... திருமூலர் பாடல்"ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ? என்பது திருமூலர் வாக்கு."
என்கிறார் தமிழ் உலக ஆன்மீகப் பதிவாளர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் 
Courtesy:
:Aanmika Payanam

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.


ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே

சுப்பு தாத்தா திருமூலர் பாடல்களை ஆரபி ராகத்தில் பாடுகிறார்.

6 comments:

 1. திறக்கறச்சேயே தமிழ்த்தாய் வாழ்த்து, வந்துடுது. உங்க பாட்டை அந்தச் சத்தம் ஒரே அமுக்கு அமுக்கிடுத்து. அப்புறமாத் தான் மறுபடி பார்க்கணும்! :((((((( இல்லாட்டி எனக்குத் தான் டெக்னிகலா எப்படினு புரியலையா,??? யூ ட்யூப் திறந்தது, ஆனால் திருமூலரைக் கேட்கமுடியாமல் தமிழ்த்தாய் வாழ்த்து திரும்பத் திரும்ப வருதே??

  ReplyDelete
 2. //உங்க பாட்டை அந்தச் சத்தம் ஒரே அமுக்கு அமுக்கிடுத்து. அப்புறமாத் தான் மறுபடி பார்க்கணும்! :((//

  Respected Madam,


  நீங்கள் வந்தத்து கண்டு மனம் நெகிழ்ந்தேன்.
  எனது வலையில் டிஃபால்ட் ஆப்ஷனாக " நீராரும் " எனத்துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இட்டு இருக்கிறேன்.
  அது போலவே எனது ஆன்மீக வலையிலும் விஷ்ணு சஹஸ்ர நாமம் ( எம்.எஸ். பாடியது ) இட்டிருக்கிறேன்.
  http://pureaanmeekam.blogspot.com

  அந்த வின்டோவில் உள்ள ப்ளே (> ) எனும் ஆப்ஷன் பட்டனை ஒரு தரம் அமுக்கினால், பாட்டு நின்றுவிடும்.
  நீங்கள் உங்கள் திருமூலர் பாடலைக் கேட்கலாம்.

  இன்னொன்றும் உள்ளது. அப்பாடல் முடியும் வரை காத்திருக்கலாம்.

  நிற்க. திருமூலர் பாடல்களில் உள்ள சந்தம் ( எதுகை மோனை ) இந்தக்கால இசை வல்லுனர்களை விஞ்சும்
  விதமாக உள்ளது. நான் ஆரபி ராகத்தில் பாடி (!) இருக்கிறேன். It is more an apology. நல்ல குரலுடைய வர்களை பாடச்சொல்லி
  கேளுங்கள்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 3. எனக்கு மிகச் சரியாக கேட்க முடிந்தது.
  நல்லவேளை, எந்த டெக்னிகல் பிரச்னையும் இல்லை.

  ஆரபி இதற்காகவே அமைந்தது போல, உங்கள் குரலில் குழைந்து இழைந்து அற்புதமாக இருந்ததது ஐயா!

  அந்த முதல் பாடலிலுள்ள 'பலமாகக் கொண்டு' என்கிற வார்த்தையை மட்டும், 'கொண்டு'-ஐ தனியாகப் பிரிக்காமல் 'பலமாகக் கொண்டு' என்று சேர்த்துப் பாடியிருக்கலாமோ என்று தோன்றியது. வார்த்தை அமைப்புக்காக சொன்னேனே தவிர,
  இராகத்திற்கு அந்த வரி அப்படித்தான் கட்டுப்படும் என்றால் சரியே.

  பின்னால், மூன்றாவது பாடலில்,
  'ஆடரங்கை'-- 'ஆட அரங்கை'
  என்று நீங்கள் பிரித்துப் பாடும் பொழுது இசையோடு இயைந்து அந்தப் பிரித்தல் அற்புதமாக இருந்தது.

  ReplyDelete
 4. 'திரு அம்பலமாகக்கொண்டு'

  அல்லது

  'திருவம்பலமாகக் கொண்டு'

  -- என்று கொள்ளலாமோ?

  ReplyDelete
 5. Jeevi said:
  அந்த முதல் பாடலிலுள்ள 'பலமாகக் கொண்டு' என்கிற வார்த்தையை மட்டும், 'கொண்டு'-ஐ தனியாகப் பிரிக்காமல் 'பலமாகக் கொண்டு' என்று சேர்த்துப் பாடியிருக்கலாமோ என்று தோன்றியது.

  திரு உடன் அம்பலம் சேர்ந்து
  திருவம்பலம் ஆனதென்றறியா (து)
  திரு திருவென முழித்த என்னை

  சுறு சுறுப்புடனே
  சுக்குமி ளகுதி ப்பிலி அல்ல = அது
  சுக்கு மிளகு திப்பிலி எனப்
  பக்குவமாய் எடுத்துரைத்த‌
  பாங்கை நான்
  பாராட்டுவது எங்ஙனம் ?

  சுப்பு ரத்தினம்.
  பின் குறிப்பு: உங்கள் ஈ மெயில் இருந்தால் தர இயலுமா ?

  ReplyDelete
 6. திருவடி தீக்ஷை(Self realization)
  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.  Please follow

  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

  (First 2 mins audio may not be clear... sorry for that)

  (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி