Pages

Saturday, May 08, 2010

இந்த அற்புதமான கண்ணதாசன் பாடலை நமக்கு வழங்கிய வாத்தியார் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை!!


 ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
..... அணியாரம் இட்ட பெருமான்
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
..... ஆதாரமான பெருமான்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
....... மெய்யான வந்த பெருமான்
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி
...... விளைவாக நின்ற பெருமான்
கோலாலம் பூரில்வளர் கோதண்ட பாணிஇவன்
....... கோவில் கொண்டாடு மனமே
கூற்றேதும் வாராது கொடு நோயும் சேராது
....... குறையாத வாழ்வு மிகுமே!

“ஓம்” என்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு
....... உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மனமுண்டு
........உன்வாழ்வு கந்தன் வசமே
நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
....... நடக்காது வேலனிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன்உள்ளம்
....... நலம் யாவும் வீடுவருமே
கோமன்னன் வாழ்கின்ற கோலாலம் பூர்செந்தூர்
........கொடிகட்டி ஆளவிடுமே
கொண்டாடு கொண்டாடு தெண்டாயுதத்தானைக்
........குறையாத செல்வம் மிகுமே!
------- கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் மலேசிய மண்ணில் கோலாலம்பூரில் உறையும் குமரக்கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தபோது எழுதிக்கொடுத்த பாடல் இது!

எதுகை மோணை சந்தத்துடன் பாடல் அருமையாக இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
(இங்கே கிளிக்கிடுங்கள். )

இந்த அற்புதமான கண்ணதாசன் பாடலை நமக்கு வழங்கிய வாத்தியார் SP.VR. சுப்பையா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
அவருடைய அருமையான சோதிட பதிவு இங்கே இருக்கிறது என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் தினமும் அப்பதிவை படிக்கிறார்கள்.

இதோ ! முருகன் கோவில் தைப்பூசத்திருவிழா ...

batu malai murugan temple kulalumpur adi kiruthikai vilza festivel coverage



முருகன் கோவில் வைபவம்.


வெற்றி வேல் முருகனுக்கு அரோஹர
வேல் வேல் வெற்றி வேல்
















No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி