Pages

Friday, May 07, 2010

இன்று அம்மாக்கள் தினம்.

இன்று  அம்மாக்கள்  தினம்.
புவியில் பிறக்கும் எல்லோரும்
சொல்லும் முதற் சொல் அம்மாவே .

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது அவ்வையின் குரல். 

அம்மா அப்பா  இவர் எனக்காட்ட , அப்பா ஆசிரியரை காட்ட, ஆசிரியர் தெய்வம் எது என்ன தெளிவிக்கிறார்.    தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை .

 அம்மாவை இன்று வணங்குவோம். என்றும் போற்றுவோம்.
 அந்த அம்மா எனும் சொல்லுக்கு பொருள் என்னவென
அகராதியை புரட்டிப  பார்த்தேன் . அம்மா என்றால் அன்பு ஆனந்தம்
அம்மா என்றால் இனிமை
அம்மா என்றால் எல்லாமே ஈயும் வள்ளல்
அம்மா என்றால் உழைப்பிலே உவகை காணும் பண்பு
அம்மா என்றால் என்றும் எனக்கு ஊக்கம் தந்த உயிர்.
அம்மா என்றால் அவள் ஒப்பிலா சொந்தம்.
அம்மா என்றால் அவள் ஓய்வில்லாது எனக்காக உழைத்த  பந்தம்.
அம்மா என்றால் வையம் புகழும் அன்னை பராசக்தி.
அகராதி இனி தேவை இல்லை.
அம்மாவே எனக்கு எல்லாம். 







3 comments:

  1. தினம் தினம் அம்மாக்களின் தினம் தான் என்றாலும், தன்னிலிருந்து பிரித்து தனியே விட்டவளை தனிப்பட நினைத்துக் கொள்ள முடியாத அளவு ஊனிலும் உயிரிலும் ஒன்றாய்க் கலந்து விட்ட அந்த அன்னையே நாமாகி விட்ட உன்னதம்..

    ReplyDelete
  2. அழகான பதிவு, நன்றி பகிர்ந்ததுக்கு

    ReplyDelete
  3. அற்புதமான பதிவு..

    ஜெய் ஸ்ரீ ராம்.!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி