Pages

Tuesday, June 01, 2010

பேயாய் உழலும் சிறுமனமே!

11   செப்டம்பர் அன்று சுப்பிரமணிய பாரதி நினைவு நாள்.
எனது வலை உலக தமிழ் நண்பர், திரு குமரன் அவர்கள் பாரதியின் இந்தப் பாடலை தன
பதிவினில் இட்டு, இதை பாடி தருவீர்களா என்று அவரது நண்பரிடம் கேட்டார்.  பாரதி பாடலை பார்த்துவிட்டு அதை பாடாமல் இருப்பது எப்படி ? ஆகவே, இந்த சுப்பு தாத்தா பதிவாளர் குமரன் அனுமதி இன்றியே இதை பாடி விட்டார்.

ராகம்:  அடாணா




பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
தாயாம் சக்தி தாளினிலும்
தருமம் என யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
**********************************************************************
திரு குமரனுக்கு எனது நன்றி.
சரியாக பாடவில்லை என்றால், பாரதி மன்னிப்பாராக.
குமரன் வலைபதிவுக்கு செல்லும் வழி. இதுவே.


www.koodal1.blogspot.com

7 comments:

  1. எடுப்பும், முடிப்பும், இடைப்பட்ட பாட்டும் அழகாய் இருந்தது..
    நன்றாகத்தான் பாடியிருக்கிறீர்கள், ஐயா!

    ReplyDelete
  2. இந்தப் பாடலைப் பாடித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா. மிக நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  3. இந்தப் பாடலைப் பாடித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா. மிக நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  4. cha! enna nalla varikal! bharathiyaar-ai enakku arimukappaduththiyathu en amma.. 6th std. poetry recitation- "bharathi tamil sangam, kolkata"- panchali sabatham oppikka vendum- draupadi solvathilirunthu- arjunan solvathu varai! indru varayil antha varikalin "sudar miku" azhaginaal- ennaal athanai marakka mudiyavillai!

    very well done!

    ReplyDelete
  5. உங்கள் வயதுக்கு “ழ” அடிவாங்கினாலும்
    ரெக்கார்டிங் தரம் துல்லியமாக இருக்கு.
    சின்ன வயதில் ஒரு கலக்கு கலக்கிருப்பீங்க போல் இருக்கே!!

    ReplyDelete
  6. L.K.


    எல்.கே. அவர்களுக்கும்
    குமரன் அவர்களுக்கும்,
    ஜீவி அவர்களுக்கும்
    மாதங்கி மாலி அவர்களுக்கும்

    வணக்கம்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வடுவூர் குமார் சொல்கிறார்:
    வயது காரணமாக ' ழ ' அடி வாங்கியிருக்கிறது.
    என. வயது காரணமில்லை. பற்கள் கிட்டத்தட்ட எல்லாமே
    போய்விட்டன. பொய்ப்பற்கள் பொருத்திக்கொள்ளும் மன நிலையில் நான் இல்லை.
    இருப்பினும் ஒன்று சொல்லவேண்டும்.
    ழ மட்டுமல்ல, ற, ர, ல, ள , எல்லாமே
    நெருடல் தான். இன்றல்ல, நேற்றல்ல,
    நான் பேசத்துவங்கியது முதலே.

    இருப்பினும், எனது மாணவர்கள்
    எனது தமிழ்ச் சொற் பொழிவுகளைத்தான் பெரிதும் விரும்பினர்.

    சுப்பு ரத்தினம்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி