Pages

Saturday, April 23, 2011

2011 ல் கம்சன்.


2011 ல் கம்சன். அதுவும் நமது தமிழகத்தில்.

இன்று ஹிந்து பேப்பரில் ஒரு கொடூரமான கம்சனைப்பற்றிய செய்தி வந்திருக்கிறது.

குடித்து வீட்டுக்குள் நுழைந்த கணவன் ( வயது 35) தனது மனைவியிடம் சண்டை போட்டு, அதன் உச்ச கட்டத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாத போதை நிலையில் தூங்கிக்கொண்டு இருக்கும் தனது மூன்று வயதுக்குழந்தையை இரு கால்களையும் பிடித்து அந்தரத்தில் தூக்கி பக்கத்தில் சுவரில் அதை அறைந்து, அக்குழந்தை அக்கணமே உயிரிழந்த செய்தி.

புராணக் கதையில் கம்சன் தனது சகோதரியின் பிறந்த குழந்தையை எடுத்து சுவரில் மோதிக் கொல்கிறான். ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு குழந்தைகள். இன்றோ ஒரு தகப்பன் தனது செல்வத்தையே அடித்து கொன்று இருக்கிறான். இது நிஜ செய்தி.

கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு அந்த மனிதனின் மூளை மதுவின் மயக்கத்தில் செயலிழந்து போயிருக்கிறது.  இவரது கொடுமையான செயலைக் கண்டு நாம் எல்லோரும் கோபபடுவதும் இயல்பே.
எனக்கோ கோபத்தை விட இந்த மனிதர் மீது ஒரு பரிதாபம் தான் ஏற்படுகிறது. 


தன்னைத் தான் காக்கில் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

என்பார் வள்ளுவர்.


எல்லா தீயவைகளும் மற்றவர்களை அழிக்கும் தன்மையுடையது.  ஆனால், கோபம் எனப்படும் சினமோ த்ன்னையே முதற்கண் அழிக்கவல்ல வலிமை பெற்றதாம்.

சினம் சிந்தையை சிதறடிக்கிறது. ஒன்றும் இல்லை. இன்று ஏதோ பேசிக்கொண்டு இருக்கையில் என் மனைவி உங்களுக்கு கோபம் வந்தால் தலை கால் புரிவதில்லை என்றாள். அப்படி உனக்குத் தான் என்றேன். நானும் அவளும் மாற்றி மாற்றி சொல்ல எனக்கு கோபம் அதிகரிக்க, என் தலையில் முன் நெற்றியில், எல்லாம் என் வேளை என சொல்லி  சிறிதே அடித்துக்கொண்டேன். " பார்த்தீர்களா ! ஒரு வார்த்தை எத்தனை வித்தை செய்துவிட்டது ! என்றாள் என் இல்லக்கிழத்தி.  (stage demonstration !!)

சினம் ஏற்பட உந்தும் சொல்லோ செயலோ நம் கண் முன் நிகழ்கையில் அதை பொறுத்துக்கொள்ள, அதை எதிர்கொள்ள ஒரு மன ஒருங்கிணைப்பும் அமைதியும் முதற்கண் தேவை.

சினத்தைத் தடுத்து நிறுத்த இயலுமா ? அது ஒரு இயல்பான உணர்வு. ஆயினும் 
சினம் வருகையில் நாம் செய்ய வேண்டியது என்ன ? வேண்டாதது என்ன என்பது பற்றி இங்கே சென்று படியுங்கள்.

3 comments:

  1. கொடுமையான விஷயம். இது போன்று குடியினால் கொடுமையாக நடந்து கொள்பவர்களுக்கு தகுந்த தண்டனை தந்தால் தான் இவை குறையும்.

    ReplyDelete
  2. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

    ReplyDelete
  3. உண்மைதான்.சிலநேரம் கோபம் வரும்போது பேசுகிற வார்த்தைகள்கூட எல்லை கடக்கிறது !

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி