Pages

Saturday, April 16, 2011

ஒற்றியூர் அரன்பதம் பற்றியே தொழுதிட

திருவொற்றியூர் அரனின் திருச் சிறப்பை பாடி உள்ளார் தமிழ் வலை உலக மரபு கவிஞர் திருமதி தங்கமணி அவர்கள். அவரது வலையில் உள்ள இப்பாடல் சீருடைத்து. சிறப்புடைத்து.ஒவ்வொரு எழுத்தும் ஒரு லட்சம் பொன் பெறும்.
அப்பாடலின் வரிகள் இங்கு உள்ளன.  பதிவு தேதி  ௧௫ ஏப்ரில் 2011


சிந்து பைரவி ராகத்தில் நான் பாடுவதை பொறுமை இருப்பின் கேட்கவும். 

திருவொற்றியூர் அரனின் கோவில் சிறப்புகளைப் பற்றி அறிய இங்கே கிளிக்கவும். 

பற்றுக பற்றற்றான் பற்றினை = அப்பற்றை 
பற்றுக பற்று விடற்கு .

எனும் வள்ளுவனின் வாய்மொழி கவிஞர் தங்கமணி அவர்கள் கவிதையால் 
நினைவுக்கு வருகிறது.

வள்ளுவரின் குரலுக்கு மேலும் விளக்கம் இங்கே கிடைக்கிறது. அக்னிசிறகு என்னும் வலைப்பதிவிலே இருக்கும் கருத்துக்களை ஊன்றி படிக்க வேண்டுகிறேன். 
பதிவின் ஆசிரியர் அவர்கள் விளக்கம் அருமை.  படியுங்கள். 

இந்த குறளுக்கான மெய்பொருள் விளக்கம்,

உலகப் பொருள்கள் மீது பற்றுள்ள வரையிலும் மெய்ப்பொருளான இறைநிலையை உணர முடியாது. பிறப்பு இறப்பு எனும் வாழ்க்கைக் கடலை கடக்க முடியாது. உடல், உயிர், சீவகாந்தம் மூன்றும் கூடிய சீவனின் உடலுக்கு பிறப்பு முதல் இறப்பு வரையில் பெரும்பாலும் துன்ப அனுபவங்களாகவே இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு பேரறிஞர் தொகுத்துக் கூறியிருக்கிறார் ஒரு கவியின் மூலம்

வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினைந்தாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநருளானே

இது ஒரு பக்திப் பாடலாக இருந்த போதிலும் மனித வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை விளக்கிக் கூறுகிறது.


1 comment:

  1. திரு.சூரி அவர்களுக்கு,
    உங்கள் பாடல் கேட்டேன்!மகிழ்ந்தேன்!
    மிக்கநன்றி!
    எல்லாமும் அவனருளே!
    சிந்துபைரவி ராகத்தில்
    பக்திச்சுவை உருகவைக்கும்.
    ('சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே!'
    'உனக்கென்ன மேலே நின்றாய்!ஒ நந்தலாலா!'
    'சந்த்ர சேகரா ஈசா!')

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி