நடிகர் திலகம் சிவாஜி தோளிலும் நடிகையர் திலகம் சாவித்திரி யின் மடியில் தவழும் இந்த குட்டி பயல் எங்கே இருக்கிறான் ? என்ன செய்கிறான் ? யானை படை கொண்டு சேனை பல வென்று வாழ பிறந்தாயடா , என புகழப்பட்ட இச்சிறுவன் இன்று என்ன செய்கிறான் ?அரசியல் வாதியா அல்லது அறிவியல் மேதையா ? சினிமா ஸ்டாரா அல்லது சின்ன திரை டைரக்டரா ? யார் அறிவார் ?
என்ன தவம் செய்தனை ? என்று கண்ணனைக் கொஞ்சிய யசோதையை உயர்த்தி பாடும் பாடல் நாம் எல்லோருமே அறிவோமே !! அது போலவே இமயத்திற்கு மேலான சிவாஜி , அவருக்கு நடிப்பிலே சவால் விடுமளவுக்கு நடித்த சாவித்ரிக்கும் செல்வனாக ( செல்வியோ !!) நடித்த இப்பயலை, நோக்கி நாம் சொல்வதெல்லாம் என்ன தவம் செய்தனை ? இந்த அதிருஷ்டம் (தமிழ்ச் சொல் என்ன என்பதை அறிந்துகொள்ள ஆவல்.) யாருக்கு கிடைக்கும் !!
இந்த குட்டி பயல் எங்கே இருக்கிறான் ?
நல்ல தேடுதல்.
ReplyDeleteதிரு பிலிம் நியூஸ் ஆனந்தனைக் கேளுங்கள்.
அல்லது நீங்கள் தானா?
வாழ்த்துக்கள்.
இப்படி நம் மனம் கவர்ந்த பல குழந்தை நட்சத்திரங்கள் [ஓரிரு படங்களில் தோன்றியவர் உட்பட] என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பது தெரிய வந்தால் சுவாரஸ்யம்தான்.
ReplyDeleteராமலக்ஷ்மி அவர்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஉங்கள் பதிவுகளிலுள்ள படங்கள் என்னை ஈர்ப்பது போல,
இக்குட்டிப்பயலும் காண்பவர் மனதைக் கொள்ளை கொள்கிறான்.
அவன் சாவித்ரியைப் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரிக்கிறான் பாருங்கள் !!
அவன் இப்ப கண்ணில் பட்டால், இப்படி ஒரு சிரிப்பு உன்னால் காட்ட இயலுமா
என கேட்க வேண்டும் என தோன்றுகிறது !!
சுப்பு தாத்தா.
http://Sury-healthiswealth.blogspot.com
திரு ரத்னவேல் அவர்கள் முதல் வருகைக்கு நன்றி.
ReplyDeleteநானா !!!!
எனக்கு திரு ராம்குமார் , பிரபு அவர்களின் அப்பா வயது.
ஆமாம்.
மறுமுறையும் வரவேண்டும்.
சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com
http://Sury-healthiswealth.blogspot.com
ஸ்வாரசியமான தேடல்... விடை தெரிந்தால் இன்னும் ஸ்வாரசியமாய் இருந்திருக்கும்..
ReplyDeleteதிரு வெங்கட நாகராஜ் அவர்கள் வருகைக்கு நன்றி.
ReplyDelete// விடை தெரிந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் //
உண்மைதான். எங்கோ எப்படியோ மனித வாழ்க்கை துவங்கி எங்கோ எப்படியோ நடந்து
எங்கோ எப்படியோ முடியும்பொழுது,
" நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை " எனக் கவிஞர் கண்ணதாசன்
பாடலும் நினைவு வருகிறது.
சுப்பு தாத்தா.
நடிகர் கரண் -நம்மவர் படத்தில் கமலுடன் மோதுபவர் -தான் அந்தக் குழந்தை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ReplyDelete