Pages

Friday, April 01, 2011

அடைவார்வினை அறுமே



தமிழ் வலை உலகில் தனித் தன்மையுடன் திகழும்
திருமதி டி .வீ. தங்கமணி அவர்கள் சிவபெருமான் குறித்து  ஒரு அழகான தோத்திரம் எழுதியிருக்கிறார்கள்.  ஐந்து பாடல்களைக் கொண்ட இத் தோத்திரம் இந்த முதல் பாடலுடன் துவங்குகிறது. 
பாடல் இதோ :
 

மடமாகிய அறியாமையின் பிழையாவையும் மறைய
நடமாடிடு இறையோனினை வாலேயுளம் நயந்தும்
இடமேவிய உமையாளரன் துணைநாடிட இனிதே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....1.
இவரது பாடல்களின் சிறப்பு இவரது இசை இலக்கண சுத்தமாக மரபு கவிதையாக விளங்குவதுதான். 

அவரது வலைப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம். 
அரனின் அருள் பெற
அவனடியிலமர்ந்து
ஆனந்தமாய் ஒரு
இசைவெள்ளம்.
ஈசா !
என்னே நின் அருள் !

சுப்பு ரத்தினம்.
இதை விரைவில் காம்போதி ராகத்தில் பாடுவேன்.

அது இதோ :




பாடல் அமைந்த சந்தம். 

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4 சீர்களில் மோனை) 

எனவும் குறித்து உள்ளார்கள். 



மற்ற ஐந்து பாடல்களையும் அவரது வலைப்பதிவுக்குச் சென்று படிக்க இங்கே சொடுக்குங்கள்.  

இதே காம்போதி ராகத்தில் எல்லோரும் நன்கறிந்த ஒரு பாடல் புலவர் மாரிமுத்தா பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. 

"நடமாடித் திரிந்த உமது இடது கால் முடமாகி போனது ஏன் எனச் 
சொல்லுவீர்   ஐயா.  " எனத்துவங்கும் பாடல் பரதம் ஆடுவோர் மத்தியிலே வெகு பிரசித்தம். 

ஒரு பரத நிகழ்வு  இங்கே காண்பீர்:



3 comments:

  1. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. திரு.சூரி அவர்களுக்கு,
    உங்கள் பக்திநிறை மடலுக்கு என் நன்றியைத்
    தெரிவித்துக் கொள்கிறேன்.
    இசைஆர்வம் மிகக் காம்போதி ராகத்தில் அமைத்துப்
    பாடியது சிறப்பு!பாராட்டுகள்!
    என் இன்ஷியல் டி.வி.(கே.வி. அல்ல!)நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  3. அருமை தாத்தா. தங்கமணி அம்மா அவர்களின் பாடலை நீங்கள் பாடுவதையும், பரதத்தையும் மிக ரசித்தேன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி