" இன்று "
" இப்பொழுது "
எனச்சொல்லும்போதே இவ்வார்த்தைகளில் இருக்கும் இ, ப், ஆகிய எல்லாமே இறந்த காலம் ஆகிவிடுகிறது.
ஒவ்வொரு கணமும் புதியதாகத் தோன்றுகிறது. தோன்றும் கணத்திலே வளர்கிறது. பின் மறைகிறது.
மறைந்த அக்கணமும் புதிதெனத் தோன்றும் புது கணத்திற்கும் உள்ள கால வித்தியாசம் மிக மிகக்குறைவானதால்
நம்முடைய சிந்தையிலே நிற்பதில்லை.
" இப்பொழுது "
எனச்சொல்லும்போதே இவ்வார்த்தைகளில் இருக்கும் இ, ப், ஆகிய எல்லாமே இறந்த காலம் ஆகிவிடுகிறது.
ஒவ்வொரு கணமும் புதியதாகத் தோன்றுகிறது. தோன்றும் கணத்திலே வளர்கிறது. பின் மறைகிறது.
மறைந்த அக்கணமும் புதிதெனத் தோன்றும் புது கணத்திற்கும் உள்ள கால வித்தியாசம் மிக மிகக்குறைவானதால்
நம்முடைய சிந்தையிலே நிற்பதில்லை.
ஒவ்வொரு கணமும் நம் உடலில் ஆயிரமாயிரம் புதிய உயிரணுக்கள் ( செல்கள் ) பிறக்கின்றன. அது போல் ஆயிரமாயிரம் செல்கள் மரிக்கின்றன.
கணத்துக் கணம் நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். இந்த மாற்றத்திற்கு எதுவும் விதிவிலக்கு இல்லை.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வெள்ளிடைமலை. ஆயினும் மனம் மட்டும் இறந்தகாலத்திலே வசித்திட விரும்புகிறது. இறந்தகாலத்தில்
ஏற்பட்ட சுக துக்கங்கள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், பெற்றவை பெறாதவை, நின்றவை, நில்லாதவை என பலவில் நின்று
நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் தடுத்து நிறுத்துகிறது.
ஒவ்வொரு கணத்திலும் நாம் புது மனிதனாகி, நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றினையும் முதன் முறையாகப் பார்ப்பது போல் பார்க்கவேண்டும்.
அதாவது நமது புது நோக்கு சென்ற காலத்தில் மனதில் ஏற்பட்ட கரைகள் ( விரும்பியது, விரும்பாதது எல்லா) நீங்கியதாக இருப்பின்
நிகழ் காலத்தை நிம்மதியாக மன மகிழ்வுடன் வாழ இயலுமில்லையா ?
சென்ற காலத்தில் வாழ்வோரை இனியேனும் புதிதாய்ப் பிறந்தோமென எண்ணுங்கள் எனச் சொல்கிறார் பாரதி.
கவிதையைப் பார்ப்போமா ?
" சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
நின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம். திரும்பி வாரா. "
//
ReplyDeleteபழையன கழிதலும் புதியன புகுதலும் வெள்ளிடைமலை. ஆயினும் மனம் மட்டும் இறந்தகாலத்திலே வசித்திட விரும்புகிறது. இறந்தகாலத்தில்
ஏற்பட்ட சுக துக்கங்கள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், பெற்றவை பெறாதவை, நின்றவை, நில்லாதவை என பலவில் நின்று
நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் தடுத்து நிறுத்துகிறது.//
மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.
//இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
நின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம். திரும்பி வாரா. "//
இந்தப் புதுவருடத்தில் எல்லோர் உள்ளங்களிலும் மட்டுமல்ல உடலிலும் புது இரத்தமாய் இந்த உணர்ச்சி பரவிடட்டும். மிக்க நன்றி சார்!
இராமலக்ஷ்மி சொல்கிறார்:
ReplyDelete//இந்தப் புதுவருடத்தில் எல்லோர் உள்ளங்களிலும் மட்டுமல்ல உடலிலும் புது இரத்தமாய் இந்த உணர்ச்சி பரவிடட்டும்
//
தங்கள் வருகை
எனக்குப் பெருமை.
சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com
புத்தாண்டுச் செய்தி அருமை!
ReplyDeleteதோடி' யிலிருந்து பாய்ந்தோடி வந்தெனைத்தேடியொரு சொல்லே சொல்லிடினுமச்சொல்லிலெத்தனையெத்தனையினிமை !!
ReplyDeleteசுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteநேற்றுதான் “The Power of Now" by Eckhart Tolle புத்தகத்தை இரவல் வாங்கி வந்தேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. தங்கள் கட்டுரையும் அதை மையப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி. நல்ல புத்தாண்டு செய்தி.