
நஞ்சு இல்லாத நெஞ்சம்
வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளார் உலகில் தோன்றிய மனித குல மக்களுக்கு நெஞ்சகத்தின் உயர்ந்த பண்பு, நன்மைகள் பற்றி எடுத்துக்கூறுகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் பெருமைப்பாடும் அவரவரது நெஞ்சத்தில் எழும் நல்ல எண்ணம் செயல் இவைகளைப் பொருத்தே அமைகிறது என்று சொல்கிறார்கள்.
உதாரணமாக,
" நன்று செய்வதற்கு உடன் படுவீரேல் நல்ல நெஞ்சம் பெற்றவர் ஆவீர்."
" மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல். "
" வஞ்சமற நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும் புகழ்."
என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்.
இத்தகைய நல்லதையே நினைப்பதற்கான நெஞ்சகம் நல்லதை விடுத்து அல்லதை = தீயதை, கெடுதலை நினைக்குமேயானால், அது " நெஞ்சு " அல்ல " நஞ்சு " என்கிறார்கள்.
நெஞ்சு என்பதில் ஒற்றைக் கொம்பு எழுத்தை நீக்கிவிட்டால் அது எப்படி நஞ்சாகிறதோ, அதுபோல், நல்லதை நினைக்கும்போது நெஞ்சு. அல்லதை நினைக்கும்போது அது ' நஞ்சு ' ஆகிவிடுகிறது.
எனவே ஒவ்வொரு ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் அமைந்த நெஞ்சு நன்மையான எண்ணங்களை நினைப்பதற்காகத்தானே அன்றி, தீயதை நினைப்பதற்கு அல்ல. எனவே நல்ல நெஞ்சகம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் அதன் இயல்பான, இயற்கையான குணமாகிய சத்துவ குணத்தையே தழுவி, நல்லதை நினைத்து நல்லதையே சொல்லி, நல்லதையே செய்து நன்மைகளைப் பெற்று நலமும் வளமும் மேலோங்கி வாழவேண்டும்.
== குரு பக்கிரிசுவாமி " அருட்சுடர்" மாத இதழ்.
நன்றி: மஞ்சரி மாத இதழ்.
நல்ல பகிர்தலுக்கு நன்றி!
ReplyDelete