Pages

Friday, September 05, 2014

முதல் ஆசிரியர்

இன்று ஆசிரியர்கள் தினம்.



ஆசிரியர்களுக்கு நமது வணக்கத்தையும் நன்றியையும் கூறுவோம் .

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.




நாலு பேருக்கு நன்றி என

தமது நாலு ஆசிரியர்களைக் குறிப்பிட்டு



அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.

திருமதி மைதிலி கஸ்துரி ரெங்கன்  அவர்கள்.

நமக்கு, குறிப்பாக எனக்கு யார் யார் நினைவு வருகிறது இன்னாளில் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்.

ஆசிரியர் தினத்தன்று நாம் எல்லோரும் நமது தேசத்தின் ஜனாதிபதியாக விளங்கிய திரு இராதாகிருஷ்ணன் அவர்களைப் போற்றி மகிழ்கிறோம்.

ஊ.வே.சுவாமிநாத அய்யர் எனது அன்னையின் ஆசிரியர். 1908 லே ள்ளியிலே என் அன்னை அவரிடம் திண்ணை பள்ளியில் படித்ததாக என்னிடம் சொல்லி இருக்கிறார்.
அவர் நினைவு வருகிறது.

எனது திருச்சி இ.ரெ உயர் நிலைப்  பள்ளியில் 1950 முதல் 55 வாக்கில் படித்த காலையில் எனக்கு தமிழ் ஆசிரியராக விளங்கிய புலவர்  திரு குல சேகரன் அவர்கள் நினைவு வருகிறது.

வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றதெல்லாம் வலிப்பட்டு
குழக்கன்றை ஈன்றலரும் கோவுறு நோய் மருந்தாமோ என்று அவர்
சொல்லிய பெரிய புராணப் பாடல் நினைவுக்கு வருகிறது.

தூய வளவனார் கல்லூரி திருச்சியில் 1957 முதல் படித்த நேரத்தில் எனது பேராசிரியராக இருந்த எம்.ஐ.பிரான்சிஸ் ராஜ் அவர்கள் நினைவும்

கால்குலஸ் ஸ்ரீனிவாசன் அவர்கள் நினைவும் வருகிறது.

கூடவே எனது தமிழ்ப் பேராசிரியர் ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் நினைவும் நீங்காது நிற்கிறது.

நேஷனல் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு வருகிறது.

என்னுடன் 1998 வரை எங்கள் பயிற்சி கல்லூரியில் நான் உதவி பிரின்சிபால் ஆக பணி புரிந்த பொழுது எங்களது பிரின்சிபால்  திருமதி தங்கம் தாமஸ் மாத்யூ அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

திருச்சியில் எங்கள் கல்லூரி முதல்வர் ஏற்ஹார்ட் அவர்கள் நினைவோ நிலைத்து நிற்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலே

ஆமாம்.

குரு ப்ரஹ்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேச்வரஹ
குரு சாக்ஷாத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

தக்ஷிணாமூர்த்தி கடவுள் .

ஆம். ஆலமர் கடவுள் நினைவு வருகிறது.

அவரைத் தொடர்ந்து

காஞ்சி பரமாச்சார்யாள் நினைவு வருகிறது.

எல்லாவற்றிக்கும் தலையாக,

என் அன்னையின் நினைவு வருகிறது. கர்நாடக இசையின் முதல் படியில் என்னை உட்கார்த்தி வைத்தது அவர்  தானே.

அன்னையை அன்றி முதல் ஆசிரியரும்

 எவரும் உண்டோ ?

எனது முதல் ஆசிரியர் .

அன்னை என்று நினைத்த அடுத்த கணம், ஏன் ?
அதே கணமே

அன்னை தெரசா அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

தாம் வாழ்ந்து காட்டி, பிறருக்கும் தான் ஒரு அன்பு வழி வாழ வேண்டும்
எனச் சொல்லாமல், போதித்த

ஆசிரியை அவரே.

அவரை இன்று நான் நினைவு கூருவேன் .

ஆம்.

இப்புவியில், வாழ்ந்து காட்டி, தம்முடன் வாழும் வாழப்போகும் மக்களை
வழி நடத்தச் செல்பவரே ஒரு

நல் ஆசிரியர்  ஆவர்.



 

3 comments:

  1. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.

    இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.!

    ReplyDelete
  2. எனது முதலாம் வகுப்பு ஆசிரியை திருமதி நாமகிரி முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

    உங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்த விதம் நன்று.

    ReplyDelete
  3. நன்று தாத்தா! நானும் என் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி