Pages

Monday, April 21, 2014

தஞ்சையம்பதிக்கு ஒரு தனி மடல்.

பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் நினைவு நாள் இன்று
முக நூலில் கண்ட படம்.

என இன்று 
நினைவு கூர்ந்த 
எனது தஞ்சை அன்பர் நண்பர் 
திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு வணக்கம். 


நலம். நலம் தானே.

தமிழ் உலகம் என்றென்றும் போற்றும் பாரதி தாசன் தமிழ் உள்ளவரை வாழ்வார் என சொல்லியது இன்று உலகெங்கிலும் எதிரொலிக்கிறது.

அவர் நினைவு நாள் அன்று அவர்தம் நினைவைப் போற்றும் வகையில் அவரது பாடல்களையும் அவரது மகன், பேரன்களுடன் தாங்கள் சந்தித்த விவரமும் தங்கள் பதிவிலே கண்டு மிகவும் மகிழ்ச்சி.

கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பாரதி தாசன் பேசி இருக்கிறார் என்ற செய்தியும் எனக்கு தஞ்சை வாசி என்ற முறையிலே மிக்க மன நிறைவு தந்தது.


என்றோ ஒரு கால கட்டத்தில், திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு பா எடுத்து அதற்கு ஆங்கிலத்தில் அதே கருத்தோட்டத்தில் "தித்திக்கும் முத்துக்கள் " என்று ஒரு நூல் வெளி வந்தது  அதற்கு என்னால் இயன்ற ஆங்கில மொழி பெயர்ப்பு செய்தமை குறித்து மகிழ்வுற்ற, எனது குடும்ப நண்பர் காலஞ்சென்ற திரு அரசிறைவன் அவர்கள் பாரதி தாசன் அவர்களின் குடும்ப விளக்கு எனும் பாடல் நூலினை பரிசாகத் தந்தார். அது வரை நான் பாரதி தாசனின் கவித்வத்தை உணர்ந்ததில்லை. அதை படித்து முடித்தபின்னோ, நான் பாரதிதாசன் புலமைக்கு தமிழகம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளது எனவும் உணர்ந்தேன்.

அந்த  நாள் முதல் இன்று வரை

பாரதி தாசனின் தமிழுக்கு யான் அடிமை என்றால் அது மிகை அல்ல.

அவர் செய்த பல தொண்டினிலே எனக்கு மிகச் சிறந்ததாகத் தெரிந்தது சமுதாய சீர்திருத்தம்.

 அதில் ஒரு அத்தியாயமாக, பெண் கல்வி

 பெண்கள் கல்வி எவ்வாறு முக்கியம் என்பதை அவரது குடும்ப விளக்கு எடுத்துக்காட்டுகிறது.  

அதில் இருந்து ஒரு பகுதி.

கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை
நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்!
(குடும்ப விளக்கு)
 முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழு மதி போல் அந்நாட்களில் கவிதை உலகில் பாரதி தாசன் கவிதைகள் பிறந்தன,. அவரின் சிறப்பினை இங்கும் பார்க்கவும்.


நீங்கள் குறிப்பிட்ட பாரதி தாசன் பாடல்களை இங்கே இணைத்துள்ளேன்.

நம்ம வீட்டு தெய்வம்.
எங்கு காணிலும் சக்தியடா.


ஓர் இரவு படத்தில் 
துன்பம் நேர்கையில் 
எம். எஸ். ராஜேஸ்வரி பாடியது. 

பஞ்சவர்ணக்கிளி படத்தில் சுசீலா பாடியது .
தமிழுக்கு அமுது என்று பேர். 


கலங்கரை விளக்கம் என்ற படத்திலோ சங்கே முழங்கு என்று உலகெலாம் தமிழ் சங்கை ஊதி பெருமைபடுபவர் பாடுபவர் சீர்காழி கோவிந்த ராசன் அவர்கள். 
பாரதி தாசனை நாம் இன்று நினைவு கூருவதை
 தமிழுக்கு நாம் குரல் கொடுக்கும் சங்காக கருதுவோம்.

நன்றி வணக்கம்.

சுப்பு தாத்தா.
என்னுடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ( எனது தாத்தா எனக்கு இட்ட பெயர்)

9 comments:

 1. குடும்ப விளக்கு படிச்சதில்லை தாத்தா.. ஆனா "தலைவாரி பூச்சூடி உன்னை, பாட சாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை" ன்னு அப்போதே பெண் கல்விக்கு குரல் குடுத்த மாமனிதர் ஆச்சே..

  ReplyDelete
 2. அன்புடையீர்..
  தங்களின் அன்புக்கு நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன்.

  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி தாங்கள் குறித்திருப்பவை அனைத்தும் உண்மையே!..

  சமுதாயம் மேன்மையுற அவர் பெண் கல்வியை முன்னிறுத்தினார்.

  அவரது நினைவு நாளில் - அவரை நன்றியுடன் நினைவு கூர்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

  தஞ்சையம்பதிக்கு வருகை தந்து - சிறப்பித்து இணைப்பும் வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 3. அன்புடையீர்..
  தங்களின் அன்புக்கு நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன்.

  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி தாங்கள் குறித்திருப்பவை அனைத்தும் உண்மையே!..

  சமுதாயம் மேன்மையுற அவர் பெண் கல்வியை முன்னிறுத்தினார்.

  அவரது நினைவு நாளில் - அவரை நன்றியுடன் நினைவு கூர்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

  தஞ்சையம்பதிக்கு வருகை தந்து - சிறப்பித்து இணைப்பும் வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete

 4. பாவேந்தர் பாரதிதாசன் இறப்பு ஏப்ரல் 21-ம் தேதி. Bharathithasan இறப்பு ஏப்ரல் 1-ம் தேதி. என் பார்வையில் கோளாறா....?

  ReplyDelete
 5. இதில் எந்த பாடல் சிறப்பானது என்று சொல்வது கடினம் ஐயா...

  எனது அடுத்த வலைத்தளத்தில் ம்ப்3 இணைக்கும் பதிவு உங்களுக்கு மிகவும் உதவும்... விரைவில் வெளியிடுகிறேன்...

  ReplyDelete
 6. பாவேந்தர் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து, பாடல்களையும் சுட்டிப் பகிர்ந்ததற்கு நன்றி தாத்தா. வாழ்க அவர் புகழ்..பெண் கல்வி இன்னும் முழுமையடையட்டும்.

  ReplyDelete
 7. தமிழ் உலகம் என்றென்றும் போற்றும் பாரதி தாசன் தமிழ் உள்ளவரை வாழ்வார்

  ReplyDelete
 8. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 9. அருமையான பதிவு. பாடல்களை ஒவ்வொன்றாய் கேட்கிறேன்...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி