Pages

Saturday, March 12, 2011

தாயே நான் அஞ்சேன்


அழகான வெண்பா ஒன்று வலை நண்பர் திகழ் அவர்களால் எழுதப்பெற்று இருக்கிறது.

உலகத்து எல்லா உயிர்கட்கும் அவரவர் வினைப்பயனுக்கேற்ப இன்ப துன்பங்கள் விளையத்தான் செய்கின்றன. இன்பம் வரும்போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்குவது மாந்தரின் இயல்பு. அதுபோல் துன்பம் வரும்போது தொய்ந்து போவதும் இயல்பே.

இருப்பினும், துன்பங்களைக் கண்டு நான் அஞ்சேன் எனக் கூறும் கவிஞர் திகழ் அவர்கள் தனக்கு உறு துணையாக உலகத்து அன்னை இருக்கிறாள் என உணர்கிறார்.  எவ்விடத்திலும் எக்காலத்திலும் உலகத்தின் அன்னை தாயே இருக்கையில் தான் எதற்கு அஞ்சவேண்டும் என நினைந்து அஞ்சேன் என
கூறுகிறார்.

பக்தியின் அடித்தளம் இறையின் பால் கொண்ட உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் மனம் இறுகிச் செல்கையில் மாந்தர் எதைக் கண்டு அஞ்சுவார் !!
 வெண்பா படிக்க இங்கே செல்க.

சுப்பு தாத்தா பாடுவது செஞ்சுருட்டி என்னும் ராகத்திலே.

திகழ் அவர்கள் தனது இன்னொரு வெண்பாவிலே இறைவனைத் துதிக்கத் துதிக்க நாம் செய்த பாவம் எல்லாம் தீருமெனச சொல்கிறார். 
நாம் படும் இன்ப துன்பங்கள் யாவுமே நம் வினைப்பயன் என்ற மன நிலை கொண்டபின் இறைவனைத் துதித்தால் செய்த வினை மறைந்து போமோ என்று நினைக்கவும் தோன்றும்.

செய்த வினை இருக்க தைவத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியும் ?  என்பார் அவ்வை பிராட்டி.


இருப்பினும் அந்த இறைவன் கருணையின் கடல். அந்த கடல் அலைகளின் சுழற்சியில் நாம் அமிழ்ந்து போகையிலே நமது துன்பங்களை மறக்கவும் இயலும். அதன் தாக்குதல் இருந்து ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ளவும் முடியும் போல்தான் தோன்றுகிறது.

இதோ திகழ் எழுதிய இன்னொரு கவிதை. 
அதை சுப்பு தாத்தா தேஷ் ராகத்தில் பாடுகிறார்.


4 comments:

  1. வெண்பாவை விட தங்களின் விளக்கம் அருமை அய்யா

    எழுதும் பொழுது அடைந்த‌ மகிழ்வை விட தங்களின் குரலில் கேட்டுக்கும் போது இன்னும் அதிகமாக இருக்கிறது அய்யா

    அன்புடன்
    தமிழுடன்
    திகழ்

    ReplyDelete
  2. /எவ்விடத்திலும் எக்காலத்திலும் உலகத்தின் அன்னை தாயே இருக்கையில் தான் எதற்கு அஞ்சவேண்டும்/

    உண்மை அய்யா

    /இறைவனைத் துதிக்கத் துதிக்க நாம் செய்த பாவம் எல்லாம் தீருமெ/

    /அந்த கடல் அலைகளின் சுழற்சியில் நாம் அமிழ்ந்து போகையிலே நமது துன்பங்களை மறக்கவும் இயலும். அதன் தாக்குதல் இருந்து ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ளவும் முடியும் போல்தான் தோன்றுகிறது/

    நிசமாக அப்படித் தான் உணரகிறது உள்ளம் ஒவ்வொரு நொடியும்

    ReplyDelete
  3. சுப்பு ஐயாவுக்கும் திகழ் அவர்களுக்கும் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  4. திகழுடைய வெண்பாக்களை பாடியதோடு மட்டுமின்றி அழகான விளக்கங்களுடன் தந்தமைக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி