அன்பு நண்பர் திரு திகழ் அவர்கள் வலைப்பதிவில் அழகான வெண்பா ஓன்று, சிவனைத் துதித்து " நான் பணிவேன் நயந்து " என்று வினயத்துடன் எழுதியதைக் கண்டு வியந்தேன். வடமொழியிலே ஒரு பழ மொழி உண்டு.
(vidhya dhadathi vinayam )
கல்வி அடக்கத்தைத் தரும் என. அது சொல்வது போல, கற்கக் கற்க, இன்னமும் நாம் கற்க வேண்டியதெல்லாம் உலகளவு உள்ளது என மறவாது இருப்பதும் அடக்கமே. அந்த அடக்கத்தின் கருவே ஆண்டவனின் நினைவு, துதி எல்லாமே.
திகழ் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். நன்றி.
சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த இந்த வெண்பா இங்கே உள்ளது.
சுப்பு தாத்தா இப்பாடலை யதுகுல காம்போதி என்னும் ராகத்தில் பாடுகிறார்.
இன்னொரு துதி திரு சிவகுமாரன் அவர்கள் வலையிலே உள்ளது. ஓம் நமோ நாராயண என்னும் பாடல். திரு சிவகுமாரன் அவர்கள் நெஞ்சம் ஒரு கவிதை ஊற்று. இவர்தம் கவிதையிலே வருகின்ற சொற்கள் யாவுமே எனக்கு மாமல்லபுரத்து சிற்பங்களாகத் தோற்றம் அளிக்கின்றன.
அவர் எழுதிய பாடலை நான் ஹிந்தோளம் எனும் ராகத்தில் பாட எத்தனிப்பதை அவரது வலையில் காணலாம். கேட்கலாம்.
வெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்களால் எழுதப் பட்ட வெண்பா இது அய்யா. தங்களின் குரலில் இராகத்தில் கேட்க இனிமையாக இருக்கிறது அய்யா.
ReplyDeleteநன்றி அய்யா