அன்பின் வழியது உயிர் நிலை
அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு
என்னும் வள்ளுவப்பெருந்தகையின் குரலை 25 ம் தேதியன்று கிறிஸ்துமஸ் திருவிழா அன்று மேற்கோள் காட்டி எழுதுவோம் என்றிருந்த என் கண்களில் பட்டது:
மூன்று செய்திகள். முத்தான கருத்துக்கள்.
மூவுலகக்கிற்கும் பொதுவான கருத்துக்கள்.
முனைப்புடன் படியுங்கள்.
முன்னிருந்து செய்லபடுங்கள்.
நன்றி: கல்கி வார இதழ்.
பால் தினகரன் அவர்கள் .
"......அன்பின் மூலம் அனைத்தையும் அடையும் சாத்தியம் உண்டு என்பதை நம்புங்கள் ......"
" .....தேவன் ஒருவனே. ...."
"......இறைவன் மீதான் வைராக்கியமான் பயபக்தி, நமது பிரார்த்தனையில் நேர்மையும், உண்மையும் இருந்தால் இறைவன் செவி கொடுப்பார். .......அகம்பாவம் தவிர்......உன் மூலமாக தேவன் இதைச் சாதித்தார் என்று உணர். ....."
".......இந்தியாவைக் காப்பாற்றியது கூட இந்திய மக்களின் இறைபக்தி தான். அது கிறிஸ்துவாக இருக்கட்டும், கிருஷ்ணனாக இருக்கட்டும், இந்த இறை பக்தி, பயபக்திதான், நம்மை உலக நாடுகளுக்கான கருணை தரும் நாடாக மாற்றும். அனைத்துக்குமான அரிய மருந்து பிரார்த்தனை தான்."
" .....அகந்தை அழித்து அன்பைக்கூட்டி, விட்டுகொடுக்கும் பண்பை
வளர்த்துக்கொள்ளவேண்டும். இது நம் நாட்டின் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் நல்லது.."
*************************************************************************************அருள் வாக்கு: ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
சங்கராச்சாரியார் ஸ்வாமிகள்.
"... நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால்,
பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்..."
".....கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி, ஈஸ்வர அனுக்ரஹத்தை, நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவே ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால், அது தானே விரிந்து ஜலத்தை இழுத்துக்கொள்கிறது. துணியை வெளியே
இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது. கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி
இலேசாகத் துணி மாதிரி ஆக்கிக்கொண்டால், எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற ( ஈஸ்வர ) அனுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக்கொள்ளலாம். "
********************************************************************************திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் தமிழ் வலை உலகில் ஒரு தனித்துவம் uniqueness
கொண்டவர். அவரது கவிதை ஒன்றை படிக்கும் வாய்ப்பு இன்று காலை கிடைத்தது.
அது இதுவே:
http://tamilamudam.blogspot.com/2010/12/blog-post_22.html
“கருணை வைத்து உன்னோடு நீ
இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்
அனுசரணையாய் அளவளாவ
ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்
இருந்து பார் பேசிப் பார்
கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்
காட்டித் தரும் அதுவே
ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
உன்னை உனக்கு அடையாளம்
அந்நொடி கசியத் தொடங்கும்
சிறுதுளியன்பு போதும்
பெருவெள்ளப் பிரவாகமாகி
பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க "
********************************************************************
அன்புச்செய்தி வேறென்ன வேண்டும் !!
கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
இதோ கிருஸ்துமஸ் மரம். அலங்கரித்து மகிழுங்கள்.
எல்லோருக்கும் சுப்பு தாத்தாவின் வாழ்த்துக்கள்.
இதோ கிருஸ்துமஸ் மரம். அலங்கரித்து மகிழுங்கள்.
எல்லோருக்கும் சுப்பு தாத்தாவின் வாழ்த்துக்கள்.
எல்லோரும் எல்லாம் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.
ஆண்டவனை பிரார்த்திப்போம்.
http://llerrah.com/decoratetree.htm
"அண்டம் நிறைத்தது
ReplyDeleteவாழ்வின் அனுபவம்
புல்லாங்குழல் துளைவழிக் காற்றாய்"
அதே கவிதையின் அடுத்த சில வரிகள்.
வாழ்வின் அனுபவம் பேசியிருக்கிறது இப்பதிவில். வணங்குகிறேன்.
முதலிரண்டு பகிர்வுக்கும் என் நன்றிகள்.
மூன்று அன்புச் செய்திகளும் அருமை.
ReplyDeleteமனித இன நல் வாழ்விற்கெனவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயேசுநாதர் சொன்ன மாதிரி அன்பும்,கருணையுமாய் வாழ்வோம்.
நானும் உங்களுடன் சேர்ந்து சொல்லிக் கொள்கிறேன், கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்களை வலை உலக அன்பர்களுக்கு.