முழுமுதற் கடவுளாம் விநாயகப்பெருமானை துதிக்காத பண்டைய தமிழ்ப் புலவர்கள் இல்லை எனச் சொன்னால் மிகையாகுமோ? . மனித வாழ்விலே ஏற்படும் இன்னல்கள், இடையூறுகள் எல்லாவற்றையும் களைந்து நம் வினைப்பயன்கள் அறுத்து நம் யாவரையும் உய்வித்து நல்வழிப்படுத்தும் விநாயகன், கணபதி, பிள்ளையார் எனப் பலவிதமாக பெயர் சூடிக்கொண்டு ஒவ்வொரு தெருக்கோடியிலும் அமர்ந்து ஆட்சி புரியும் யானை முகத்தோனை புகழ் பாடும் தமிழ் பாடல்களைக் காண்க. யானை முகத்தோனுக்கு பேழை வயிரனுக்கு தமிழில் அர்ச்சனை ( வழிபாடு ) இப்பதிவின் இறுதியில் காண்க. விநாயகனை வீர கணபதியை விநாயக சதுர்த்தி அன்று இருபத்தி ஆறு வகை பூக்களாலும் இலைகளாலும் பூசிக்கலாம்.
தல புராணம்
எழுத்தும் சொல்லும் பொருளும் இணக்குற
வழுத்துஞ் சீர்செயந்திப்பதி மானியம்
விழுந்தகு ந்தமிழாற் சொல் வேதமே
பழுத்த குஞ்சரன் பாதங்கள் போற்றுவோம்.
முருகன் அடியார்:
தும்பி முகத்தோனே ! துணையாய் வந்தெனக்குத்
தம்பியின் புகழதுவே தளர்வின்ட்றிப்பாடிடவே
நம்பியேன் பணிந்திட்டேன் ! நலமாக அருள் தந்து
வம்பெதும் வாராது வழியளித்துக் காத்திடுவாய் !!
காணாபத்யம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து போற்றுகின்றேனே ... திருமூலர்.
வாரணத்தனை அயனை விண்ணோரை மலர்க்கரத்து
மகத்துவென் றேன்மைந்தனைத்துவஜ
த்துணை நயந்தானை வயல் அருணை
த்திறை கொண்ட யானையை வாழ்த்துவனே ... கந்தரந்தாதி.
கந்தர் அனுபூதி
நெஞ்சக்கனகல்லு நெகிந்துருகத்
தஞ்சத்தருள்ஷண்முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம். ....
புண்ணியம் கோடி வரும் பொய்வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கைகூடும் ஏற்ற துணை நண்ணிடவே
வாழ்வில் வளர் ஒளியாம் வள்ளல் வி நாயகனை
நாளெல்லாம் வாழ்த்திடுவோம் நன்று .. பெருந்தேவனார்.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே ... திருமூலர்
வானுலகும் மண்ணுலகும் வாழ்மறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞான மத ஐந்துகர மூன்று விழி நால்வாய்
ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம். ...சேக்கிழார் புராணம்
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம் . ...விருத்தாசல புராணம்.
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ
சித்தியானை தன் செய்ய பொற்பாதமே ... திருவிளையாடற் புராணம்.
வி நாயகரைப் பூசிக்க உரிய பத்திர புஷ்பங்கள்.
மேற்கு மாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை
வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி
யேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி
யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி
மாதுளையே உயர்தேவதாரும் அரு நெல்லி
மன்னு சிறு சண்பகமே கெந்தளி பாதரியே
ஓதரி யவ நுகு இவையோர் இருபத்தொன்று
முயர்வி நாயக சதுர்த்திக் குரைத்த திருபத்திரமே.
Very good article.Thanks.
ReplyDeleteஅப்படிப்போடுங்க! பிள்ளையார் மும்பையிலேந்து வந்தவர் என்கிற பேர்கள் கொஞ்சம் படிக்கட்டும்!
ReplyDelete