Pages

Monday, May 31, 2010

பெருவெளியில் நடனம் பிரணவ நாதம்.... திருமூலர் பாடல்



"ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ? என்பது திருமூலர் வாக்கு."
என்கிறார் தமிழ் உலக ஆன்மீகப் பதிவாளர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் 
Courtesy:
:Aanmika Payanam

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.


ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.



அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே

சுப்பு தாத்தா திருமூலர் பாடல்களை ஆரபி ராகத்தில் பாடுகிறார்.

Saturday, May 08, 2010

இந்த அற்புதமான கண்ணதாசன் பாடலை நமக்கு வழங்கிய வாத்தியார் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை!!


 ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
..... அணியாரம் இட்ட பெருமான்
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
..... ஆதாரமான பெருமான்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
....... மெய்யான வந்த பெருமான்
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி
...... விளைவாக நின்ற பெருமான்
கோலாலம் பூரில்வளர் கோதண்ட பாணிஇவன்
....... கோவில் கொண்டாடு மனமே
கூற்றேதும் வாராது கொடு நோயும் சேராது
....... குறையாத வாழ்வு மிகுமே!

“ஓம்” என்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு
....... உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மனமுண்டு
........உன்வாழ்வு கந்தன் வசமே
நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
....... நடக்காது வேலனிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன்உள்ளம்
....... நலம் யாவும் வீடுவருமே
கோமன்னன் வாழ்கின்ற கோலாலம் பூர்செந்தூர்
........கொடிகட்டி ஆளவிடுமே
கொண்டாடு கொண்டாடு தெண்டாயுதத்தானைக்
........குறையாத செல்வம் மிகுமே!
------- கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் மலேசிய மண்ணில் கோலாலம்பூரில் உறையும் குமரக்கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தபோது எழுதிக்கொடுத்த பாடல் இது!

எதுகை மோணை சந்தத்துடன் பாடல் அருமையாக இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
(இங்கே கிளிக்கிடுங்கள். )

இந்த அற்புதமான கண்ணதாசன் பாடலை நமக்கு வழங்கிய வாத்தியார் SP.VR. சுப்பையா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
அவருடைய அருமையான சோதிட பதிவு இங்கே இருக்கிறது என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் தினமும் அப்பதிவை படிக்கிறார்கள்.

இதோ ! முருகன் கோவில் தைப்பூசத்திருவிழா ...

batu malai murugan temple kulalumpur adi kiruthikai vilza festivel coverage



முருகன் கோவில் வைபவம்.


வெற்றி வேல் முருகனுக்கு அரோஹர
வேல் வேல் வெற்றி வேல்
















Friday, May 07, 2010

இன்று அம்மாக்கள் தினம்.

இன்று  அம்மாக்கள்  தினம்.
புவியில் பிறக்கும் எல்லோரும்
சொல்லும் முதற் சொல் அம்மாவே .

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது அவ்வையின் குரல். 

அம்மா அப்பா  இவர் எனக்காட்ட , அப்பா ஆசிரியரை காட்ட, ஆசிரியர் தெய்வம் எது என்ன தெளிவிக்கிறார்.    தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை .

 அம்மாவை இன்று வணங்குவோம். என்றும் போற்றுவோம்.
 அந்த அம்மா எனும் சொல்லுக்கு பொருள் என்னவென
அகராதியை புரட்டிப  பார்த்தேன் . அம்மா என்றால் அன்பு ஆனந்தம்
அம்மா என்றால் இனிமை
அம்மா என்றால் எல்லாமே ஈயும் வள்ளல்
அம்மா என்றால் உழைப்பிலே உவகை காணும் பண்பு
அம்மா என்றால் என்றும் எனக்கு ஊக்கம் தந்த உயிர்.
அம்மா என்றால் அவள் ஒப்பிலா சொந்தம்.
அம்மா என்றால் அவள் ஓய்வில்லாது எனக்காக உழைத்த  பந்தம்.
அம்மா என்றால் வையம் புகழும் அன்னை பராசக்தி.
அகராதி இனி தேவை இல்லை.
அம்மாவே எனக்கு எல்லாம்.