Pages

Tuesday, December 29, 2009

இறைவா ! ஆர் யூ ஹியரிங் !!


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் = எங்கள்
இறைவா ! இறைவா !! இறைவா !!

என உற்சாகக்குரல் கொடுப்பார் பாரதி.

மேலும் பாடுவார்:

சித்தினை அசித்துடன் இணைத்தாய் = அங்கு
சேரும் ஐம் பூதத்து வியனுலகு சமைத்தாய்.
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பல பல நல் லழகுகள் சமைத்தாய்.

ஆகா ! உலகே வண்ணக்களஞ்சியமாய்ப் பரிணமிக்கிறதே 1 எனக் குதூகலிப்பார் பாரதி.

பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா = நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையா... நந்தலாலா..

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா = நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா ...

என உலகை ஒரு வண்ணப்பூங்காவிலே இசையின் சிகரமாகக் காண்பான் பாரதி.

பாரதி தன் வாழ் நாளில் படாத துன்பம் இல்லை. இருப்பினும் துன்பத்தை துன்பமாக நினையாது தன் வாழ்க்கைக்கு அதில் இன்பம் சுரக்கும் ஊற்றுக்களைத் தேடித் தன் மனம் நிறைவு கண்டான்.

வள்ளுவர் தெளிவாகச் சொல்வார்:

இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்,
துன்பம் உறுதல் இலன்.

இன்பமும் துன்பமும் இயல்பே எனும் மன நிலை கொண்டவன் துன்பமடைய மாட்டான் எனும் கருத்தை வள்ளுவர் சுட்டிக்காட்டுவதை கவனிக்க.

இன்பமும் துன்பமும் நமது நோக்கைப் பொறுத்ததே. மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் பகலிரவு போன்றல்லவா உள்ளது.

இரவு வரும். இருப்பினும் இரவு போய் பகலவன் உதிக்கத்தான் செய்வான்.

நிற்க.

பல்வேறு இன்ப துன்பங்களுக்கிடையே வருடா வருடம் வருவது தவறாது வருவது புத்தாண்டு தினம். அது இன்று.

உலகெங்கும் மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, பரிசுகளை அனுப்பி,
மன மகிழ்வர்.

அன்றாட வாழ்க்கையில் தாம் படும் அல்லல்களுக்கிடையேயும் ஒரு நாள், ஒரு கண நேரம் மாந்தரெல்லாம் மகிழ்ச்சி அலைகளில் நீந்துவது மன நிறைவைத் தருகின்றது.

எல்லா இனத்தவர்க்கும், எல்லா மதத்தோருக்கும், எல்லா நாட்டினர்க்கும் பொதுவான ஒரு சொல்
உண்டு என்றால் அது ஹாப்பி ந்யூ இயர்.

இயர் என்றால் வருடம். ஹியர் என்றால் கேள்.

இந்த இயர் எப்போதுமே ஹாப்பி ஆகவே இருக்க, இறைவா ! நாங்கள் உன்னை வேண்டுகிறோம்.


எல்லோரும் புத்தாண்டு தினத்தில் ஒரு உறுதி எடுத்துக்கொள்வார்கள்.
சிலர் இன்ன இன்ன வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள்.

உலகம் அனைத்துமே வளமுற்று, சிறப்புற்று செழிக்கவேண்டும் உலகத்தார் யாவருமே அன்பு மழையில் திளைக்கவேண்டும் என வேண்டுபவரில் மேடம் கவி நயா அவர்களும் இருக்கிறார்கள்.

அவரது சூப்பர் பாடல் ஒன்று இங்கே !!!

அவர்கள் வலையில் இட்டதை, என்னால் இயன்றவரை ஹம்ஸ்த்வனி ராகத்தில் பாட முயன்றிருக்கிறேன்.

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்.



இறைவா ! ஆர் யூ ஹியரிங் !! ???




8 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. முன்பு பாடல் படித்தேன்.
    இப்பொழுது பாடல் கேட்டேன்.
    ஹ்ம்ஸத்வனி என்னை ஆட்கொண்டது.
    இசைப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே பின்புலமாய் பொருத்தமான படங்களையும் பார்த்தேன்.
    மொத்தத்தில் மனசு லேசாகியது; அதனால் மகிழ்ச்சி கூடியது.
    இத்தனைக்கும் காரணமான உங்களுக்கு நன்றி.
    எங்களது அன்பானஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வருகைக்கு நன்றி. நானும் தங்கள் பதிவுக்குச் சென்று மதுரைக்கோவிலைக்கண்டு உளம்
    மகிழ்ந்தேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. ஜீவி அவர்கட்கு,
    தங்கள் வருகைக்கு நன்றி.
    இது ஒரு கோ இன்ஸிடென்ஸா என்று தெரியவில்லை. அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
    இன்று அதிகாலை எழுந்த உடனேயே ஏனோ உங்கள் நினைவு வந்தது. இன்று உங்கள் பதிவுக்கு செல்லவேண்டும் என‌
    நினைத்துக் கொண்டேன். இப்பொழுதெல்லாம் உடல் அசதியோ மனத் தளர்வோ என்னவோஅடிக்கடி நண்பர்கள்
    பதிவுகளுக்குச் செல்ல இயல்வதில்லை.
    இப்பொழுது கம்ப்யூடரை ஆன் செய்கிறேன். உங்கள் பின்னூட்டம் கண்ணுக்கு நேரே மலர்ந்து காணப்படுகிறது.
    நன்றி பல.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. பாடலைக் கேட்டுட்டேன் தாத்தா. ஜீவி ஐயா சொன்னது போல படங்களும் சிறப்பாக இருந்தன. நீங்களும் ஹம்சத்வனியும் இந்த பாடலுக்கு த்ந்திருக்கும் தொனி அருமை! மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நீங்கள் என்னை நினைத்துக் கொண்ட நேரத்திற்கு கொஞ்சம் முன்னால், உங்களுக்குத் தெரிந்த அறிமுகமான இன்னொருவருடன் நான் உங்களை நினைத்தும், கவிநயாவின் இந்தப் பாடலை இராகமமைத்துப் பாடியிருப்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தேன் என்பது தான் இன்னொரு ஆச்சரியம்!

    ரொம்பவும் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். வேண்டிய நேரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

    அன்புக்கு நன்றி, ஐயா!

    ReplyDelete
  7. ஜீ.வி.அய்யா, ஹம்ஸத்வனி ராகம், கவிநயாவின் பாடல் சூரி அய்யாவின் இந்த பதிவு எல்லாமும் தேனில் தோய்த்த பலாவை சுவைத்தது போலிருந்தது....

    உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  8. திரு கோபி அவர்கள் வருகைக்கும்
    பின்னூட்டத்திற்கும் நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி